கென்யா நாட்டின் மேற்குப்பகுதியில் "கீசி" இன மக்கள் வாழும் பிராந்தியத்தில் 15 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். சுமார் 100 பேர் கொண்ட கும்பல் ஒன்று, வீடுகளில் சோதனை நடத்தி இந்த 15 பேரையும் வெளியே இழுத்தெடுத்து. அவர்களை சூனியக்காரிகள் என குற்றம் சுமத்தி தெருவில் பலர் முன்னிலையில் உயிரோடு கொளுத்தியது. கென்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த திகில்சம்பவம், அரசாங்கத்தை விரைந்து நடவடிக்கை எடுக்க தூண்டியது. கும்பல் வன்முறையில் ஈடுபட்ட சிலரை கைது செய்தது. கிறிஸ்தவ மதம் அதிகாரம்செலுத்திய மத்திய கால ஐரோப்பாவில் நிலவிய "சூனியக்காரிகள் எரிப்பு வன்முறை", இன்று ஆப்பிரிக்க கிறிஸ்தவர்களிடையே பரவி வருகின்றது. மதம் வளர்க்கும் மூட நம்பிக்கைகளின் தீய விளைவுகளில் ஒன்று இது. அதிர்ச்சிதரும் "சூனியக்காரிகள் எரிப்பு" வீடியோவை இங்கே இணைத்துள்ளேன். எச்சரிக்கை : இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்ப்பது நன்று.
Kenya mob burns 15 women to death over witchcraft
நன்றி:கலையகம்.
Tuesday, October 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment