Friday, October 9, 2009

பயத்தை மறைக்க நினைப்பவன் ......! ராஜபக்சே


ஒரு முதியவர் தெரிவித்த திடமான கருத்து

"பயத்தை மறைக்க நினைப்பவன் நடுராத்திரியில் காட்டுவழியில் பாட்டு பாடிக்கொண்டே

செல்வதுபோலத்தான் இருக்கிறது ராஜபக்சே அரசின் நடவடிக்கைகள்''

என்கிறார் அந்த ஈழத்தமிழர்.

கொழும்பில் வாழ்ந்து ஈழத்தில் உள்ள அரசாங்க வதை முகாம்களுக்குச் சென்று, அங்கு தமிழர்கள் படும்பாட்டை சகிக்க முடியாமல் வெளியே வந்து, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனது பயோ-டேட்டாவைத் தவிர்த்துவிட்டு நம்மிடம் விரிவாகப் பேசினார்.

"தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்த அளவுகூட முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இலங்கையின் தற்போதைய நிலவரம் பற்றித் தெரியாது. அந்தளவுக்கு முடக்கப்பட்டிருக்கிறார்கள். நக்கீரனில் வெளியாகும் தகவல்களை உறவினர்கள் மூலமா போன் வழியா தெரிஞ்சுக்குறாங்க. அதுதான் இப்ப அவர்களுக்கு ஒரே ஆறுதலும் நம்பிக்கையுமாகும். கொழும்பிலிருந்து புறப்பட்டால் செட்டிகுளம் தொடங்கி, வவுனியா வரைக்கும் முகாம்கள்தான்.

இதில் செட்டிகுளம் கதிர்காமர் முகாம் மட்டும்தான் சுத்தமாகவும் வசதியாகவும் இருக்கு. அதைத்தான் ஐ.நா. அதிகாரிகளுக்கும் இந்தியப் பத்திரிகையாளர்களுக்கும் காட்டி ஏமாத்திக்கிட்டிருக்காங்க.

எப்படியாவது சொந்த இடத்துக்குப் போகணும்ங்கிறது தான் முகாம்களில் இருக்கிற மக்களோட விருப்பம். சாப்பாடு, தண்ணீர், துணிமணி எதுவும் கிடைக்கிறதில்லை. நீர்கொழும்பு பகுதியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் பகுதியிலிருந்து வந்த தமிழக மீனவர்கள் அதிகம். அவங்க நடத்தி வந்த 50 தமிழ்ப்பள்ளிக்கூடங்களை மூடியாச்சு. குடப்பாடுல உள்ள விஜயரத்னா பள்ளிக்கூடத்துல சிங்களம் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க. தமிழர்கள் பேசிக்கொள்ளும்போதும் சிங்களத்தில தான் பேச வேண்டிய நிலைமை. ராணுவத்துக்கிட்டேயிருந்து தப்பிக்கணுமே...

ஆர்மிக்காரங்களோ விசாரணைங்கிற பேரில் இளசுகளைப் பிடிச்சிட்டுப் போறாங்க. உறவினர்களைப் பார்க்கணும்னு நான் முகாம்களுக்குப் போனப்பவும் இதே நிலைமைதான். இரண்டு நாள் கழிச்சி அந்த இளைஞர்கள் காட்டுப்பகுதியில் கை, கால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தாங்க. அதே நேரத்தில், வவுனியா காட்டுப் பகுதிக்குப் போயிட்டுத் திரும்பும் ஆர்மி வாகனத்தில் 10, 15 ஆர்மிக்காரன் பொணமா வருவதையும் பார்த்தேன். எல்லாம் பொடியன்களின் (புலிகள்) அட்டாக்தான்.

யூலை 13-ந் தேதி, காட்டுப் பகுதியில் பொடியன்கள் இருக்காங்களான்னு கண்காணிக்கும் ஆர்மிக்காரங்களுக்கு 3 லோரியில் உணவுப் பொருள் போனது. இதை தெரிஞ்சுக்கிட்ட புலிகள் 10 பேர் ஜெயபுரம்-முல்லைத்தீவுக்கு இடையில் உள்ள காட்டுப்பகுதியில் லோரிகளை வழிமறிச்சு, அதிலிருந்த ஆர்மிக்காரங்களை கொன்னுபோட்டு , உணவுப் பொருளோடு அந்த லாரிகளை காட்டுக்குள்ளே கொண்டு போயிட்டாங்க. இந்தக் கோபத்திலேதான் முகாமில் இருந்த 40 இளைஞர்களை இழுத்துக்கிட்டுப் போயி, காட்டிலே வெட்டிப் போட்டான்கள் ஆர்மிக்காரன்கள்.

காட்டுப் பகுதியில் புது விதமான பயிற்சிகளோடு ஆயத்தமாகிவிட்ட புலிகள், இலங்கையின் முக்கிய நகரங்களை குறிவச்சுத் தாக்கத் திட்டமிட்டிருக்காங்க. முக்கியமான அரசு அலுவலகங்களும் தாக்கப்படும். புலிகளின் தாக்குதல் தீவிரமானால் அப்பாவித் தமிழர்களை ராஜபக்சே அரசாங்கம் சித்திரவதை செய்யும். அதனால கொழும்பு, நீர்கொழும்பு பகுதியில் உள்ள தமிழர்கள் யாழ்ப்பாணம், திரிகோணமலை பகுதிக்கு கொஞ்சம் கொஞ்சமா இடம்பெயர ஆரம்பிச்சிட்டாங்க. இதுவும் இயக்கத்தோட மறைமுக உத்தரவுதான்.

புலிகள் ஒரு பாரிய அளவிலான தாக்குதலை நடத்தப்போறாங்கன்னு ராஜபக்சே அரசாங்கத்துக்கும் தெரிந்திருக்கு. அதனாலதான் ஆர்மிக்கு ஆள் சேர்க்கிறார். ராணுவப் பயிற்சிக்கு இந்தியாவின் உதவியைக் கேட்டிருக்கிறார். வன்னிப் பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றுவதுங்கிற பேரில் இந்திய ராணுவத்தை அழைத்து, காட்டில் புதிய வியூகத்தோடு செயல்படும் புலிகளை அழிப்பதுதான் ராஜபக்சேவின் திட்டம். அதோடு, சொந்த மண்ணுக்கு எப்போது போவோம்ங்கிற ஏக்கத்தோடு முகாமில் இருக்கும் தமிழர்களை கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபடுத்தவும் திட்டம் போடப்பட்டிருக்கு.

சொந்த மண்ணில் குடியிருக்கலாம்ங்கிற ஆசையோடு வரும் தமிழர்களை கண்ணிவெடிகளில்

சிக்க வைத்து கொன்று குவிக்கும் கொடூரத் திட்டமும் போடப் பட்டிருக்கு.

முகாம்களில் மூன்றரை லட்சம் தமிழர்கள் இருக்கும் போது, 40 ஆயிரம் பேர்தான் இருக்காங்கன்னு ராஜபக்சே சொல்லி இருக்கிறார். மற்றவங்களை கண்ணி வெடியில் கொன்னுடலாம்ங்கிற கணக்கோடுதான் அவர் இப்படி சொல்கிறார். இதெல்லாம் உலக நாடுகளுக்கும் தெரிந்திருக்கு. ராஜபக்சேவின் கொடூரத் திட்டங்களை பிரபாகரன் நொறுக்கிவிடுவார்னும் தெரியும். அதனாலதான் தன் நாட்டு மக்கள் யாரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம்னு அமெரிக்கா எச்சரித்திருக்கு.

கண்ணி வெடி மூலமாகவும் முகாம்களில் உள்ள இளைஞர்களை கடத்திச் சென்றும் தமிழினத்தை அழிக்கும் அடுத்த திட்டத்தை ராஜபக்சே அரசாங்கம் தயார் பண்ணியிருக்கு. சிங்களன் இனி என்ன திட்டம் போட்டாலும் புலிகள் தரப் போகும் அடியைத் தாங்குவது கஷ்டம்தான். உலகத்தாரே... பார்க்கத்தான் போறீர்கள்'' என்றார் அந்த தமிழர்.

கொழும்பிலிருந்து எழில்

இந்த செய்திக்கும் ஈழதேசம்.கொம் இணையத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.

இது ஒரு முதியவரின் தனிப்பட்ட கருத்தும் அவருடைய திடமான கருத்தும் ஆகும்
Thanks:to email sent by :balkicpcl@yahoo.com

ஈழம்: சிங்கள இராணுவத்தின் பயங்கரவாத நினைவுகள்!!


ஈழத்தமிழர்கள் மீதான அடக்குமுறை என்பது அரசியல், கல்வி, பொருளாதாரம், ராணுவம் என்ற வடிவங்களில்தான் காலங்காலமாய் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. கல்வி மற்றும் பொருளாதார அடக்குமுறை பற்றி என் அனுபவங்கள் மூலம் ஓரளவு சொல்லியிருக்கிறேன். எல்லா அடக்குமுறைகளையும் விட ராணுவ அடக்குமுறை தான் எங்களை நேரடியாகவே பாதிக்கிற என்பதை விட பலி எடுக்கிற அடக்குமுறை வடிவம் என்று சொன்னால் அது மிகையில்லை. ராணுவம் என்பதற்கு ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் வெவ்வேறு அர்த்தங்கள் இருக்குமா?

அதாவது மக்களை ஓர் ஆபத்திலிருந்து காப்பாற்றும் ராணுவம், நாட்டிற்காக போரிடும் ராணுவம், அமைதிப்படை…. இப்படியாக. ஆனால், இலங்கையில் மட்டும் தமிழினத்தை அழிக்கவென்றே சிங்கள ராணுவத்தை கட்டியெழுப்பி வைத்திருக்கிறார்கள். இன்று இலங்கையில் நாட்டின் சனத்தொகைக்கும் ராணுவத்தின் விகிதத்திற்கும் சம்பந்தமில்லாத வகையில் மிக அதிகமாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா கன்வென்ஷனையும் மீறினாலும், அதையெல்லாம் தாண்டி சிங்கள ராணுவம் விமரிசனத்திற்கு கூட அப்பாற்பட்ட புனிதர்கள் என்கிறார் இலங்கை அதிபர். இலங்கை ஓர் ஜனநாயக சோசலிச குடியரசு என்று சொல்கிறார்கள்.

ஏன் இப்படியொரு ராணுவ கட்டமைப்பு? இலங்கையில் நடப்பது ஜனநாயக ஆட்சியா அல்லது ராணுவ ஆட்சியா என்ற கேள்வி என் மனதில் அடிக்கடி எழுவதுண்டு. இன்று மனித உரிமைகள், தாராண்மை ஜனநாயகம் என்று பேசப்படுகின்ற காலத்திலும் ராணுவ அடக்குமுறையால் வாழ்வுரிமை கூடப்பறிக்கப்படுகிற இனங்களில் ஈழத்தமிழினமும் ஒன்றாகிவிட்டது. ராணுவம், இதன் அர்த்தம் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் சரியாகப் புரியும் என்பது என் அனுபவங்களினூடாக நான் கண்டறிந்த உண்மை.

நான் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் கூட எனக்கு இலங்கை ராணுவம் பற்றிய பயம் என் மனதிலிருந்து இன்னும் போகவில்லை. இந்நாட்களில் ராணுவ சீருடை போன்ற ஆடைகளை யாராவது அணித்திருப்பவர்களை பார்த்தாலும் எனக்கு ஒரு கணம் என் மூச்சு நின்றுவிடும் போலிருக்கும். மறுகணம் நான் இலங்கையில் இல்லை என்பதையும், நான் பார்க்கும் அந்த உருவம் இலங்கை/இந்திய ராணுவம் இல்லை என்பதையும் எனக்கு நானே மனதிற்குள் சொல்லி தேற்றிக்கொள்வேன்.

ஈழத்தில் ராணுவத்தை நான் நேரில் சந்தித்த நேரங்களிலெல்லாம் என் இதயத்துடிப்பே எனக்கு இடி போல கேட்கும். அப்படியொரு பயம் எனக்கு ராணுவத்திடம். தன்னை ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் இலங்கையில் ராணுவம் பற்றிய என் நினைவுகள் ஒப்பரேஷன் லிபரேஷன் (Operation Liberation) இற்கு முற்பட்ட காலங்கள் முதற்கொண்டு இந்திய அமைதி காக்கும் படை (மன்னிக்கவும் எங்கள் அமைதியை அழித்த ராணுவம்) வரை அப்பாவி தமிழர்களுக்கு அவர்கள் இழைத்த கொடுமைகளை, செய்த அட்டூழியங்களை மீட்டிப்பார்க்கிறேன்.

ராணுவம் (இலங்கை, இந்திய ராணுவம்) பற்றிய பயத்தினை, கசப்பினை, வெறுப்பினை வெறும் வார்த்தைகளில் வடிக்க முடியுமா தெரியவில்லை. நான் என் வாழ்நாளில் மீட்டிப்பார்க்க விரும்பாத நாட்கள் அவை. மீட்டினாலும், விட்டாலும் அதன் வலி மட்டும் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது.

ஆரம்ப காலங்களில் யாழ்ப்பாணம் வடமராட்சியில் ராணுவம் ஊரிக்காடு வல்வெட்டித்துறை முகாமிலிருந்து வந்துதான் எங்களுக்கு கஷ்டங்களையும் கொடுத்து, கூடவே எங்கள் அப்பாவி சகோதரர்களையும் கொலை செய்து காணாமற்போகச் செய்தும் கொண்டிருந்தார்கள். இந்த முகாம் பற்றி சொல்லவேண்டுமானால், இது ஆரம்பத்தில் காவல் நிலையமாக இருந்ததாகவும், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டம் அமுலாக்கப்பட்ட பின்னர் ராணுவமுகாமாக மாற்றப்பட்டதாகவும் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். இது ராணுவ முகாமாக மாற்றப்படக் காரணம் இம்முகாம் கடற்கரையை ஒட்டியதாகவும் ராணுவ தளவாட விநியோகங்களுக்கு ஏற்றதாகவும் இருப்பதுதான் என்றும் சொல்லப்படுகிறது.

இன்றுவரை இந்த ராணுவ முகாம் இன்னும் விஸ்தரிக்கப்பட்டு பாடசாலைகளையும், குடிமனைகளையும் தொழில்வாய்ப்புக்களையும் விழுங்கி ராணுவத்தால் நிரம்பி வழிந்து கொண்டுதானிருக்கிறது. இந்த ராணுவமுகாமில் இருந்து அடிக்கடி அன்றுமுதல் இன்றுவரை ராணுவம் ரோந்து போவது வழக்கம். அண்மையில் வன்னியில் இறுதிப்போர் நடந்துகொண்டிருந்த காலங்களில் நடந்த ஓர் சம்பவம். ஊரில் கோவில் திருவிழா என்றால் காலை, மாலை இருவேளைகளிலும் எல்லா வீடுகளிலும் வாசல் தெளித்து, கோலம் போடத்தெரிந்தவர்கள் கோலம் போடுவார்கள்.

என் உறவினர் ஒருவர் வீட்டில் அவர்களின் உறவுகள் வன்னியில் மாட்டிக்கொண்டதால் இவர்கள் திருவிழாக்கால சம்பிரதாயங்கள் எதையுமே செய்யவில்லை. ரோந்து போய்கொண்டிருந்த ராணுவம் இவர்களின் வீட்டில் புகுந்து நீங்கள் ஏன் எல்லோரையும் போல் வாசலை சுத்தம் செய்யவில்லை? உங்கள் உறவினர்கள் யாராவது வன்னியில் இருக்கிறார்களா என்று எகத்தாளமாக கேட்டிருக்கிறார்கள். இதில் வேதனையான விடயம் என்னவென்றால் வன்னியில் என்ன நடக்கிறது என்பது வடமராட்சித்தமிழனுக்கு தெரியாமலேயே ராணுவ அடக்குமுறை மூலம் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் வழக்கமாக புலத்திலுள்ள தங்கள் உறவினர்கள் மூலமாகத்தான் வன்னியில் என்ன நடக்கிறது என்று தொலைபேசி மூலம் தெரிந்து கொண்டிருந்திருக்கிறார்கள். ராணுவம் இப்படி கேட்ட நாள் முதல் இவர்கள் இரண்டு வேளையும் வாசல் தெளித்து விட்டு, வீட்டுக்குள் தங்கள் உறவுகளை எண்ணி துடித்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

இது தான் யாழ்ப்பாணத்தில் என் உறவுகளின் இன்றைய அவல வாழ்வு. வெளியுலகுடன் சாதாரண மக்களுக்குள்ள ஊடகத்தொடர்புகள் ராணுவத்தால் திட்டமிடப்பட்ட முறையில் பறிக்கப்பட்டுள்ளன. அநேகமானோர் சொல்வது போல் யாழ்ப்பாணம் ஓர் திறந்த வெளி சிறைச்சாலையாக சிங்கள ராணுவத்தின் அடக்குமுறையில் திணறிக் கொண்டுதானிருக்கிறது.

நான் வடமராட்சியில் இருந்த காலங்களில் ராணுவம் முகாமிற்குள் முடக்கப்படுவதற்கு முற்பட்ட காலங்களில் ஊரடங்கு சட்டம் போட்டு ஊருக்குள் ராணுவத்தின் வெறியாட்டங்கள் கேள்விமுறையின்றி அரங்கேறியதும் உண்டு. அந்த பாதகங்கள் எதுவுமே வெளியுலகிற்கு தெரியாமலே போனதும் உண்டு. நான் சிறுமியாக இருந்த நாட்களில் என் அம்மாச்சி (பாட்டி)தான் சொல்வார் “இண்டைக்கு ஆமிக்காரன் சந்தியில நிண்ட பெடியளை பிடிச்சுக்கொண்டு போறாங்களாம்” என்று. ராணுவம் ட்ரக் வண்டிகளில் தான் வருவார்கள். அப்படி வரும்போது ரோட்டில் நிற்கும் இளைஞர்கள் சிலரை அள்ளி தங்கள் வண்டிகளில் போட்டுக்கொண்டு போய்விடுவார்கள். அவர்களில் சிலர் வீடு திரும்பியிருக்கிறார்கள். சிலர் இன்றுவரை காணாமற் போனவர்கள் தான்.

தமிழர்களை பிடித்துச் செல்லவோ அல்லது தடுத்து வைக்கவோ ராணுவத்திற்கு காரணம் ஏதும் தேவையில்லை. முன்பெல்லாம் பிரதான வீதியால் ரோந்து மட்டுமே சென்ற சிங்கள ராணுவம் பின்னாட்களில் சுற்றிவளைப்புகளில் ஈடுபட்டது. ராணுவ சுற்றிவளைப்பு என்றாலே ஊர் அமைதியாகி விடும். ஓர் மயான அமைதிதான் இருக்கும். அவ்வப்போது ஊரில் காகத்தின் சத்தத்தோடு துப்பாக்கி வேட்டுச்சத்தமும் கேட்கும். என்/எங்களின் உயிர் எங்களுக்கு மிஞ்சுமா என்று விவரிக்க முடியாத பயத்தோடும் வேதனையோடும் ஒவ்வொரு நிமிடத்தையும் ஒவ்வொரு யுகமாக கழித்திருக்கிறேன்/கழித்திருக்கிறோம். அது மரண வேதனை. அதை சொல்லில் புரிய வைக்க முடியாது.

சிங்கள ராணுவம் திபுதிபுவென்று வீட்டிற்குள் நுழைவார்கள். நுழைந்த மாத்திரத்திலேயே “கொட்டியா (புலி) இரிக்கா?” என்பார்கள். வீட்டையே கிண்டி, கிளறி துவம்சம் பண்ணுவதோடு மட்டுமில்லாமல் சிலரது வீடுகளை அவர்களின் கண்முன்னாலேயே கொளுத்திவிட்டும் போயிருக்கிறார்கள். சிங்கள ராணுவத்துக்கு இப்படி செய்வதற்கு காரணங்கள் ஏதும் வேண்டியதில்லை. நாங்கள் தமிழர்களாக இருக்கும் ஒரு காரணம் போதாதா? எங்கள் வீட்டில் சிங்கள ராணுவம் நுழைந்த சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் இந்த நாசமாப்போனவங்களின் கேள்விக்கெல்லாம் என் பாட்டிதான் பதில் சொல்லியிருக்கிறார். ராணுவம் வீட்டிற்குள் நுழைந்து சோதனை போடும் சந்தர்ப்பங்களில் யாரையாவது தங்களோடு உள்ளே வரச்சொல்லுவார்கள். காரணம், உள்ளே சோதனை போடச்செல்லும் போது உள்ளேயிருந்து தங்களை யாராவது தாக்கிவிடுவார்கள் என்ற பயம் தான்.

அப்படியான சந்தர்ப்பங்களில் என் பாட்டி யாரையும் விடாமல் தானேதான் போவார். தான் வயதானவர்தானே, தன்னை ஆமிக்காரன் சுட்டாலும் பரவாயில்லை என்பார். தவிரவும் யாராவது பெண்கள் உள்ளே சென்றால் அவர்களை என்ன செய்வார்கள் என்பதை நான் சொல்லத்தேவையில்லை. என் பாட்டி சிங்கள ராணுவத்தை “ஐயா” என்று தான் விழிப்பார். எனக்கென்றால் கோபம் தலைக்கேறும். ராணுவம் போனபின் நான் என் பாட்டியோடு, அவர் ஏன் சிங்கள ராணுவத்தை ஐயா என்று அழைக்க வேண்டும் என்று மல்லுக்கு நின்றதும் உண்டு.

ராணுவ சுற்றிவளைப்பு என்றால் அந்த நாட்களில் நான் என் வீட்டிற்கு முன்னால் இருந்த என் சிறியதாயாரின் வீட்டில்தான் இருப்பது வழக்கம். ராணுவம் வீட்டுக்குள் நுழைகிறது என்றவுடனேயே என் பாட்டி என் சிறியதாயாரின் குழந்தைகளில் ஒருவரை என் கைகளுக்குள் திணிப்பார். குழந்தையை வைத்திருந்தால் ராணுவம் என்னை ஒன்றும் செய்யாது என்பது என் பாட்டியின் அப்பாவித்தனமான கண்டுபிடிப்பு. இப்படித்தான் ஒருமுறை என் சிறிய தாயாரின் மகனை நான் என் கைகளில் வைத்திருக்க அந்த குழந்தை பாட்டுக்கு சிங்கள சிப்பாய் ஒன்றுடன் தன் பாஷையில் ஏதோ பேசத்தொடங்கிவிட்டது. குழந்தை சிப்பாயுடன் பேச சிப்பாய் என்னைப்பார்த்து நக்கலாய் சிரித்துக்கொண்டிருந்தான். எனக்கு பயம் ஒருபுறமும் எரிச்சல் ஒருபுறமுமாய் ஏறக்குறைய அழுகையே வந்துவிட்டது.

இப்படித்தான் ஒவ்வொரு முறை ராணுவம் சுற்றிவளைக்கும் போதும் செத்து செத்து பிழைத்திருக்கிறேன். என் அம்மாச்சி அந்த நாட்களில் நான் வீட்டிலிருக்கும் சந்தர்ப்பங்களில் என்னை, தலைமுடியைப் பின்னல் போடாதே, குடும்பி வைத்துக்கொள், ராணுவத்தின் பார்வையில் உறுத்துகிற மாதிரி நில்லாதே என்றெல்லாம் எனக்கு அறிவுரை செய்து என்னை வெறுப்பேற்றிக் கொண்டிருப்பார். இப்போது என் நினைவுகளை மீட்டிப்பார்த்தால்…. இன்றும் எங்கள் பாட்டிகள், தாய்மார்கள் ஈழத்தில் தங்கள் பேத்திகளை, மகள்களை சிங்கள ராணுவம் என்ற வெறிநாய்களிடமிருந்து காப்பாற்ற எப்படி எல்லாமோ போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் இரண்டு அமெரிக்கப் பெண்மணிகள் ஈழத்தமிழ்ப் பெண்கள் பற்றிச் சொன்ன கருத்துகள் ஏனோ இந்த சந்தர்ப்பத்தில் என் மனதில் வலியோடு இடறுகிறது. ஒருவர் அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன். அவர் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டத்தில் உரையாற்றியபோது சொன்னது, இலங்கையில் தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வன்முறை சிங்கள ராணுவத்தால் ஓர் ஆயுதமாக பாவிக்கப்பட்டிருக்கிறது. இன்னொருவர் மனித உரிமைகளுக்காக போராடுபவர், எலின் ஷாண்டர், சொன்னது இலங்கையில் வதை முகாம்களில் தமிழ்ப்பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கும், வன்முறைக்கும் ஆளாவது மட்டுமல்ல அவர்கள் நிர்வாணமாக அலையவிடப்பட்டிருக்கிறார்கள். எங்கள் சகோதரிகள் அம்மணக் கட்டைகளாக அலைந்தாலென்ன? இல்லை, அவர்கள் கரிக்கட்டைகளாய் எரிந்தால் தான் என்ன? நாங்கள் எங்கள் சுயநல சிந்தனையோடும், சுயமோகத்தோடும் சுரணையற்ற ஜென்மங்களாக உலாவருவோம்…… இதற்கெல்லாம் நாங்கள் வெட்கப்படுவோமா என்ன?
யாழ்ப்பாணம் வடமராட்சியில் ராணுவம் முகாமிற்குள் அடைபடுவதற்கு முன்னைய நாட்களில் சுற்றிவளைப்பின் போது அப்படி அவர்கள் என்னதான் செய்தார்கள் என்று யோசிக்கிறீர்களா? வேறொன்றுமில்லை, கொட்டியாவை (புலி) தேடுகிறோம் என்ற பெயரில் இளைஞர்களை கைது செய்வது, காணாமற்போகச்செய்வது, அங்கங்கே தமிழர்களின் உடமைகளை கொள்ளையடிப்பது, பெண்களை பலாத்காரம் செய்வது, கூட்டமாக வரிசையாக நிற்கவைத்து ஆண்களை சுட்டுக்கொல்வது இவையெல்லாம் தான்.

சுற்றிவளைப்பின் போது ஆண்களை வீடுவீடாக சென்று கைது செய்து மிருகங்கள் போல் கூட்டிச்சென்று தார் ரோட்டில் வெயிலில் உட்காரவைத்து, பிறகு அவர்களில் தரம்பிரித்து சிலரை வீட்டற்கு அனுப்பிவிட்டு மீதம் உள்ளவர்களில் சிலர் காணாமற்போயும், சிலர் படுகொலை செய்யப்பட்டும் பயங்கரவாதிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் அரசபயங்கரவாதம் உலகத்தின் கண்களுக்கு தெரியாமலேயே அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. என் உறவினர் ஒருவர், எனக்கு சிறிய தகப்பனார் முறை, அவருடைய பதிவுப்பெயர் “பகவத் சிங்”. அவர் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எல்லோருக்கும் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்களைத்தான் வைத்திருந்தார்கள். இவர் இலங்கை ராணுவத்திடம் மாட்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம் இவரின் பெயருக்காகவே தாக்கப்பட்டிருக்கிறார்.

அடையாள அட்டையில் இவரின் பெயரைப் பார்த்துவிட்டு ராணுவத்தால் பலமுறை தாக்கப்பட்டு முகம் உடம்பெல்லாம் வீங்கிப்போய் வீடு வந்திருக்கிறார். ”என்ர பேரைப் பாத்தவுடனேயே என்னை அடிக்கத் தொடங்கி விடுறாங்கள்” என்று அவர் வேதனையோடு சொன்னதை என் காதுகளால் கேட்டிருக்கிறேன். பாடசாலை முடிகிற நேரங்களில் ராணுவம் ரோந்து போகிறதென்றால் எங்களை அழைத்துப்போக பாடசாலைக்கே வந்துவிட்டிருந்தவர். இறுதியில் ஓர் நாள் சிங்கள ராணுவத்தால் வரிசையாக நிற்கவைத்து சுட்டு கொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இவர் ராணுவத்தால் சுற்றிவளைப்பின் போது அழைத்துச்செல்லப்பட்டுவிட்டார் என்று தெரிந்தவுடனேயே அவருக்கு என்ன நேரப்போகுதோ என்று பயந்தபடியே இருந்தோம். ராணுவ சுற்றிவளைப்பு முடிந்து இருட்டிய நேரம்தான் சொன்னார்கள் வாசகசாலையில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்று. அவர் முகத்தை இறுதியாக ஒருமுறை பார்க்கலாம் என்று வீட்டிளுள்ளவர்களோடு நானும் தெருவில் ஓட எத்தனித்த போது யாரோ என்னை தடுத்தார்கள். அங்கே ஒரே ரத்த சகதியாய் கிடக்கு. பெண்கள் அதைப்பார்த்தால் தாங்கமாட்டார்கள் என்றார்கள். என் சித்தப்பாவின் உடல் வீட்டிற்கு இறுதிக்கிரியைக்காக கூட கொண்டுவரப்படவில்லை.

இவரின் மற்ற சகோதரர்கள், ஒருவர் கடற்படையாலும் இன்னொருவர் ராணுவத்தாலும் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள். ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரரின் பெயர் சுகதேவ். இப்படி ராணுவம் வெறியாட்டம் போட்டுவிட்டு போன பின்பும் ஊர் முழுக்க ஒரே மரண ஒலமாகத்தானிருந்தது. பிள்ளைகளை, கணவன்மார்களை இழந்த தாய்களும், மனைவிமார்களும் சிங்கள ராணுவத்தை சாபம் போட்டு திட்டிக்கொண்டிருப்பார்கள். அழுது, அழுது ஓய்ந்து சக்தியற்றவர்களாக நடைப்பிணமாய் செய்வதறியாது திகைத்துப்போய் நின்றிருக்கிறார்கள். இப்படித்தான் ராணுவ சுற்றிவளைப்பு நடக்கப்போகிறது என்றாலே எங்களை மரணபயம் ஆட்டிவைக்கும். அப்போதே எங்களுக்கு ராணுவத்தின் கொடுமைகள் தாங்க முடியவில்லை.

ஆனால் இப்போதோ எங்கள் உறவுகள் ராணுவத்தால் சூழப்பட்டு அடிமைகளை விட மோசமாய், மிருகங்களை விட கேவலமாய் நடத்தப்பட்டு தாங்கொணா வேதனைகளையும், கஷ்டங்களையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் விவரிக்க அகராதியில் சொற்களே இருக்காது என்றுதான் தோன்றுகிறது.

இப்படி சாட்சியே இன்றி ராணுவ அடக்குமுறைமூலம் அரசபயங்கரவாதம் எங்களை வதைத்துக் கொண்டிருந்தது. இப்போது இருப்பது போல் தொழில்நுட்ப வசதிகள் ஏதும் அந்த நாட்களில் இல்லாத காரணத்தாலோ என்னவோ எங்களுக்கு சிங்கள ராணுவத்தால் இழைக்கப்பட்ட கொடுமைகள் வெளியுலகத்திற்கு தெரியாமலேயே போனது. இப்படிப்பட்ட ராணுவம் முகாமிற்குள் அடைக்கப்பட்டால் நாங்கள் சந்தோசப்படுவோமா, மாட்டோமா? இவ்வாறாக அடைபட்ட ராணுவம் வெளியேற எடுத்த முயற்சி தான் ஒப்பரேஷன் லிபரேஷன் (Operation Liberation).

-தொடரும்

-ரதி
Thanks: vinavu.

Wednesday, October 7, 2009

தமிழ்ப்பெயர்கள் - ஆண்



அகத்தியன் - முனிவர்
அகிலன் - எல்லாவற்றையும் ஆள்பவன்
அங்கணன் - சிவபெருமான்
அங்கணாளன் - கண்ணோட்டம் உடையவன், சிவபிரான்
அங்கதன் - இலக்குவனின் மகன், வாலி மகன்
அங்கதி - திருமால், தீக்கடவுள்
அசலன் - கடவுள்
அசன் - திருமால், சிவபிரான்
அசிதன் - சிவன், திருமால், சனிபக்தன்
அசோகன் - அருகன், சோகமற்றவன், காமன், பீமன், தேர்ப்பாகன்
அச்சுதன் - அழிவில்லாதவன், திருமால்
அட்சயன் - கடவுள், இறைவன், பகவான், அமரன், அழிவற்றன்
அதலன் - சிவபெருமான், கடவுள், இறை
அதிகுணன் - சிறந்த குணமுள்ளவன், கடவுள்
அதியன் - மேம்பட்டவன்
அதியமான் - புலவர்களின் நண்பனான அரசன், ஔவைக்கு நீண்ட நாள் வாழ அருளும் நெல்லிக்கனி அளித்தவன், தமிழ் பற்றுடையவன்
அதீதன் - ஞானியர் (மெய்யறிவாளர்)
அநாதன் - பற்றுக்கோடில்லாதவன், கடவுள்
அநிலன் - வாயுதேவன், அட்டவசுக்களில் ஒருவன்
அந்திவண்ணன் - சிவபெருமான்
அபிசாதன் - உயர்குலத்தோன், தக்கவன், அறிஞன், மதியூகி, முன்னாலோசனைக்காரன், குடிப்பிறந்தவன்
அபியுக்தன் - அறிஞன்
அப்பர் - திருநாவுக்கரசர்
அப்பிரமேயன் - கடவுள், சிவன்
அப்பு - கடவுள், பாதிரி
அமரன் - தெய்வீகமானவன்
அமரிறை - இந்திரன்
அமரேசன் - இந்திரன்
அமலன் - கடவுள், அருகன், சிவன், மலமிலி, சீவன் முக்தன்
அமன் - பன்னிரு கதிரவர்களுள் ஒருவன்
அமுதன் - கடவுள்
அமூர்த்தன் - சிவன்
அமைவன் - முனிவன், கடவுள், அடக்கமுடையோன், அருகன், அறிவுடையவன், துறவி, ஒழுக்கமுடையவன், உடன்படுவோன்
அறிவொளி - அறிவுடையவன், அறிவைப் பரப்புபவன்
அம்மையப்பர் - உமாபதி
அயன் - நான்முகன், அருகன், மகேசுவரன்
அயிலவன் - முருகன்
அயிலுழவன் - வீரன்
அரசு - மன்னன்
அரவிந்தன் - நான்முகன்
அரவிந்தை - இலக்குமி
அரன் - சிவன்
அரிகரன் - திருமாலும் சிவனும் கூடிய மூர்த்தி
அரிக்கரியார் - சிவன்
அரிபாலன் -
அருணன் - சூரியன்
அருத்தநாரீசுவரன் - உமையொரு பாகன்
அர்ச்சிதன் - பூசிக்கப்படுவோன்
அலரவன் - நான்முகன்
அல்லியான் - நான்முகன்
அவநிகேள்வன் - திருமால்
அழகன் - அழகுடையவன்
அழகேந்திரன்
அழல்வண்ணன் - சிவன்
அறவாணன் - கடவுள்
அறவாளன் - அறச்செயலுடையவன்
அறன்மகன் - தருமன்
அறன் - வேள்வி முதல்வன், அறக்கடவுள், இயமன்
அறிவரன் - அறிவிற்சிறந்தவன்
அறிவன் - நல்லறிவுடையோன், இறைவன், சிவன், திருமால், அருகன்
அறிவாகரன் - மிகுந்த கல்வி அறிவை உடையவன்
அற்புதமூர்த்தி - கடவுள்
அற்புதன் - கடவுள், கண்ணாளன்
அனகன் - அழகுள்ளவன், கடவுள்
அனிவன் - வாயுதேவன்
அன்பரசன் - பணிவுள்ளம் கொண்டவன்
அன்பழகன் - அன்புடைய அழகன்
அன்பு - நல்லுள்ளம், பரிவு




ஆகண்டலன் - இந்திரன்
ஆடலரசன் -
ஆதனோரி - ஒரு வள்ளல்
ஆதிசைவன் - பதினாறு சைவர்களுள் ஒருவன்
ஆதிதேவன் - சிவபெருமான், கதிரவன், முதற்கடவுள்
ஆதித்தமணி - கதிரவன்
ஆதித்தன் - கதிரவன், ஆதிக்குரு, வானோன்
ஆதிநாதன் - கடவுள், சிவன்
ஆதிநாராயணன் - வச்சிக்கல், திருமால்
ஆதிபகவன் - கடவுள்
ஆதிபன் - அரசன், எப்பொருட்கும் இறைவன், தலைவன்
ஆதிபுங்கவன் - அருகன், கடவுள்
ஆதிபூதன் - நான்முகன், முன்பிறந்தன், முன்னுள்ளவன்
ஆதிமுத்தர் - மலம்நீங்கினவர்
ஆதிரன் - பெரியோன்
ஆதிரைமுதல்வன் - சிவன்
ஆதிரையான் - சிவன்
ஆத்தன் - கடவுள், விருப்பமானவன், நம்பத்தக்கவன், அருகன்
ஆத்திகன் - கடவுள் உண்டென்போன்
ஆத்மஞானி - தன்னையறிந்தான்
ஆநந்தன் - அருகன், கடவுள், சிவன், பலராமன்
ஆமேரேசர் - ஏகாம்பர நாதர்
ஆமுகர் - நந்திதேவர்
ஆயிரங்கண்ணன் - இந்திரன்
ஆயிரம்பெயரோன் - திருமால்
ஆரணத்தான் - நான்முகன்
ஆரணன் - நான்முகன், சிவன், திருமால், பார்ப்பான்
ஆரூரன் - சுந்தரமூர்த்தியார்
ஆர்வலன் - அன்புடையவன்
ஆலகண்டன் - சிவன்
ஆலமர்செல்வன் - சிவபெருமான்
ஆலமுண்டோன் - சிவபெருமான்
ஆலவன் - திருமால்
ஆலிநாடன் - திருமங்கையாழ்வார்
ஆழியான் - திருமால்
ஆழ்வார் - திருமால் அடியார், பக்தியில் ஆழ்ந்தவர்
ஆறுசூடி - சிவன்
ஆறுமுகன் - முருகன்
ஆனந்தன் - சிவன், அருகன்
ஆனன் - சிவன்
ஆனை முகன் - மூத்தபிள்ளையார்



இசைவாணர் - பாடகர்
இடிக்கொடியோன் - இந்திரன்
இதன் - நன்மையுள்ளவன்
இதிகாசன் - சூதமாமுனீ
இந்திரதிருவன் - இந்திரனைப் போன்ற செல்வத்தையுடையவன்
இந்திரர் - மேலான அதிகாரமுடையவர், தேவர்
இந்திரன்- தேவர்கோன், இறைவன், விநாயகன், கடவுள்,, தலைவன், அரசன், புலவன்
இந்திராபதி - திருமால்
இந்திரை - திருமகள், அரிதாரம், இந்திராணி
இந்திரைகேள்வன் - திருமால், இந்திரன்
இந்துசிகாமணி - சிவபெருமான்
இந்துசேகரன் - சிவபெருமான்
இயமங்கியார் - பரசுராமர்
இயவ்வாணர் - புலவர்
இயாகாபதி - இந்திரன்
இரகு - சூரியவமிசதரசருள் புகழ்பெற்ற ஓர் அரசன்
இரணிய கருப்பன் - நான்முகன்
இருதயராசன் - இதயத்தின் அரசன், அன்பழகன்
இருடிகேசன் - திருமால்
இரேசன் - அரசன், வாணன், திருமால்
இரேவதன் - பலதேவன் மாமன்
இளமுருகு - இளைய முருகன்
இளங்கோ - இளவரசன், தமிழுக்காக அரியாசனம் துறந்த தியாகி
இளமுருகு - இளமையானவன், அழகானவன்
இறைகுமாரன் - இறைவனின் குமாரன், குமரன் என்னும் இறைவன்
இனியன் - இனியவன்
இன்பசெல்வம் - எல்லையில்லா இன்பத்தை அளிக்கும் செல்வப்பேறு
இன்பசெல்வன் - எல்லையில்லா இன்பத்தை அளிக்கும் செல்வப்பேற்றை பெற்றவன்




ஈசுவரன் - ஈசன்




உசிதன் - பாண்டியன்
உடலக்கண்ணன் - இந்திரன்
உடையார் - சாமி, சில வகுப்பார்களின் பட்டப்பெயர், செல்வர்
உண்மேதை - உள்ளறிவுடையவன், மெய்ஞ்ஞானி
உதயசூரியன் - மாற்றத்தின் மற்றும் வளர்ச்சியின் அறிகுறி
உதயணன் - என்று வளர்பவன்
உதயன் - கதிரவன்
உதன் - சிவன், கங்கை வேணியன்
உதாத்தன் - சிறந்தவன், வள்ளல்
உதாரன் - கொடையாளி, பேச்சுத்திறமையுள்ளவன்
உதிட்டிரன் - தருமன்
உதியன் - சேரன், பாண்டியன், அறிஞன்
உத்தமன் - நவ்வலன்
உத்தானபாதன் - ஓர் அரசன்
உத்தியுத்தன் - ஊக்கமுள்ளவன், அருவுருவத்திருமேனி கொண்டவன்
உந்தியிறைவன் - நான்முகன்
உபசுந்தன் - ஓர் அரசன்
உபேந்திரன் - திருமால்
உமாபதி - சிவபெருமான்
உமைகேள்வன் -
உமையொருபாகன் -
உரவன் - அறிவுடையோன், பலமுடையவன்
உருத்திரன் - சிவன்
உரேந்திரன் - வீரன்
உலகபாரணன் - திருமால்



ஊர்த்துவலிங்கன் - சிவன்
ஊழிநாயகன் - உலகைச் சங்கரிக்கும் கடவுள்
ஊழிமுதல்வன் - கடவுள்
ஊழியான் - நெடுங்கால வாழ்க்கையை உடையான், கடவுள்



எண்குணன் -
எட்டமன் - எட்டயபுரத்து அரசர்களின் பட்டப்பெயர்
எண்டோளன் - சிவன்
எழினி - கடையெழு வள்ளல்களில் ஒருவன்



ஏககுண்டலன் - பலராமன்
ஏகதந்தன் - யானை முகக் கடவு,ள்
ஏகநாதன் - தனைத்தலைவன்
ஏகன் - ஒருவன், கடவுள
ஏழுமலை - முருகன்
ஏறன் - சிவன்



ஐக்கியநாதன் - பார்வதியோடு கூடிய சிவன், திருமகளோடு கூடிய திருமால், தலைவன், சங்கரநாராணயன்
ஐந்தருநாதன் - இந்திரன்
ஐம்முகன் - சிவன்




ஒளி - விளக்கு, பிறருக்கு உதவுபவன், அறிஞன்



ஓங்காரி - சக்தி, ஓம்
ஓணப்பிரான் - திருமால்
ஓதிமவாகனன் - நான்முகன்





ககுந்தலன் - சிவன்
ககேசன் - கதிரவன், கருடன்
ககேசுரன் - கருடன், கதிரவன்
ககேந்திரன் - கருடன், கதிரவன்
கங்கன் - சீயகங்கன் என்னும் அரசன், தருமர் விராட நகரத்தில் இருந்தபோது வைத்துக்கொண்ட பெயர்
கங்காசுதன் - முருகன், வீடுமன்
கங்காதரன் - சிவபெருமான்
கங்காளமாலி - சிவன்
கசானனன் - ஆனாமுகக் கடவுள்
கஞ்சாரி - கண்ணன், கிருட்டிணன், கோவிந்தன்
கடகநாதன் - படைத்தலைவன்
கடகன் - காரியத்தை நடத்துபவன், வல்லவன், நட்டுவன், கடகராசியிற் பிறந்தவன்
கடம்பன் - கந்தன், முருகன்
கடல்வண்ணன் - திருமால்
கணநாதர் - ஆனைமுகக் கடவுள், திருத்தொண்டர்களில் ஒருவர்
கணபதி - விநாயகன்
கணிச்சியோன் - சிவன்
கணையாழி - இனிமையான பேச்சுத்திறம் மிக்கவன்
கண்ணன் -
கண்ணுதல் - நெற்றிக்கண் உயவ ன்
கதிரவன் - சூரியன்
கதிர் - கதிரவனின் ஒளி
கதிர்காமம் -
கந்தவகன் - வாயுதேவன்
கந்தன் - முருகன், அருகன்
கபாலதரன் - சிவன், வயிரவன்
கபாலி - சிவன், வயிரவன்
கபிலன் - பெரும் புலவன்
கமகன் - நுண்ணறிவினாலும், கல்விப்பெருமையாலும் கல்லாத நூற்பொருளையும் எடுத்துரைக்க வல்லவன்
கமலத்தோன் - நான்முகன்
கமலன் - நான்முகன்
கரிகாலன் - வீரமும் விவேகமும் மிகுந்த சோழ வேந்தன்
கரிகால்வளவன் - ஒரு சோழமன்னன்
கருணா - கொடைவள்ளல், கருணை உள்ளம் கொண்டவன்
கருணாகரன் - கடவுள்
கருணாநிதி - அருட்செல்வன்
கருணாலயன் - கடவுள்
கருணிதன் - அருளுடையோன்
கலசபவன் - அகத்தியன், விசிட்டன், துரோணன்
கலாநிதி - கல்விச்செல்வம், திங்கள்
கலாதன் - அறிஞன்
கலாதரன் - திங்கள்
கலாபன் - திறமையும் அறிவும் உடையவன்
கலாபதி - திங்கள்
கல்யாணன் - சிவன்
கலாபரன் - கலையை உலகமாகக் கொண்டவன்
கலிந்தன் - கதிரவன்
கலைச்செல்வன் - கலைகளில் தேர்ந்தவன்
கவிவாணர் - புலவர், பாடகர்
கவின் - அழகு, தக்க பண்பு, எழில்
கஜன் -


கா

காகுத்தன் - இராமன், ஓர் அரசன், திருமால்
காசாம்புமேனியன் - திருமால்
காசாம்புவண்ணன் - திருமால்
காண்டீவன் - அருச்சணன்
காந்தன் - அரசன், எப்பொருட்கும் இறைவன், கணவன், தலைவன்
காயாம்புமேனியன் - திருமால்
காயாம்புவண்ணன் - திருமால்
கார்த்திகேயன் - முருகன்
கார்வண்ணன் - திருமால்
காவியன் -
காளிங்கராயன் - சோழ பாண்டியர் காலத்து இராசாங்கத் தலைவர் சிலருக்கு வழங்கிய பட்டப்பெயர்

கி

கிரகபதி - கதிரவன்
கிரணன் - கதிரவன்
கிருஷ்ணன் -

கீ

கீசன் - கதிரவன், போர்வல்லான்
கீரன் - தமிழ்ப்புலவருள் ஒருவர், கொள்கைப் பிடிப்புள்ளவர்

கு

குகன் - முருகன், இராமரிடம் நட்டு கொண்ட ஓர் ஓடக்காரன்
குடகன் - சேரன், மேல்நாட்டான்
குணபத்திரன் - அருகன், கடவுள்
குணசீலி - நற்குணச்செயல் உடையவன்
குணவதன் - நற்குடண் உடையவன்
குணன் - நற்குணம் உடையவன்
குணா - நல்ல பண்புடையவன்
குணாளன் - நல்ல பண்புகளை ஆள்பவன்
குணாதீதன் - கடவுள், சீவன்முக்தன்
குணாலயன் - கடவுள், நற்குணமுள்ளவன்
குபேரன் - சந்திதன், தனதன், பணக்காரன்
குமணன் - கொடை வள்ளல்களுள் ஒருவன்
குமரவேள் - முருக்கடவுள்
குமரன் - ஆண்மகன், இளையோன், முருகன்
குமாரன் - மகன், முருகன்
கும்பசன் - அகத்தியன்
கும்பன் - அகத்தியன், பிரகலாதன் பிள்ளைகளுள் ஒருவன்
குயிலன் - தேவேந்திரன்
குருநாதன் - முருகக்கடவுள், பரமகுரு
குருபரன் - பரமகுரு
குலசன் - ஒழுக்கமுடையவன், குலம் வழுவாத தாய்தந்தையரிடத்தில் பிறந்தவன்
குலமகன் - நற்குடியிற் பிறந்தவன்
குலிசபாயணி - கந்தன், தேவேந்திரன்
குலிசன் - இந்திரன்
குலிசி - இந்திரன்
குலீனன் - உயர்குலத்தோன்
குலோத்துங்கன் -
குழகன் - சிவன், முருகன், இளையோன், அழகன்
குழக்கன் - சிவன்


கே

கேகயன் - கைகேயன், கேகய நாட்டு அரசன், கைகேயி தந்தை, சிபிச்சக்கரவர்த்தி
கேசரர் - வித்தியாதரர்
கேசவன் - சோழன், நிறைமயிருள்ளோன், திருமால், சிவன்
கேசன் - தண்ணீரில் இருப்பவன், வருணன், திருமால்
கேசிகன் - திருமால்
கேசிகை - திருமால்
கேதாரன் - சிவன்
கேத்திரன் - திருமால், விண்டு, நாராயணன்
கேத்திரபாலன் - ஷேத்திரத்தைக் காக்கும் தேவதை, வயிரவன்
கேத்திரி - திருமால், விண்ணு, நாராயணன்

கை

கைலையாளி - சிவன்

கொ

கொற்றவை
கொன்றைசூடி - சிவன்

கோ

கோதமனார் - ஒரு முனிவர், கடைசிச் சங்கப் புலவர்களுள் ஒருவர்
கோபதி - இந்திரன், சூரியன், சிவன்
கோபாலர் - அரசர்
கோபால் -
கோப்பெருஞ்சோழன் - உறையூரிலிருந்து அரசியற்றிய சோழ மன்னருள் ஒருவன்
கோவலன் - இடையன், கண்ணன், சிலப்பதிகாரக் காப்பியத்தலைவன்
கோவிதன் - அறிஞன்
கோவிந்தன் - இந்திரன், நான்முகன், திருமான், பரமான்மா
கோழியோன் - முருகக்கடவுள்

கௌ

கௌசிகன் - இந்திரன், ஒரு முனிவர், விசுவாமித்திரர், பாம்பாட்டி
கௌணியர் - திருஞானசம்பந்தர்
கௌதமன் - ஆதிபுத்தன், கிருபன், சதாநந்தர்
கௌரியன் - பாண்டியன்
கௌரிசேயன் - முருகன், ஆனைமுகன்
கௌரியன் - பாண்டியன்



சகபதி - அரசன், கடவுள்
சகாதேவன் - பாண்டவர்களின் இளையோன்
சகாந்தகன் - சாலிவாகனன், விக்கிரமார்க்கன்
சக்கரதரன் - திருமால்
சக்கரதாரி - திருமால்
சக்கரவர்த்தி -
சக்கிரபாலன் - அதிபதி
சக்திவேல் -
சங்கபாணி - திருமால்
சங்கமேந்தி - திருமால்
சங்கரன் - நன்மை செய்பவன், சிவன்
சசி - இந்திராணி, சந்திரன், பச்சைக்கருப்பூரம், கடல், மழை
சசிமணாளன் - இந்திரன்
சச்சந்தன் - ஏமாங்கத நாட்டரசன்
சச்சிதாநந்தம் - உண்மை, அறிவு, இன்பம் என்னும் முக்குணங்களுடைய பரம்பொருள்
சஞ்சயன் - கௌரவர் புரோகிதன்
சஞ்சன் - நான்முகன்
சஜ்சீவன் -
சடாங்கன் - சிவன்
சடாதரன் - சிவன், வீரபத்திரன்
சடானனன் - ஆறுமுகன்
சடையன் -
சட்டைநாதன் - சிவன், வயிரவன்
சண்பையர்கோண் - திருஞானசம்பந்தர்
சண்முகன் - ஆறுமுகன், முருகன்
சதமகன் - இந்திரன்
சதாதநன் - அழியாதவன், திருமால்
சதாநந்தன் - நீங்க மகிழ்ச்சியுள்ளவன்
சதாவர்த்தன் - திருமால், விண்டு
சதீஸ்குமார் -
சத்தமன் - யாவரினுஞ் சிறந்தவன்
சத்தன் - சிவன், ஆற்றலுடையவன், அருவத்திருமேனி கொண்டவன்
சத்தியநாதர் - நவநாத சித்தர்களில் ஒருவர்
சநாதநன் - அழியாதவன், சிவன், நான்முகன், திருமால்
சந்தனன் -
சந்திமான் - இடையெழுவள்ளல்களுள் ஒருவன்
சந்திரசூடன் - சிவன்
சந்திரபாணி - வைரக்கல்
சந்திரன் - திங்கள்
சமரகேசரி - பெருவீரன்
சமீரணன் - காற்று, வாயுதேவன்
சம்பன்னன் - நிறையுள்ளவன்
சயபாலன் - அரசன், திருமால், நான்முகன்
சுயம்பு - அருகன், சிவன், சுயம்பு
சரணியன் - இரட்சகன்
சரவணன் -
சரிதன் - செயலிற் சிறந்தவன்
சரிதி - சியலெற் சிறந்தவன்
சரோருகன் - நான்முகன்
சலதரன் - சிவன்
சலநிதி - கடவுள்
சவரிமுத்து - தவமிருக்கும் முத்துக்குமரன்
சனந்தன் - நான்முகன் மக்கள் நால்வரின் ஒருவன்
சனாதிநாதன் - அரசன், திருமால்
சனார்த்தனன் - திருமால்

சா

சாகதன் - வீரன்
சாணன் - அறிவாற்றல் மிக்கவன்
சாமகானன் - சிவன்
சாம்பவன் - இராமன் படைத்தலைவரில் ஒருவன், சிவன்
சாரங்கபாணி - திருமால்
சாரங்கன் - சிவன், திருமால்
சாலவகன் - திருமால்
சாவித்திரன் - காற்று, சூரியன், நான்முகன், சிவன்


சி

சிகாமணி - முதன்மையானவன், சிறந்தோன்
சிகித்துவசன் - ஒரு அரசன், முருகன்
சிங்கடியப்பன் - சுந்தரமூர்த்தி நாயனார்
சிசுபாலகன் - கண்ணன்
சிசுபாலன் - இடையெழு வள்ளன்களில் ஒருவன்
சிதம்பரம் - திருத்தில்லை, கடவுளின் உறைவிடம்
சிதம்பரப்பிள்ளை - சிதம்பரத்தின் மகன்
சித்தசேனன் - முருகன்
சித்தாந்தன் - சிவன்
சித்தார்த்தன் - புத்தன்
சித்ரபதி -
சித்திராயுதன் - ஒரு கந்தருவன்
சித்துரூபன் - கடவுள்
சிதம்பரம் -
சிதம்பரபிள்ளை -
சிந்துநாதன் - வருணன்
சிலம்பன் - முருகன், குறிஞ்சிநிலத்தலைவன்
சிவசித்தர் - சைவ சமயத்திற்குரிய பரமுத்தியை அடைந்தவர்
சிவஞானம் - தெய்வ அறிவு, பதி உணர்வு
சிவதூதி - துர்க்கை
சிவலிங்கம் - சிவப்பூசை திருவுரு
சிவன், கடவுள், சிவபெருமான்
சிற்றம்பலவாணன்
சினேந்திரன் - அருகன், புத்தன்


சீ

சீதரன் - அரி, திருமால்
சீபதி - அருகன், கடவுள், திருமால்
சீரிணன் - கற்றோன்

சு

சுகதன் - புத்தன், அருகன்
சுகன் - கந்தருவன், வியாசர் மகனாகிய சுகர்
சுகுணம் - நற்குணன்
சுடலைமாடன் - காவல் தெய்வம், மக்கள் உழைப்பாளி
சுதாகரன் - கருடன், சந்திரன், ஓர் அரசன்
சுத்தன் - அருகன், சிவன், கடவுள்
சுந்தரபாண்டியன்
சுந்தரம் - அழகு, நிறம், நன்மை
சுந்தரன் - அழகன்
சுபர்ணன் - சுபன்னன், கருடன், வைணன்
சுபலம் - காந்தார தேசத்தரசன், இதன் மகன் சகுனி, மகள் காந்தாரி
சுபன்னன் - கருடன்
சுப்ரமணியன் - முருகனின் குரூரமான திருபு
சுப்பிரி - நான்முகன்
சுயம்பு - கடவுள், சிவன்
சுரர்பதி - இந்திரன், தேவலோகம்
சுரன், அறிஞன், கதிரவன்
சுரேசன் - இந்திரன், ஈசானன், முருகன்
சுரேந்திரன் - இந்திரன்
சுலோசனன் - துரியோதனன், அழகிய கண்ணை உடையவன்


சூ

சூரவன் - பாண்டியன்
சூலதரன் - சிவன், வயிரவன்
சூலபாணி - வயிரவன்


செ

செங்கணான் - திருமால்
செஞ்சடையான் - சிவன், வயிரவன், வீரபத்திரன்
செஞ்சடையோன் - சிவன், வயிரவன், வீரபத்திரன்
செந்தில் - முருகன்
செந்தில்குமரன் - முருகன்
செமியன் - செம்மையானவன், நல்லவன்
செமியோன் - செம்மையானவன், நல்லவன்
செல்வம் - செல்வம் உடையவன்
செல்வன் - செல்வன் உடையவன்
செல்வமணி -
செல்விநாதன் - திருமால்
செவ்வேள் - முருகன்
செழியன் - செழிப்புடையவன், பாண்டிய மன்னன்
சென்னி - சோழன், சோழமன்னன்

சே

சேகன் - வேலையில் ஆற்றலுடையவன்
சேணியன் - இந்திரன், வித்தியாதரன்
சேதனன் - அறிவுடையோன், ஆன்மா
சேயான் - சிவன், முருகன்
சேரன் - மூவேந்தர்களில் ஒருவன்
சேனாதிபன் - முருகன்

சை

சைலதரன் - கிருட்டிணன், மலையைத் தாங்கியவர்
சைலபதி - இமயமலை
சைலேந்திரன் -
சைவன் -

சொ

சொக்கத்தான் - சிவன்
சொக்கன் - சிவன், அழகன்
சொரூபன் - கடவுள்


சோ

சோதிநாயகன் - கடவுள்
சோமநாதன் - சிவன்
சோமன் - ஒரு வள்ளல்
சோழங்கன் - சோழன்

சௌ

சௌந்தரன் - அழகன், சிவன்
சௌந்தரேசன் - சொக்கலிங்க மூர்த்தி

சௌரி - திருமால், துர்க்கை

ஞா

ஞானபரன் - கடவுள், ஞானகுரு
ஞானானந்தன் - கடவுள்
ஞானி - அருகன்
ஞானன் - கடவுள், நான்முகன்



தசபலன் - புத்தன்
தசரதன் - இராமனுடைய தந்தை, பத்துத் திக்குகளிலும் தன்னுடைய தேரைச் செலுத்தும் ஆற்றல் பெற்றிருந்தபடியால் உண்டான காரணப் பெயர்
தசாரகன் - அருகன், புத்தன்
தஞ்ஞனன் - தன்னையுணர்ந்தவன்
தஞ்சன் - அறிஞன்
தட்சசங்காரன் - சிவன்
தட்சணாமூர்த்தி - அகத்தியன், சிவன்
தட்சன் - சிவன், புலவன்
தண்டதரன் - அரசன்
தண்டபாணி - முருகன்
தண்டபாலன் - துவாரபாலகன்
தண்டயாமன் - அகத்தியன், இயமன்
தண்டீசர் - சண்டேசுரர்
தமிழரசன் - தமிழ் மற்றும் தமிழரின் அரசன்
தமிழ்முனி - அகத்தியர்
தம்பிரான் - கடவுள், துறவித் தலைவன்
தயாபரன் - கடவுள், அருளுடையவன்
தயாளன் -
தரணிதரன் - அரசன், திருமால், கடவுள்
தராதரன் - திருமால்
தராதிபன் - அரசன்
தனஞ்சயன் - அர்ச்சுனன்

தா

தாசரதி - இராமன்
தாமரைக்கண்ணன் - திருமால்
தாமரையான் - திருமகன்
தாமன் - கதிரவன்
தாமோதரன் - திருமால்
தாயுமானவர் - செவ்வந்தியீசர், ஒரு மெய்யறிவாளர்
தாரகன் - கண்ணன், தேர்ச்சாரதி
தாரகாரி - முருகன்
தாலகேதனன் - பலராமன், வீடுமன்


தி

திகம்பரன் - அருகன், சிவன்
திதிபரன் - திருமால்
திரிபுரதகனன் - சிவன்
திரிபுராந்தகன் - சிவன்
திரிவிக்கிரமன் - ஓர் அரசன், திருமால், கதிரவன்
திருத்தக்கதேவர் - சீவகசிந்தாமணி இயற்றியவர்
திருமார்பன் - அருகன், திருமால்
திருமாமகள் - திருமகள்
திருமால் - விஷ்ணு
திருமாமணி -
திருமாவளவன் -
திலகன் - சிறந்தவன்
திலீபன் - ஈழத்து வீரன், நாட்டிற்கும் தமிழுக்கும் உயிர் நீத்தவன்
திவாகரன் - சூரியன், நாவிதன்
தினகரன் - கதிரவன்
தினேஸ்வரன் -

தீ

தீங்கரும்பு
தீபன்

து

துங்கன் - மேன்மையுடையோன்
துங்கீசன் - சூரியன், சிவன், திருமால், சந்திரன்
துய்யன் - பரிசுத்தன்
துரியசிவன் - மூவர்க்கும் மேலான சிவன்

தூ

தூரியன் - கடவுள்

தெ

தென்னன் - தெள்ளுத் (தென்) தமிழுக்குத் சொந்தக்காரன்

தொ

தொல்காப்பியன்


தே

தேவசேனன் -
தேவதத்தன் - அருச்சனன்
தேவதேவன் - சிவன், நான்முகன், திருமால்
தேவநாயகன் - கடவுள், தேவர் தலைவன்
தேவநேசன் - தேவர்களால் விரும்பப்படுபவன்
தேவபதி - இந்திரன்
தேவமணி - சிவன், இந்திரன் பட்டத்து யானை
தேவர் - உயர்ந்தோர்
தேவன் - அரசன், அருகன், கடவுள்
தேவேந்திரன் - தேவர்களின் அரசன்


தை




நகாரி - இந்திரன்
நக்கீரன் - கீரன், தமிழ்ப்புலவருள் ஒருவர், கொள்கைப் பிடிப்புள்ளவர்
நகுலன் -
நஞ்சுண்டான் - சிவபிரான்
நடராசர் - கூத்தபிரான்
நஞ்சுணி - சிவன்
நடர் - கூத்தர்
நந்தகோபாலர் - இடையர்
நந்தனன் - மகன், மால்
நந்தன் -
நமசிதன் - வழிபடத்தக்கவன்
நம்பி -
நம்பிரான் - கடவுள், தலைவன்
நயன் -
நரகேசரி - நரசிங்கமூர்த்தி, மக்களுள் சிறந்தவன்
நரபதி - அரசன்
நரகாரி - திருமால்
நராரி - திருமால்
நரேந்திரன் -
நவநிதி -
நறுமலர் -

நா

நாகநாதன் - ஆதிசேடன் , இந்திரன்
நாகமணி - நாகரத்தினம்
நாகாதிபன் - அனந்தன், இந்திரன், இமயமலை
நாகாபரணன் - சிவன்
நாகேந்திரன் -
நாதன் - அரசன், அருகன், எப்பொருட்கும் இறைவன்
நாதாந்தன் - சிவன்
நாபிசன் - நான்முகன்
நாரசிங்கன் - திருமால்
நாரணன் - திருமால்
நாராணயன் - சிவன், திருமால், நான்முகன்
நாவுக்கரசர் -
நாவுக்கரசு -
நான்முகன் - அருகன், பிரமன்


நி

நிச்சிந்தன் - அருகன், எண்ணம் அற்றவன், கடவுள்
நிட்பிரபஞ்சன் - சாந்தம் உள்ளவன்
நிதாந்தன் - மேன்மையுள்ளவன்
நிதி - சமநோக்குடையவன், அறக்காவலன்
நிதிபதி - குபேரன்
நித்தியமுத்தன் - கடவுள்
நித்தியன் - கடவுள்
நித்தியாநந்தன் - கடவுள்
நிமலன் - கடவுள், சுத்தன்
நிரஞ்சனன் - அருகன், கடவுள், வியாபி
நிரந்தரன் - கடவுள்
நிரம்பரன் - அருகன், கடவுள், சிவன், ஆடையில்லாதவன்
நிரவயவன் - கடவுள்
நிராகரன் - கடவுள்
நிராகாரன் - கடவுள், சிவன், திருமால்
நிராலம்பன் - கடவுள்
நிருமலன் - அருகன், கடவுள், சிவன், மலத்தொடக்கற்றவன், திருமால்
நிர்க்குணன் - கடவுள்
நிலவன் - சந்திரன்
நிலிம்பன் - தேவன்

நீ

நீலகண்டன் - சிவன்
நீலக்கிரீவன் - சிவன்
நீலமேனியன் - திருமால்
நீலவன் -



நெ

நெடுமால் - திருமால்
நெடுவேளாதன் - ஒரு வள்ளல்
நெற்றிக்கண்ணன் - சிவன்

நே

நேசமணி - நேசத்தில் சிறந்தவன்
நேசன் - நேசிப்பவன்
நேமிநாதன் - அருகன், கடவுள், திருமால், வருணன்
நேமியான் - திருமால்
நேமிவலவன் - அரசன், கடவுள்





பகலவன் - சூரியன்
பகவன் - வள்ளுவனின் தந்தை, தெய்வமானவன், கதிரவன்
பங்கயன் - கதிரவன், நான்முகன்
பங்கயாசனன் - நான்முகன்
பஞ்சவன் - பாண்டியன்
பஞ்சாயுதபாணி - திருமால்
பஞ்சானனன் - திருமால்
படிறில் - வஞ்சமற்றவன்
பதங்கன் - கதிரவன்
பதுமநாபன் - திருமால்
பதுமன் - நான்முகன்
பரசுபாணி - சிவன், பரசுராமன்
பரசூதனன் - சிவன், பரசுராமன்
பரணி - உலகு
பரந்தாமன் - திருமால்
பரமபாகவதன் - திருமாலடிமையிற் சிறந்தவன்
பரமன் - கடவுள்
பரமாத்துமன் - கடவுள், பெருமையிற் சிறந்தோன்
பரமேசுரன் - கடவுள், சிவன்
பராங்கதன் - சிவன்
பலாரி - இந்திரன்
பழனி - “பழம் நீ” என்றழைக்கப்பட்ட முருகன்
பற்குணன் - அருச்சுனன்
பற்கன் - சிவன், சூரியன், திருமால், நான்முகன்


பா

பாகசாதனி - அருச்சுனன், இந்திரன், மயன், சயந்தன்
பாகசாதனன் - இந்திரன்
பாக்கியம் - நல்வினை, செல்வம்
பாபநாசன் - கடவுள்
பாசாங்குசன் - விநாயகன்
பாணன் - பாட்டுத் தலைவன்
பாண்டரங்கன் - சிவன்
பாண்டியன் - மதுரை நகரத்து வேந்தன், மூவேந்தர்களில் ஒருவன்
பாண்டு - பாண்டு மன்னன்
பாரங்கதன் - கல்விக் கடலில் கரை கண்டவன், தாங்குபவன்
பாரதி - கலைமகள், புலவன், பைரவி
பாரி - கொடை வள்ளல்
பரரமேட்டி - சிறந்த துறவி
பார்த்தசாரதி - அருச்சுணன், தேர்ப்பாகன், கண்ணன்
பார்த்திபன் - அரசன்
பாலலோசநன் - இறைவன்
பாலன் - இடையன், ஏழு வயதுக்கு உட்பட்டோன், கோபாலன்
பால்வண்ணன் - பலராமன், சிவன்
பாவதி - முருகன்
பாவாணர் - புலவர்




பிங்கலன் - குபேரன், சிவன், கதிரவன்
பிரகாசம் -
பிரகாஷ் -
பிரசன்னன் - கடவுள்
பிரஞ்சன் - அறிஞன், புலவன்
பிரபாகரன் - சோமன், சூரியன், அக்கினி தேவன்,
பிரபு - சிறந்தோன், கொடையாளி, தலைவன், உயர்குலத்தவன், மிகுந்த பொருள் படைத்தவன்
பிரவீணன் - சமர்த்தன்
பிரான் - தலைவன், எப்பொருட்கும் இறைவன், கடவுள், சிவன், திருமால்
பிள்ளையார் - முருகன், சம்பந்தன், விநாயகன்
பிறைசூடி - சிவன்
பினாகபாணி - சிவன்
பினாகி - சிவன்
பின்னைகேள்வன் - திருமால்



பீ

பீதாம்பரன் - திருமால்


பு

புங்கவன் - சிறந்தோன், கடவுள், குரு, புத்தன்
புட்பசரன் - மன்மதன்
புட்பாகன் - திருமால்
புண்டரீகக்கண்ணன் - திருமால்
புண்ணியன் - அரசன், அருகன், சிவன், சுத்தன், தருமவான், புத்தன்
புத்திகரன் - விஷேட தீட்சை பெற்றவன், அன்பன், வஞ்சகன்
புனிதன் - அரசன், அருகன், இந்திரன், சிவன்
புயங்கன் - சிவபிரான்
புரஞ்சரன் - உயிர், சீவன், ஓர் அரசன்
புரதகனன் - சிவன்
புரவவலன் - அரசன், காப்போன், கொடையாளன்
புராணகன் - நான்முகன், புராணணம் படிப்போன்
புராரி - சிவன்
புருகூதன் - இந்திரன்
புருடவாகனன் - குபேரன்
புருடோத்தமன் - சிறந்தவன், திருமால்
புலவன் - அருகன், அறிஞன், தேவன், தேவேந்திரன், புதன், போர்வீரன், முருகன், வானோன்
புவன் - இறைவன்


பூ

பூதகிருது - இந்திரன்
பூதநாதன் - சிவபிரான், கடவுள்
பூதபதி - சிவன்
பூதபாவநன் - திருமால்
பூதரன் - அரசன், திருமால்
பூதாரன் - திருமால்
பூதாவேசன் - திருமால்
பூதேசன் - சிவன்
பூபதி - அரசன், ஒரு குளிகை மல்லிகை, ஆதிசேடன்
பூபாலன் - அரசன், வேளாளன், பூமகன்
பூமகள் மார்பன் - திருமால்
பூமகன் - செவ்வாய், பிரமன்
பூமன் - செவ்வாய், நான்முகன், காமன், அரசன்
பூமிகொழுநன் - திருமால்
பூரட்சகன் - அரசன்
பூரணன் - அரன், அருகன், கடவுள், திருமால்
பூரணை - ஐயனார் தேவிகளில் ஒருத்தி, நிறைவு
பூர்வீகன் - பழமையோன்
பூவமுதம் - தேன்
பூவன் - பூமியில் உள்ளவன், பூவில் உள்ளவன், நான்முதன்
பூவைவண்ணன் - காயாம்பூமேனியன், திருமால்
பூழியன் - சேரன், பாண்டியன்
பூழிவேந்தன் - பாண்டியன்


பெ

பெண்பாகன் - சிவபிரான்
பெம்மான் - உயர்ந்தவன், பெருமான், பெரியோன், கடவுள்
பெரியசீயர் - மணவாளமா முனிகள்
பெருமாள் - திருமால், பெருமையிற் சிறந்தோன், சேரர் பட்டப்பெயர், கடவுள்
பெருமுத்தரையர் - செல்வர், சொந்தப்பொருட்காரர்
பெற்றத்துவசன் - சிவன்



பே

பேகன் - கொடை வள்ளல்
பேநன் - சந்திரன், சூரியன்
பேராளன் - பெருமையுடையவன், பல பெயர்களைத் தரித்தவன், மிருக சீரிடம், ஊஓகினி
பேனன் - சூரியன், சந்திரன்

பை

பைரவன் - சிவன், வயிரவன்


பொ

பொதியன் - அகத்தியன்
பொதியவெற்பன் - பாண்டியன்
பொருட்செல்வி - திருமகள்
பொருநன் - அரசன்
பொருப்பரையன் - மலையரசன்
பொருண்மன்னன் - குபேரன்
பொருப்புவில்லான் - சிவன்
பொருநைத்துறைவன் - சேரன்
பொறையன் - சேரன், தருமராசன்
பொறையாளன் - பொறையன், அடக்கமுடையான், தருமன், குணவாளன்
பொற்கேழ் - பொன் கொழித்து விளங்குபவன்
பொன்னம்பலம் - கனகசபை
பொன்னன் - இரணியன், அருகன், பொன்னுடையவன்

போ

போகசிவன் - சதாசிவன்
போதாந்தன் - கடவுள், நான்முகன்
போதிவேந்தன் - புத்தன், மலையரசன்

பௌ

பௌதிகன் - சிவன்
பௌத்தன் - புத்த சமயத்தான்
பௌத்திரர் - தூய்மையானவர், பேரர்
பௌமன் - செவ்வாய், அங்காரகன்
பௌராணிகன் - புராணக் கொள்கையுடையவன், புராணஞ்சொல்பவன்
பௌரிகன் - குபேரன்





மகபதி - இந்திரன்
மகரவாகணன் - வருணன்
மகராசன் - அரசன்
மகவான் - இந்திரன், சிவன், மகப்பெறுடையவன், யாகம் செய்பவன்
மகாசேனன் - சேனாபதி, புத்தன், முருகன்
மகாதேவன் - கடவுள், சிவன், தெய்வம், வருணன்
மகாநடன் - சிவன்
மகாநந்தன் - சிவன்
மகாநீலம் - மரகதம்
மகாமுனி - அகத்தியன், புத்தன், வசிட்டன், வியாசன்
மகாமேதை - பேரறிவு, பேரறிவாளன்
மகாரதன் - பதினோராயிரம் தேருக்குத் தலைவன்
மகாராசன் - அதிபதி, அரசன், கலவையற்றவன், குபேரன், சமணகுரு, செல்வம் உடையோன்
மகாலயன் - கடவுள், நான்முகன்
மகாவீரன் - ஆக்கினி, திருமால், வீரன்
மகானுபாவன் - பேரறிஞன்
மகிணன் - மகிழ்நன், கணவன், மருதத் தலைவன், சுவாமி
மகபதி - இந்திரன்
மகிபன் - அரசன்
மகீபதி - அரசன்
மகீபன் - அரசன்
மகேசன் - சிவன்
மகேந்திரன் - இந்திரன்
மங்கைபங்கன் - சிவன்
மணவழகன் -
மணி - அணி, ஆபரணம், குரல் கொடுப்பவன்
மணிகண்டன் - சிவன்
மணிமான் - கதிரவன்
மணியம் -
மணிவண்ணன் - திருமால்
மதங்கன் - முனிவன், சண்டாளன், முருகன், பாணன்
மதன் - அழகு, காமன், மாட்சிமை
மதிசகன் - மன்மதன்
மதிசூடி - சிவபிரான்
மதிமகன் - புதன்
மதுகரன் - அன்பன்
மதுசூதனன் - திருமால்
மதுராபதி - பாண்டியன், முன்னாளில் மதுரையைக் காத்திருந்த ஒரு தெய்வம்
மயிலன் - துயர் துடைப்பவன்
மயிலூர்தி - முருகன்
மயூரன் - நாட்டிய வல்லுனன்

மரகதமேனியன் - திருமால்
மரகதன் - குபேரன்
மருச்சகன் - அக்கினி, இந்திரன்
மருச்சுதன் - அனுமான், வீமன்
மலரவன் - நான்முகன்
மலர்வேந்தன் - இளகிய மனம் படைத்த அரசன்
மலையமான் - சேரன்
மலையரசன் - இமவான்
மலையரையன் - இமவான், மலையமான்
மலையன் - ஒரு சாமை, கடையெழு வள்ளலில், குறிஞ்சி நிலத் தலைவன், சேரன்
மல்லன் - வளம் நிறைந்தவன்
மல்லையா - வளம் நிறைந்தவன்
மழுவாளி - சிவன், பரசுராமன்
மழுவேந்தி - சிவன், பொய்யன்
மழையோன் - திருமால்
மழைவண்ணன் - திருமால்
மன்மதன் - காமன்
மன்றவாணன் - கூத்தபிரான்
மன்னன் - அரசன்
மன்னுமான் - கடவுள், நான்முகன்

மா

மாசேனன் - அருகன், கடவுள், குமரன், திருமால்
மாசிலா -
மாசிலன் - மாசற்றவன்
மாணிக்கம் - சிவப்புக்கல், செம்மணி
மாணிக்கவாசகர் -
மாண் - இறைவன், மாண்புடையவன்
மாதவன் - திருமால், வசந்தன்
மாதாநுபங்கி - திருவள்ளுவர்
மாதிரவடையான் - சிவன்
மாதுபங்கன் - சிவன்
மாதொருபாகன் - சிவன்
மாநடன் - சிவன்
மாபெலை - சிவன்
மாயவன் - திருமால்
மாயாசுதன் - புத்தன்
மாயோன் - திருமால்
மாருதி - அனுமன், வீமன்
மார்த்தாண்டன் - எருக்கு, பன்றி, சூரியன்
மாலவன் - புதன்
மாலன் - திருமால், வேடன்
மாலோன் - திருமால், புதன்
மால்தங்கை - உமை
மாவீரன் - அதிவீரன்
மாறன் - போர்வீரன், தமிழ்க்குடிமகன்
மானதுங்கன் - மானமிக்கவன்
மானபரன் - தன்மதிப்புள்ளோன், அரசர் சிலர் பூண்ட பட்டப்பெயர்
மானவன் - மனிதன், பெருமையுடையவன், அரசர் படைத்தலைவன், வீரன்
மானிதை - மகத்துவம்

மி

மிகிரன் - சந்திரன், சூரியன்
மிசிரன் - ஒரு சிறப்புப் பெயர்
மிருதண்டன் - சூரியன்
மிருதாண்டன் - கதிரவன்

மிருத்தியுஞ்சயன் - சிவன்

மீ

மீனகேதனன் - காமன், பாண்டியன்
மீனத்துவசன் - மீனகேதனன்


மு

முகிலூர்தி - இந்திரன்
முகில்வண்ணன் - திருமால்
முகுந்தன் - திருமால்
முக்கண்ணன் - சிவன், விநாயகன், வீரபத்திரன்
முஞ்சகேசன் - திருமால்
முண்டகன் - நான்முகன்
முதல்வன் - அரசன், அரன், அருகன்
முத்தன் - அரன், அருகன், சுத்தன், புத்தன், வீடுபேற்றிற்குரியோன், வைரவன்
முத்து - ஒரு வகை இரத்தினம், முத்துக்குமாரனின் சுருக்கம்
முத்துமாறன் -
முந்தன் - கடவுள், மூத்தோன்
முரகரி - திருமால்
முரசகேதனன் - தருமன்
முரமர்த்தநன் - திருமால்
முரளி -
முரளிதரன் -
முராரி - திருமால்
முருகன் - இளையோன், குமரன்
முறைவன் - சிவபிரான்,பாகன்
முற்றன் - பூரணன், முத்தன், ஞானி
முனியாண்டி

மூ

மூர்த்தி - அருகன், சிவன், தலைவன், தேவன், புத்தன்
மூர்த்திகன் - குமரன், வயிரவன்
மூவுலகேந்தி - கடவுள்

மே

மேகநாதன் - இந்திரசித்து, வருணன், நவச்சாரம்
மேகநாயகன் - இந்திரன்
மேகவண்ணன் - திருமால்
மேகவாணன் - இந்திரன், கருங்கல், சிவன்
மேதகன் - மதிப்பு, மேன்மை


மை

மைந்து - வலிமை, அழகு, வீரம், விருப்பம்


மோ

மோகன்


மௌ



யக்கராசன் - குபேரன்
யமாரி - சிவன்

யா

யாதவன் - இடையன், கண்ணன்
யாமியன் - அகத்தியன்
யாமநேமி - இந்திரன்

யு

யுகாதி - அருகன், ஆண்டுத் தொடக்கம், கடவுள்
யுஞ்சானன் - யோகாப்பியாசம் செய்வோன்
யுதிட்டிரன் - தருமன்
யுவராசன் - இளவரசன்

யூ

யூகவான் - அறிஞன்


யோ

யோகசரன் - அனுமான்
யோகி - அரன், அருகன், ஐயன், நிட்டை செய்வோன், முனிவன், சன்னியாசி
யோகேஸ்வரன்
யோசனன் - கடவுள், பரம்பொருள்

யௌ




வசந்தசகன் - மன்மதன்
வசந்தன் - மன்மதன்
வசீகரன் - ஈர்க்கும் தன்மை கொண்டவன்
வசீரன் - வீரன், குதிரைவீரன், மந்திரி
வச்சிரகங்கடன் - அனுமான்
வச்சிரதரன் - இந்திரன்
வச்சிரபாணி - இந்திரன்
வச்சிரவண்ணன் - குபேரன்
வஞ்சிவேந்தன் - சேரன்
வடமூலகன் - சிவன்
வடிவேல் - முருகன்
வயிரவன் - ஒரு கடவுள், சிறுகீரை
வரதனு - அழகு
வரதன் - அரி, அரன், அருகன், வரம் அருளத் தக்கோன்
வரவிருத்தன் - சிவன்
வராங்கனை - உருவிற் சிறந்தவன்
வராணன் - இந்திரன், சதமகன், இமவான்
வரேந்திரன் - அரசன், இந்திரன், வரத்தின்மிக்கோன்
வரோதயன் - வரத்தால் தோன்றியவன்
வர்ணகவி - குபேரன் மகன்
வலாரி - இந்திரன்
வல்லகி - வீணை, தளி
நன்றி: எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய தோழருக்கு.

