Tuesday, September 1, 2009
அதோ .. அந்த மனிதர் போல வாழ வேண்டும் !
கசங்கிக் கிடக்கும் பழந்துணியைப் போல அந்தப் பாட்டியின் தோற்றம் மார்க்கெட் சுவரோரம் தென்படும். அடிக்கடி கலைந்து போகும் சுண்டல் வற்றலை விட அதைக் கூறுபிரிக்கும் அவளது கைகளில் அதிகச் சுருக்கல்கள். இமைகளைக் கூட வேகமாக நிமிர்த்த முடியாதபடிக்கு தளர்ந்து போயிருந்தது அவளது உடல். வறுத்தெடுக்கும் வெயிலில் சுருளும் சுண்டை வற்றலை வைத்துக் கொண்டு, தலையில் சீலைத் தலைப்பை போட்டபடி அவள் உட்கார்ந்திருக்கிறாள் என்பதை விட அவளும் ஒரு கூறுகட்டிய சுண்டை வற்றலாக காட்சியளிப்பாள். இந்த வயதிலும் இவள் உழைத்து வாழும்படி என்ன கஷ்டமோ ? ஓய்வெடுக்க வேண்டிய வயதில் இப்படி ஒரு உழைப்பா ? எனப் பலவாறு பாட்டியின் மேல் பரிதாபம் மேலிடும்.
எனக்கு சுண்டை வற்றல் தேவையோ இல்லையோ, அந்தப் பாட்டிக்காகவே அடிக்கடி வாங்குவதுண்டு. அன்றும் அதே மனநிலையோடு பாட்டியின் தரைக்கடைப் பக்கம் போனேன். குத்துக்கால் போட்டுக் கொண்டு நான் பேச ஆரம்பித்தவுடன், நடுங்கும் முகத்தை ஒருவாறாக நேர்ப்படுத்திக் கொண்டு இமைகளை குழப்பி ஒரு வழியாக பார்வையை ஊன்றினாள் பாட்டி. “ரெண்டு கூறு” என்றேன். எடுத்துக்க ! என்பது போல பிதுங்கிய உதட்டசைவில் தாடையை அசைத்தாள் பாட்டி. “எத்தன ரூபாய் ?” என்றவுடன், “ஆங்.. பத்து” என்று உதடுகளை உதறினாள். வாங்கிய கூறுக்கு பத்து ரூபாயைக் கொடுத்தவுடன், நடுங்கிய விரல்களால் பணத்தைப் பிடித்து விரித்து ஒருமுறை சரிபார்த்துக் கொண்டாள்.
விரல்களின் நடுக்கத்துடனேயே அனிச்சைச் செயல் போல் அதை மடக்கி சுருக்குப்பையில் போட்டு சுமாராக கயிற்றை இழுத்து வைத்தாள். முதுமையின் அனுபவத்தையும் உழைப்பின் தீவிரத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவன் இரக்கம் மேலிட பாட்டிக்கு உதவி செய்ய நினைத்து, ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து “பாட்டி இந்தா வச்சுக்குங்க” என்று நீட்டினேன். சட்டென எதுவும் புரியாத குழப்பத்தில் சுருங்கிய முகத்தை இன்னும் சுருக்கியபடி, சிரமப்பட்டு உற்றுப் பார்த்தாள் பாட்டி. “என்னாது.. அதான் காசு குடுத்தியே.. எனக்குதான் வயசாகிப் போயிடுச்சுன்னா நல்லா நீயுங் கெடந்து தடுமார்ற” உதடுகள் கோணலாய் போனதைப் பார்த்து, பாட்டி சிரிக்கிறாள் என்பது லேசாகப் புரிந்தது. “அதில்ல பாட்டி.. இதச் சும்மா வச்சுக்குங்க” என்று நான் கையை நீட்டியவுடன் அத்தனை பலம் பாட்டிக்கு எங்கிருந்துதான் வந்ததோ, கையை விலக்கி விட்டு சத்தமாக “தே.. என்னா சும்மா கெடைக்குதா உனக்கு காசு.. காசோட அருமை தெரியலியா.. ஒத்த ரூபா சம்பாதிக்க என்னா பாடுபட வேண்டியிருக்கு. நீ பாட்டுக்கு ஈஸியா தூக்கித் தர்ற.. ஹூம் இந்தக் காலத்துப் புள்ளைங்களுக்கு வலி, வருத்தம் எங்க தெரியுது.. உழைக்கிற காசுதாம்பா உடம்புல ஒட்டும்.. நல்ல புள்ளப்பா நீ..” என்று பணத்தை வாங்க மறுத்த பாட்டி எனக்கு புத்தி சொல்லி ஏதோ பெரும்பழியிலிருந்து தப்பியது போல முணுமுணுத்துக் கொண்டே வேறு வியாபாரத்தைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள். ரொம்பதான் பிடிவாதக்காரப் பாட்டி போல இருக்கு என்று போகிற போக்கில் பக்கத்தில் நின்றவர் தனது புரிதலுக்கு ஏற்றவாறு சிரித்துக் கொண்டு போனார்.
