1987 ஆம் ஆண்டில் இந்தியாவின் தலையீட்டுடன் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மாகாண சபைகளுக்கு வழங்கியிருந்த முதன்மையான அதிகாரங்களில் சுகாதார நிர்வாகமும் ஒன்று. அதன்படி - மாகாண சுகாதார அமைச்சுக்கள் - மத்திய அரச சுகாதார அமைச்சின் அனுமதியோ உத்தரவோ இல்லாமலேயே - சுகாதாரம் தொடர்பான வேலைத் திட்டங்களைத் தத்தமது மாகாணத்திற்குள் செயற்படுத்தும் அதிகாரத்தினைக் கொண்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 2009 ஆம் ஆண்டில் வன்னிப் போர்க்களப் பகுதியில் இருந்து இலட்சக்கணக்கில் வெளியேறிய தமிழ் மக்களில் பெரும் பகுதியினர் செட்டிக்குளம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தடுப்பு முகாம்களை (Detention Camps) சிறிலங்கா அரசு 'நிவாரணக் கிராமம்' (Relive Villages) என்றும், அரசு சாரா நிறுவனங்கள் 'நிவாரண வலயம்' (Relive Zones) என்றும் பெயரிட்டு வைத்துள்ளன. ஆனால் - உண்மையில் இவை எல்லாம் 'தடுப்பு வதைபுரி முகாம்கள்' (Nazi style Concentration Camps) என்பது நாம் அறிந்ததே. அதன்படி - வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ்வரும் வவுனியா மாவட்ட சுகாதாரச் சேவையின் கீழ் - செட்டிக்குளம் தடுப்பு முகாம்களது சுகாதாரச் செயற்திட்டங்களும், செட்டிக்குளம் அரச மருத்துவமனையின் பணிகளும் இதுவரை காலமும் மிகச்சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அந்த நிலையில் - செட்டிக்குளம் பகுதி தடுப்பு முகாம்களில் மேற்கொள்ளப்படும் மருத்துவ மற்றும் சுகாதாரச் செயற்பாடுகளை அங்கு இருந்தே நேரடியாக இயக்குவதற்கான இணைப்புச் செயலகம் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் 2009 ஆம் ஆண்டில் செட்டிக்குளம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கக் கட்டடத்தில் அமைக்கப்பட்டதுடன் தேர்ந்து எடுக்கப்பட்ட திறமை மிக்க தமிழ் மருத்துவர் ஒருவர் இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். வட மாகாண சபையின் சுகாதார அமைச்சும், வவுனியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து - முற்றுமுழுதாகத் தமிழ் மருத்துவர்களது தலைமையில் - தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களுக்கான சுகாதார மற்றும் மருத்துவ சேவையினை மிகச் சிறப்பாக வழங்கி வந்தன. ஒவ்வொரு உயர்மட்ட சுகாதார நிர்வாகக் கலந்துரையாடல்களிலும் அந்த மக்களது சுகாதார மற்றும் மருத்துவப் பிரச்சினைகளைத் தெளிவான புள்ளி விபரங்களுடன் முன்வைத்துத் தீர்வுகாண முற்பட்டன. இது சிறிலங்கா அரச நிர்வாக இயந்திரத்துக்குச் சங்கடத்தினை விளைவித்தது. நேரடியாக சுகாதாரத்துறையினருடன் முரண்படுவது அனைத்துலக மட்டத்திலான சிக்கல்களைக் கொண்டுவரும் என்பதை உணர்ந்த சிறிலங்கா அரச வட்டாராம் - தந்திரோபாயமாக - பாதுகாப்பு அமைச்சு மற்றும் படைத்துறை மூலம் தமிழ் மருத்துவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியது. இந்த வேளையில் - அண்மையில் - எதிர்பாராத விதமாக - அந்த தமிழ் மருத்துவ இணைப்பாளர் வீதி விபத்து ஒன்றில் சிக்கிப் படுகாயம் அடைந்து விட்டார். அதனை அடுத்து, அவரது இடத்துக்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு - மாகாண சுகாதார அமைச்சின் ஆலோசனை பெறப்படாமலேயே - சிங்கள இனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை அவசர அவசரமாக நியமித்துவிட்டது சிறிலங்கா மத்திய சுகாதார அமைச்சு. இது ஒன்றும் இயல்பாக நடந்துவிட்ட ஒரு சாதாரண நிர்வாகச் சம்பவம் அல்ல. மிகவும் நுணுக்கமாக - அரவம் எதுவும் இன்றி - அரங்கேற்றப்படும் ஒரு பாரிய பேரினவாதத் திட்டம். தமிழ் இனத்தை வேரறுக்கும் மாறாத தனது இலட்சியத்தை அடைய, சிங்களப் பேரினவாதம் மாற்றி மாற்றிச் செயற்படுத்தும் பேரினவாத வடிவங்களில் ஒன்றுதான் - இப்போது இந்த மருத்துவச் சுகாதாரத்துறை. அந்தத் தமிழ் மருத்துவ இணைப்பாளரைப் படுகாயப்படுத்திய அந்த வீதி விபத்துக் கூட சந்தேகத்துக்கு இடமான விதத்திலேயே நடந்தேறியதாக வவுனியா மாவட்ட தமிழ் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. அதன்பின்பு - சிங்களவர் ஒருவர் செட்டிக்குளம் பகுதிக்கான மருத்துவ சுகாதார இணைப்பாளராக நியமிக்கப்பட்டதன் பின்பு - சிறிது சிறிதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஓரங்கட்டப்பட்டு, சிறிலங்கா மத்திய சுகாதார அமைச்சும் சிங்கள ஆதிக்கமும் செட்டிக்குளம் பகுதியில் மெல்ல மெல்ல ஊடுருவத் தொடங்கின. அதிலும் குறிப்பாக - இணைப்பாளராகச் சிங்கள மருத்துவரை நியமித்தவுடன், ஒவ்வொரு தடுப்பு முகாமுக்கும் பொறுப்பாகச் செயற்பட்ட தமிழ் மருத்துவர்களது பரிந்துரைகள் எவையுமே செல்லுபடியற்றவையாக ஆக்கப்பட்டன. உதாரணமாக - அதுவரை காலமும் மருத்துவ மரபின் பிரகாரம் - தடுப்பு முகாமில் இருக்கும் ஒரு நோயாளி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டிய தேவை இருப்பதாக ஒரு மருத்துவர் கருதினால் எதுவித தடையுமின்றி நோயாளர் காவு வாகனம் (Ambulance) மூலம் குறித்த நோயாளி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வசதி இருந்து வந்தது. ஆனால் இப்போது - தடுப்பு முகாமில் இருக்கும் ஒரு நோயாளி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என ஒரு தமிழ் மருத்துவர் கருதினால் கூட (அவர் சிறப்பு மருத்துவ நிபுணராக இருப்பினும் கூட) மேற்-பரிந்துரை ஒரு சிங்கள மருத்துவரால் அல்லது இராணுவ மருத்துவரால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனை நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்பின்னர் - அந்தச் சிங்கள இணைப்பாளரின் அனுமதி கிடைக்காத நிலையில் - குழந்தைகள், வயோதிபர்கள் உட்பட தமிழ் நோயாளர்கள் தடுப்பு முகாம்களில் கொத்துக் கொத்தாகச் செத்து விழத் தொடங்கினர். இதனால் - தமது கண் முன்னாலேயே சொந்தங்கள் செத்து வீழ்ந்து கொண்டிருக்கும் போதும் எதுவும் செய்ய வகையில்லாத தமது கையாலாகாத நிலையால் மனம் வெதும்பிய தமிழ் மருத்துவர்கள் ஒவ்வொருவராக செட்டிக்குளம் பகுதியில் இருந்து வெளியேற தொடங்கினர். தற்போது - செட்டிக்குளம் பகுதியில் உள்ள ஏழு தடுப்பு முகாம்களில் எதிலுமே பொறுப்பு மருத்துவர்களாகத் தமிழர்கள் இல்லை. எல்லாவற்றிலுமே சிங்களவர்களே பொறுப்பாக உள்ளனர். இது இவ்வாறு இருக்க - நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுவந்த செட்டிகுளம் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியின் (Medical Officer for Health அல்லது Divisional director of Health Services) அதிகாரங்கள், அவர் ஒரு தமிழர் என்பதால் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட சிங்கள் மருத்துவர்களிடம் கொடுக்கப்பட்டுவிட்டன. சிறிலங்காவின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத ஒரு நடைமுறையாக - நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கை (Preventive and Curative) செட்டிக்குளம் பிரதேச சுகாதார அதிகாரியிடம் இருந்து பறிக்கப்பட்டது. இதன் பின்னால் இன்னொரு பாரிய சதி நடவடிக்கை ஒளிந்திருக்கிறது. சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிகளில் சிசு மரணங்கள் (Infant