அப்பாவிகளை பந்தாடும் பாகிஸ்தானிய படையினர் (வீடியோ)



பாகிஸ்தானில் தீவிரவாத சந்தேகநபர்களை இராணுவ சீருடையில் இருப்பவர்கள் மிருகத்தனமாக அடித்து துன்புறுத்துவதை காட்டும் வீடியோ. பாகிஸ்தானை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களால் பதியப்பட்ட வீடியோ, வெளிநாட்டு தொடர்பாளர்களுக்கு அனுப்பப்பட்டது. தாலிபான் வேட்டையில் இறங்கியுள்ள பாகிஸ்தானிய படையினர் அக்கிரமங்களுக்கு, அப்பாவி மக்களும் பலியாகி வருவதை இந்த வீடியோ நிரூபிக்கின்றது.

Video Shows 'Pakistan Army Abuse'
The 10-minute clip, shows men in Pakistan army uniforms questioning at least four suspects in turn, before pushing them to the ground and kicking and whipping the cowering and screaming detainees.
Posted October 03, 2009

நன்றி:கலையகம்

Sunday, October 4, 2009

இரத்தம் கொதிக்கிறதா? கொதித்தால் மட்டும் போதாது, தமிழராகிய நாம் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.


























என் மூத்த மகன் பிரபாகரன் - சீமானின் தாயார் அன்னம்மாள்



`படுபாவி ராஜபக்ஷே போரை நிறுத்துறேன்னு சொல்லிப்போட்டு கூட்டம் கூட்டமா நம்மாளுகளை கொல்றானேய்யா. இந்த காக்கா குருவியைவிட நம்ம உசுருக ஈனமாயிடுச்சு. எப்பையா இதுக்கெலாம் தீர்வு கெடைக்கும். நம்ம வாழ்க்கைல அமைதி பெறக்கும்?”காலையிலிருந்து மிளகாய்த் தோட்டத்தில் வேலைபார்த்த அலுப்போ களைப்போ சிறிதும் தெரியாமல் இலங்கையின் இனப்படுகொலைகுறித்துப் பேசும் இவர்கள்தான் இயக்குநர் சீமானின் தாய் அன்னம்மாள். தந்தை செபஸ்த்தி.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூரில்இருக்கிறது சீமானின் வீடு. கிராமத்து எளிமையும், யதார்த்தமும் துளியும் குறையாத வீடு அது.

“என் மகன் சீமானை உள்ள தூக்கிப் போட்டாங்க. ஒரு பாவமும் செய்யாதது ஒலகத்துல தப்பு போல. அந்தப் புள்ளை கேக்குற நெசமானகேள்விக்கு யாருகிட்டவும் பதிலில்லை. புள்ளையைப் பார்த்தே ரொம்ப நாளாச்சு. எலந்தைப் பழமும் எள்ளுருண்டையும் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். பட்டணத்துக்குப் போறவுககிட்ட கொடுத்து விடணும்”என்றபடி தாய்ப்பாசம் தன்னை மீறிக் கசிய… கிராமத்து போராளியாகப் பேசுகிறார் சீமானின் தாய் அன்னம்மாள்.

சீமானைப் பற்றி சொல்லுங்கள்?

“பஞ்சாமிர்தமா அஞ்சு புள்ளைக. மூணு பையக, ரெண்டு பொண்ணுக. சீமான்தான் ரெண்டாவது. மெத்தப் படிப்பும் தம்பிதான். சடுகுடு, கராத்தே,ஆடுறது, பாடுறது, ஓடுறது, ஓடியாறது, திரைப்படம் பாக்குறது, கவிதை எழுதுறதுன்னு இப்பயிருக்கிற மாதிரித்தான். பொதுச்சங்கதிகளில் ஈடுபடவும் அதுக்கான வேலைகளையும் செஞ்சுகிட்டே இருப்பான். தனக்குன்னு சிந்திக்கத் தெரியாத புள்ளை. சடுகுடு ஆடி காலை பெசக்கிட்டு, கராத்தேவுக்குப் போயி கைய பெசக்கிட்டு வரும். வயல்வேலை அத்தனையும் பாக்கும்.

பள்ளிக்கோடம் போறப்ப புதுசா செருப்பு வாங்கி போட்டனுப்புவே. மக்கா நாளு செருப்பு இருக்காது. நண்பர் கேட்டாகன்னு குடுத்துடும். அதே போல புதுச் சொக்கா போட்டுவிடுவேன். நண்பர் யாராவதுகேட்டாகன்னு குடுத்துடும். நண்பருக்குனா சீமான் உயிரையும் குடுக்கும்.

அந்த கொணந்தான் இன்னைக்கு ஊருக்கும், நம்ம மக்களுக்காகவும் போராட வைக்குது. நல்ல வழியைச் சம்பாதிச்சிருக்காரு. இப்பப் போற பாதையும் நல்ல பாதைதான். முடிவும் நல்லாதான் இருக்கும்.

நம்ம மக்கள் சாகக் கூடாது, நல்லா இருக்கணும்னுதான் நெனைக்கிறாரு. அது தப்புங்களா தம்பி? அவரு நம்ம மக்களுக்காக போராடுறது எங்களுக்குப் பெருமைதான். தம்பி, இன்னமும் தகிரியமாபோராடணும்னு நெனைக்கிறோம்.’

சீமானிடம் வெளிப்படும் போராட்ட குணத்திற்கு நீங்கள் தானே ஆணிவேர்?

“எவ்வளவு காலந்தான் பூமியில வாழப்போறோம். ஈழத்துல நம்ம ஆட்கள் படுற அவதி இங்க தெரியணும்ல. காசு பணம் சம்பாதிக்க வேணாம். சொத்து சொகம் வேணாஞ் சாமி. தம்பிக்காக காலம்பூரா நாங்க ஒழைப்போம். அல்லாடுற நம்ம மக்களை நல்ல நிலைக்கு தம்பி கொண்டு வந்தாலே போதும்.”

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பற்றி சீமான், எல்லா மேடைகளிலும் பேசுகிறாரே?

“பேசட்டுமே! அதுக்காக சந்தோஷந்தாபடுறேன்! பிரபாகரன்தான் என் மூத்த மகன்!! அதுக்கப்புறந்தான் எம் புள்ளைகயெல்லாம்.

எம் மூத்த மகன் பிரபாகரன் பண்றது கெடுதலா? நன்மைதானே! நம்ம மக்கள் யாரும் சாகக்கூடாதுன்னு நெனைக்கிறாரு. தம்பி செய்யுறது சரிதான்! இப்ப நடக்குற போரில் நமக்கு வெற்றி கெடைக்கும். நம்ம மக்கள் நல்ல நிலைக்கு வந்துடணும் என்கிறதுக்காக நான் வேண்டாத தெய்வமில்லை. பிரபாகரன் கண்டிப்பா ஜெயிக்கும். தமிழ் ஈழம் கெடைக்கும். ரவைக்கும் பகலுக்கும் கஷ்டப்படுற பிரபாகரன் நல்லாஇருக்கணும். அந்த சாமி அவருக்கு நீண்ட ஆயுசைக் கொடுக்கட்டும்?

அங்க பிஞ்சுக் கொழைந்தக கை காலெல்லாம் குண்டுபட்டு பொத்தலாயி மருந்தில்லாம கடலோர மணலுல அனாதையா படுக்க வச்சுருக்கிற காட்சிகளை பாத்ததுலருந்து சோறு எறங்கலை தம்பி.

பள்ளிக்கூடம்கூட நிம்மதியா போக முடியலை. பதுங்கு குழிக்கு ஓடுதுக. ஒரு பெட்டியைத் தூக்கிட்டு ஊரைவிட்டே போறாக. ஒரு வேளைச் சோத்துக்கே தட்டுத் தடுமாறுதுகளே. படுக்கிறது, குளிக்கிறது,சாப்பிடுறது, சுடுகாடெல்லாம் ஒரே எடத்துக்குள்ள நடக்குதே தம்பி.

போதாததுக்கு, அந்தப் பயலுக நம்ம புள்ளைகள கெடுக்கிறானுக. கருவையெல்லாம் கலைச்சு அநியாயம் பண்றானுக. அதுதான் எனக்கு வகுத்தெரிச்சலா இருக்கு. காசுக்காக வேஷம் போட்டுத் திரியறாய்ங்க.”

சீமான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போவதாகக்கூட பேச்சுகள் எழுகிறதே?

“தானா கையூண்டி கரணம் பாஞ்சுதான் இந்த நிலைக்கு வந்துருக்கு தம்பி. எல்லாமே சீமானோட முடிவுதான். அரசியலுக்குப் போக இஷ்டமெல்லாம் கெடையாதுன்னு தம்பி தெளிவா சொல்லிடுச்சு! சம்பாதிக்கணும்.. வீட்டுக்கு சேக்கணுங்கிற ஆசை கிடையாது. மக்கள் நல்லா இருக்கணும். மக்களுக்காக மகன் போராடுறான். போராடிவெற்றி பெற்று வரட்டும். எம் மவராசனை தமிழ் மக்களுக்குத் தாரைவார்த்தாச்சு. இனி, அவுக பாத்துக்குவாக!

தம்பிக்கு கல்யாணம் பண்ணிடலாம்னு இருக்கோம். `அங்க சாகையில் இங்க எனக்கெதுக்கு கல்யாணம்’னு கேக்குறாரு. அங்க மக்கள் துயரம் நீங்கினாத்தான் கல்யாணம் பண்ணிக்குவேங்கிறாரு. தனி மனுஷனா மூத்த மகன் பிரபாகரன் போராடுவதை மக்கள் புரிஞ்சுக்கணும். அவர் குடும்பம், குட்டின்னு ஒதுங்கி வாழ இடமா இல்லை. நம்ம மக்கள் சாகக் கூடாதுன்னு நெனைக்கிறாரு. எல்லாரும் சமமா வாழணும்னுநெனைக்கிறாரு தப்பில்லையே.”

இந்தத் தேர்தல் எப்படியிருக்கும்?

“இலங்கையில் நடக்குற `இனக் கொலைகளை’ வாக்கா மாத்தணும்னு ஆளாளுக்குத் துடிக்கிறாங்க. ஒண்ணும் பண்ண முடியலைங்கிறப்ப எதையாவது பண்ணி மக்களை திசை திருப்புறாக. ஆனா, இது ரொம்பத் தாமதம். ஒலகம் பூரா இருக்குற தமிழர்கள் முழிச்சுகிட்டாக.. அங்க இன்னல்படுற நம்ம குழந்தைகளோட ரத்தத்தையும் கண்ணீரையும் விரயமாக்கி அரசியல் பண்றவுகளை எந்த சாமியும் எப்பவும்மன்னிக்காது. தமிழினம் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும்கண்ணீருக்கும் அதுக்குக் காரணமான எல்லோரும் பதில் சொல்லியே தீரணும்.” வீரம் செறிந்த தமிழ்த் தாய் அன்னம்மாளின் முகத்தில் கண்ணீர் உருண்டோடுகிறது..

நன்றி-குமுதம்
நன்றி:நாம் தமிழர்

Saturday, October 3, 2009

நான் ரசித்த மிகவும் அருமையான புகைப்படங்கள், நீங்களும் ரசிங்களேன்.