Deaths), கர்ப்பிணிகள் மற்றும் பிரசவத் தாய்மார்களது (Maternal Deaths) இறப்புக்கள் தொடர்பாக அறிக்கையிடுவதும் அடங்குகின்றது. அந்த அறிக்கையானது அதிகாரபூர்வப் புள்ளி விபரங்களில் வெளியானால் அரசுக்குச் சிக்கல்களை உருவாக்கும். இதனாலேயே தமிழ் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு முகாம்களுக்குப் பொறுப்பான சிங்கள மருத்துவர்களிடம் முடக்கப்பட்டது. விளைவாக - கடந்த ஐந்து மாத காலத்தில் - செட்டிக்குளம் பகுதியில் உள்ள தடுப்பு முகாம்களில் மட்டும் இறந்து போன 20 வரையான பிரசவத் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களது இறப்புக்கள் தொடர்பான கள விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை (Field Investigation Report) முழுமைப்படுத்தப்படவில்லை. இது - சிறிலங்கா அரசின் திட்டமிட்ட செயற்பாடு வெற்றியடைந்திருப்பதையே காட்டுகிறது. மேலும் - தமிழ் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணி அவரிடம் இருந்து பிடுங்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்குப் பொறுப்பான சிங்களவர்களிடம் முடக்கப்பட்டதால் - தாய் சேய் நலன் பேணும் நடவடிக்கைள் (Maternal and Child Health Activities) முற்றாகச் சீர்குலைந்து போயின. கர்ப்பிணிகள் மற்றும் பிரசவத் தாய்மார்களது மரணங்களும் (Maternal Deaths) சிசு மரணங்களுமாகும் (Maternal Deaths) ஒரு நாட்டின், அல்லது ஒரு நாட்டில் உள்ள குறிப்பிட்ட ஒரு சமுகத்தின் சுகாதார நிலவரத்தின் குறிகாட்டிகள் (Health Indicators) எனக் கருதப்படுபவை. ஒரு நாட்டில், அல்லது குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் தாய்மார்களது இறப்புக்களோ (Maternal Deaths) அல்லது சிசுமரணங்களோ (Infant Deaths) அல்லது இரண்டுமே கூட - அடிக்கடி நிகழ்கின்றது எனின் அந்தச் சமூகம் சுகாதாரத்தில் படுவீழ்ச்சி கண்டதாகவே (Poor Health Status) அர்த்தம். மேலும் - வன்னிக்கு உள்ளே இடப்பெயர்வுகள் நிகழ்ந்த காலத்திலேயே கட்டுப்பாட்டில் இருந்த கொடிய தொற்று நோயான சின்னமுத்து (Measles) செட்டிக்குளம் பகுதி ஏழு தடுப்பு முகாம்களில் வாழும் குழந்தைகள் மத்தியில் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இவ்வாறாக - தமிழ் மருத்துவர்களைத் துரத்தி விட்டுச் சிங்களவர்களை அந்த இடங்களுக்கு நியமித்துச் சுகாதாரச் சீர்கேடுகளை முடிமறைத்து, அவை பற்றிய புள்ளி விபரங்கள் வெளியே செல்வதைத் தடுத்துவிட்டது சிறிலங்கா அரசு. இதே வேளையில் - வெளிநாட்டு அரசுகளும் சரி, அரசு சாரா நிறுவனங்களும் சரி "இடம்பெயர்ந்த மக்களுக்கு நாம் நேரடியாகத் தான் உதவுவோம்" எனக் கூறி மருத்துவ உபகரணங்களாகவும், மருந்துகளாகவும் மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றின் ஊடாகத் தமது உதவிகளைக் குவிக்க தொடங்கின.இவ்வாறாக வந்து குவிந்த மருத்துவ உபகரணங்களைப் பார்வையிட்ட தென்னிலங்கை மருத்துவமனை ஒன்றின் மருத்துவ அதிகாரி ஒருவர் "செட்டிக்குளம் மருத்துவமனையில் உள்ள உபகரணங்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் கூடக் கிடையாது" என்று சொன்னார். இதனால் - கொழும்பில் இரகசிய ஆலோசனைகள் அவசர அவசரமாக நடந்தன. "எப்படி இந்த மருத்துவ உபகரங்களைத் தென்னிலங்கைக்குக் கடத்துவது" என்பது பற்றித் தான் அந்த ஆலோசனைகள் நடந்தன. தற்போதைய சிறிலங்காவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த மருத்துவ உபகரணங்கள் எல்லாம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் சொத்து. செட்டிக்குளம் பகுதி தடுப்பு முகாம்களில் உள்ள மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் - செட்டிக்குளம் மருத்துவமனையிலும், தடுப்பு முகாம்களில் உள்ள சுகாதார நிலையங்களிலும் இந்தக் கருவிகள் அங்கு பயனற்றவை என வடக்கு மாகாண சுகாதார அமைச்சு எண்ணினால் - அந்த உபகரணங்களை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைகளுக்கோ அல்லது முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கோ அனுப்பலாம். வடக்குக்கு வெளியே வேறு எங்கும் கொண்டுசெல்ல முடியாது. இதுதான் சிறிலங்கா அரச மட்டத்தினருக்குப் பிடிக்கவில்லை. "பல கோடி ரூபாய்கள் பெறுமதியான - மிகத் தரமான அவ்வளவு உபகரணங்களையும், ஏனைய மருத்துவ உதவிகளையும் தெற்கிற்கு எப்படி எடுத்துச் செல்வது?" வேகமாகச் சிந்தித்த மத்திய சுகாதார அமைச்சு - செட்டிக்குளம் ஆதார மருத்துவமனையின் அத்தியட்சகரான தமிழ் மருத்துவரை எப்படித் "தூக்குவது" என்பது பற்றியும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரத்தை செட்டிக்குளத்தில் எப்படி இல்லாது செய்வது என்பது பற்றியும் சிந்தித்து திட்டமிடத் தொடங்கியது. இறுதியாக - குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடித்த மத்திய சுகாதார அமைச்சு - அவசர அவசரமாக - அமைச்சரவைத் தீர்மானம் ஒன்றின் மூலமாக செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களும் (தடுப்பு முகாம்கள்), ஆதார மருத்துவமனையும் மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதாகப் பிரகடனப்படுத்தும் வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறது. இந்த முயற்சிக்கு உடந்தையாக - முன்னாள் தரைப்படை அதிகாரியும் தற்போதைய வடக்கு மாகாண ஆளுநருமான மேஜர் ஜெனரல் சந்திரசிறீயின் உத்தரவுக்கு இணங்க மாகாண சுகாதார அமைச்சும், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் எந்தவித எதிர்ப்பும் காட்ட முடியாது அமைதியாக இருப்பது அனைத்து தமிழ் மருத்துவத்துறையினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இது தொடர்பான முதலாவது அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்ட நிலையில், மத்திய சுகாதார அமைச்சின் இந்த முறைகேடான நடவடிக்கை தொடர்பில் உண்மை நிலையினை வெளி உலகுக்கு தெரிவித்து இந்த முறைகேட்டினை முறியடிக்க உதவுமாறு வவுனியா தமிழ் மாவட்ட சுகாதார வட்டாரங்கள் வேண்டுகின்றன. இந்த விடயத்தைப் பெரிதாக்கி - உரிய முறையில் சிறிலங்கா அரசு மீது - இலங்கைத் தீவுக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் அழுத்தங்களைப் போட்டு தமிழ் இனத்துக்கு உதவுமாறு - தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உலகளாவிய ரீதியில் இயங்கும், தமிழர் மருத்துவ அமைப்புக்கள் மற்றும் தற்போது உருவாக்கப்படும் உலகத் தமிழர் பேரவை ஆகியோரிடம் அவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றனர். நன்றி:புதினம் |
Sunday, August 30, 2009
'மீட்கப்பட்ட மக்கள்' - 4: பேரினவாதத்தின் இன்னொரு கரம்
Saturday, August 29, 2009
பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார்! : இலங்கை எம்பி சிவாஜிலிங்கம்
எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். அவர் இறந்துவிட்டதாக செல்வராஜா பத்மநாதன் கூறியிருப்பதில் ஏதேனும் அரசியல் சூசகம் அடங்கியிருக்கலாம். பத்மநாபன் கைது முதற்கொண்டு பல விஷயங்களை நாங்கள் அப்படித்தான் கருதுகிறோம். தேசிய தலைவர் இறந்துவிட்டதாக எந்த தகவலும் எங்களுக்கு உறுதியாக, ஆதாரங்களுடன் கிடைக்கவில்லை. இலங்கை அரசு அதற்கான ஆதாரங்கள் எதையும் தரவுமில்லை.
நான் தமிழ்மக்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான். தேசிய தலைவர் உயிருடன் உள்ளாரா என்பதற்கு காலம் பதில் சொல்லும். தற்போதைய உடனடி தேவை அகதிகளாக உள்ள 3 லட்சம் மக்களை அங்கிருந்து காப்பாற்றி, அவர்களின் இடங்களில் குடியமர்த்துவதுதான். மற்றபடி தமிழர்களுக்கு நிரந்தரத்தீர்வு என்பது சுய அரசியல் நிர்ணய சபையுடன் கூடிய தமிழீழமே. ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வதா இல்லையா என்பது விடுதலைப் புலிகளின் கையில்தான் உள்ளது என்றார்.
தமிழினப்படுகொலைகள் புகைப்பட சாட்சிகள்!
.
உலகப்போர் சட்டங்களையெல்லாம் காலில் மிதித்துவிட்டு காட்டுமிரண்டிகளைபோல உடல்களை நிர்வாணப்படுத்தி கோரத்தாண்டவம் ஆடியுள்ள சிங்கள இராணுவம் கழுகுக்கும், நாய்க்கும் தமிழன் உடல்களை உணவாக்கியிருக்கிறார்கள்.
உலகின் வேறு எந்த இனமும் இவ்வளவு கொடூரமாக அழிக்கப்பட்டிருக்காது என்பதற்கு தற்போது வெளிவந்துள்ள வீடியோ காட்சிகளும், இந்த புகைப்படங்களுமே சாட்சி.
இலங்கை அரசின் மீது போர்க்குற்ற நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கு என்று இந்த சாட்சிகள் போதும் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.
நன்றி:தெனாலி
மீட்கப்பட்ட மக்கள்' - 3: சுகாதாரச் சீர்கேடு, பாலியல் துன்புறுத்தல்கள், சமூகச் சீர்குலைவுகள்: காப்பாற்ற யாருமற்ற அவலத்தில் தடுப்பு முகாம்களில் துடிக்கு
| 'மீட்கப்பட்ட மக்கள்' - 3: சுகாதாரச் சீர்கேடு, பாலியல் துன்புறுத்தல்கள், சமூகச் சீர்குலைவுகள்: காப்பாற்ற யாருமற்ற அவலத்தில் தடுப்பு முகாம்களில் துடிக்கும் தமிழர்கள் |
| [சனிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2009, 07:23 மு.ப ஈழம்] [க.நித்தியா] |
| வவுனியா தடுப்பு வதைபுரி முகாம்களில் உள்ள தமிழ் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் - மிகுந்த அச்சுறுத்தல் நிறைந்த சூழலில் இருந்து மீண்டும் தாம் இரகசியமாக இயங்கத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ் மாணவர் ஒன்றியம் - தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தாம் எடுக்கும் கடின முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி உலகத் தமிழர்களிடம் கோரி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. |
இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் மாணவர் ஒன்றியம் வவுனியாவில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள மக்களின் விடுதலைக்காக நடவடிக்கை எடுங்கள் கடந்த மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியை முழுமையாக கைப்பற்றிய சிறிலங்கா அரசு வன்னியில் வாழ்ந்த மக்களை முழுமையாக சிறைப்பிடித்து 'நலன்புரி முகாம்கள்' என்ற பெயரில் வவுனியாவின் காட்டுப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைத்து வைத்துள்ளது. மனிதர்கள் வாழ்வதற்கு எந்த வகையிலுமே பொருத்தம் இல்லாத சூழல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அந்த முகாம்களில் ஏறக்குறைய 2 லட்சத்து 90 ஆயிரம் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வன்னியில் மிகுந்த வளமோடும் செழிப்போடும் வாழ்ந்த எமது மக்கள் தமது உயிர்களை மட்டுமே இந்த முகாம்களுக்கு வரும்போது எடுத்து வந்திருந்தனர். மாற்று உடைகள் கூட அவர்களிடம் இருக்கவில்லை. சுத்தமான குடிநீரோ, சத்தான உணவோ, தேவையான மருத்துவ வசதிகளோ எதுவும் இன்றி 100 நாட்களுக்கும் மேலாக அந்த முகாம்களில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மிகப் பெருமளவான இளம் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு சிங்களப் படை ஆட்களால் உள்ளாக்கப்படுகின்றனர். சிறுவர்கள் பாலியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றனர் அல்லது வற்புறுத்தப்படுகின்றனர். சத்தான உணவோ, சுத்தமான குடிநீரோ பெற்றுக்கொள்ள முடியாது அழுக்கு நீரைக் குடித்து, அகப்படும் எல்லா உணவுகளையும் உண்ணும் அவலத்தில் அந்த மக்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில் யாராவது உயிர் ஆபத்தான நிலையில் மருத்துவ நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டாலும் கூட, அவர்களது உயிராபத்து நிலையைப் புரிந்து கொண்டு உடனடியாக சிகிச்சை வழங்க குறித்த சிங்கள மருத்துவர்கள் முன்வருவதே இல்லை. ஏனெனில், தடுப்பு முகாம்களில் உள்ள அந்த சிங்கள மருத்துவர்கள் அனைவரும் இராணுவத்தில் பணியாற்றியவர்கள் ஆவர். அங்குள்ள தமிழ் மருத்துவர்களுக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது; அவர்களால் எதுவும் செய்யவும் முடியாது. தடுப்பு முகாமில் உள்ள ஒரு நோயாளிக்கு மேலதிக சிகச்சை தேவை எனக் கருதி தமிழ் மருத்துவர் ஒருவரின் பரிந்துரையுடன் வவுனியா பெரிய மருத்துவமனைக்கு அந்த நோயாளியைக் கொண்டுசெல்ல முடியாது. குறிப்பிட்ட தடுப்பு முகாமின் மருத்துவ நிலையத்துக்கு பொறுப்பாக உள்ள சிங்கள மருத்துவரினதும், இராணுவத் தளபதியினதும் அனுமதி இருந்தால் மட்டுமே மேலதிக சிகிச்சைக்கு செல்லமுடியும். அவர்களது அனுமதி மிகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கிடைப்பதே இல்லை. இவ்வாறான கெடுபிடிகள் காரணமாக நாளாந்தம் குழந்தைகள், முதியவர்கள் உட்பட ஆகக் குறைந்தது 20 தமிழ் மக்கள் இந்த முகாம்களில் உயிரிழந்தபடியே உள்ளனர். இந்த கொடூரம் வெளியே வருவதில்லை. தமிழ் அதிகாரிகளால் வெறுமனே தமது மனதுக்குள் அழ முடிகிறதே தவிர வேறு எந்த உதவியுமே செய்ய முடியாதுள்ளது. இத்தகைய துன்பங்கள் ஒருபுறம் இருக்க - நாளாந்தம் சிறிலங்கா படைப் புலனாய்வுப் பிரிவினர், ஈ.பி.டி.பி மற்றும் புளொட் அமைப்பினர் பெருமளவான பொதுமக்களை கைது செய்து கொண்டு செல்கின்றனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட எவரும் திரும்பி வந்ததே இல்லை. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் இந்தத் தடுப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஆனால் - இந்த முகாம்களின் குறித்த ஒரு பகுதி மட்டும் நன்றாகப் பராமரிக்கப்பட்டு அவர்களுக்குகு் காட்டப்படுகின்றது. அந்த வெளிநாட்டவர்களும், குறிப்பிட்ட அந்தப் பகுதியை மட்டும் பார்த்துவிட்டு, சிறிலங்கா அரசுக்குப் புகழ்மாலை சூடிவிட்டுச் சென்று விடுகின்றனர். இத்தகைய துயர நிலையில் - வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் கூட தடுப்பு முகாம்களில் உள்ள எம் மக்களை மீட்க ஆக்பூர்வமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பதும் எமக்கு மிகவும் வேதனையாக உள்ளது. அவலத்தில் வாழும் மக்களுக்காக தயவு செய்து குரல் கொடுத்து - எந்த விலை கொடுத்தாவது அவர்களை மீட்பதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுக்கும்படி அவலத்தில் வாழும் எம் மக்கள் சார்பாக வேண்டுகின்றோம். Thanks:puthinam.com |
சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்: எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தல்
| சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்: எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தல் |
| [வெள்ளிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2009, 10:55 மு.ப ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்] |
நோர்வேக்கு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வருகை தரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இது விடயம் தொடர்பாக வலியுறுத்தவுள்ளதாக எரிக் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளார். நிர்வாணமாக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் சிறிலங்கா அரச படைகளால் தமிழ் இளைஞர்கள் கோரமாக படுகொலை செய்யப்பட்ட, 'சனல் - 4' வெளிக்கொணர்ந்த காணொலி காட்சி தொடர்பான செய்தியையும் படங்களையும் நோர்வேஜிய ஊடகங்களும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த காணொலி காட்சி உண்மையாக இருந்தால் அது ஆச்சரியத்திற்கு உரியதல்ல எனவும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இறுதி ஆண்டுகளில் வகை தொகையின்றி மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். இந்தக் கொலைகள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளோ, நீதி விசாரணைகளோ நடாத்தப்படவில்லை. இந்தக் கொலைகள் மற்றும் காணாமல் போதல்களின் பின்னணியில் சிறிலங்கா அரச இயந்திரத்தின் அலகுகள்; இயங்கியமைக்கான திடமான பல ஆதாரங்கள் உள்ளன என எரிக் சொல்ஹெய்ம் 'ஆப்தன்போஸ்தன்' நாளேட்டுக்கு தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட போரின்போது வடக்கு பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. எந்தவொரு உதவி நிறுவனமோ அன்றி சுயாதீன ஊடகவியலாளரோ அப்பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் சிறிலங்கா அரச படைகளுக்கு எதிராக எழுந்துள்ள போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ய முடியவில்லை. இவ்வாறான புறச்சூழல்கள் ஐ.நா.வினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதை கடினமாக்கும் காரணிகளாக உள்ளன. அத்துடன், ஐ.நா. பாதுகாப்புச் சபையிலும் இதற்கான பெருத்த ஆதரவு ஏதும் நிலவவில்லை. ஆனபோதும் இந்தக் காணொலி போன்ற ஆதாரங்கள் சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைகளுக்கான கோரிக்கையை வலுப்படுத்துகின்றன எனவும் எரிக் சொல்ஹெய்ம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 'ஆப்தன்போஸ்தன்' நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிறிலங்கா அரச தலைவரும் அவரது அரசும் பதவிக்கு வந்த கடந்த நான்கு ஆண்டுகளில் மனித உரிமைகளையும், ஜனநாயக நியமங்களையும் புறந்தள்ளி வந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. அரசுக்கு எதிரானவர்கள் 'வெள்ளை வான்' மூலம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் ஆகியோரே இவ்வாறான வெள்ளைவான் கடத்தலுக்கு அதிகம் ஆளாகுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் 34 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக, 'சனல் - 4' ஊடாக காணொலியை வெளிக்கொணர்ந்த 'ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு' (Journalists for Democracy in Sri Lanka) தகவல் வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான மகிந்த அரசின் போரினால் தமிழ் மக்கள் பாரிய மனித அவலங்களுக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என 'ஆப்தன்போஸ்தன்' நாளேட்டின் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. Thanks:puthinam.com |
தமிழர் முகாம்கள் குறித்த ஐ.நா. அறிக்கையை இருட்டடிப்பு செய்யும் பான் கீ மூன், விஜய் நம்பியார்: ஜெகத் கஸ்பார் குற்றச்சாட்டு
| தமிழர் முகாம்கள் குறித்த ஐ.நா. அறிக்கையை இருட்டடிப்பு செய்யும் பான் கீ மூன், விஜய் நம்பியார்: ஜெகத் கஸ்பார் குற்றச்சாட்டு |
| [ சனிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2009, 08:23.01 AM GMT +05:30 ] |
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கஸ்பார் கூறுகையில், இலங்கையில் பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே முகாம்களில் சிறைப்பட்டுள்ள தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் 3.5 லட்சம் தமிழர்கள் பாதிக்கப்படுவர் என்ற ஐ.நா.வின் அறிக்கையை, ராஜபக்சேவின் தூதர்கள் போல செயல்படும் பான் கி மூனும், விஜய் நம்பியாரும் மறைத்து இருட்டடிப்பு செய்து வருவதாக நாம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் ஜெகத் கஸ்பார் குற்றம் சாட்டியுள்ளார். Thanks:tamilwin.com |