ஆனால், பாட்டியின் உணர்ச்சியோ உழைப்பின் அருமையையும், உழைக்கும் மக்களின் சுயமரியாதையையும் எனக்குக் கற்றுக் கொடுத்தது போலவ இருந்தது. எப்படியாவது அடுத்தவன் பாக்கெட்டில் கையை நுழைப்பதையே மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், அரசியல் புத்திசாலித்தனம் என்று பேசுபவர்கள் மலிந்திருக்கும் இந்த நாட்டில் உழைக்கின்ற காசுதான் உடம்பில் ஒட்டும் என்ற பாட்டியின் வார்த்தையில் மிளிர்ந்த நேர்மையும், உழைப்பின் வலிமையும் எனக்கு புதிய கண்ணோட்டங்களை வழங்கியது. அம்பானி என்னடா அம்பானி தில்லுமுல்லுக்காரன்.. தெருவில் கிடந்து நேர்மையாக உழைக்கும் இந்தப் பாட்டியல்லவா நாட்டின் அச்சாணி என்ற பெருமிதத்தோடு பாட்டியைப் பார்த்தபடியே நகர்ந்தேன்.
உழைக்கும் வர்க்கத்தின் சுயமரியைதையையும், பொறுப்புணர்ச்சியையும் வெளிப்படுத்திய இன்னொரு சம்பவத்தை சமீபத்தில் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிந்தது. இராமநாதபுரம் மாவட்டம் பொந்தம்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் 31 வயதுடைய முத்துராமலிங்கம். இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார். நம் நாடு வெளிநாடுகளில் வாங்கியிருக்கும் கடனால் ஒவ்வொரு இந்தியனுக்கும் தலைக்கு ரூ. 30,000 கடன் உள்ளது என்ற செய்தியை பத்திரிக்கையில் படித்த இவர் இதில் தனது பங்கு இந்தியாவின் கடனை அடைக்க விரும்பினார். ஒரு நாளைக்கு ரூ.100 முதல் 150 வரை சம்பாதிக்கும் சுமை தூக்கும் தொழிலாளி முத்துராமலிங்கம் கடந்த மே 8 ஆம் தேதி “இந்தியாவின் கடனை அடைக்க” என்று குறிப்பிட்ட ரூ.5000-க்கு டி.டி. எடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ளார். தவிர முத்துராமலிங்கம் பாக்கித் தொகையையும் மெல்ல அடைப்பதாகவும் இனி “என்னைக் கேட்காமல் என் பெயரில் கடன் வாங்கக் கூடாது” என்றும் கூறியிருக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் இந்த தொழிலாளியின் செய்கை ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கிண்டல், குத்தல் அல்லது ஒரு வகையான அதிரடி பாணி என்று கூட நினைக்கத் தோன்றலாம். ஆழமாகப் பரிசீலித்தால் உழைக்கும் வர்க்கத்திற்கேயுரிய சுயமரியாதை, நாட்டின் மானம் காக்கும் யதார்த்தமான தேசப்பற்று எல்லாவற்றுக்கும் மேலே என்னைக் கேட்காமல் என் பெயரில் இனி கடன் வாங்கக் கூடாது என்ற கண்டிப்பில் உழைக்கும் வர்க்கம் தனது அரசியலதிகாரத்தை பறைசாற்றும் தன்னிலையான போக்கு இதில் வெளிப்படுவதுதான் நாம் காண வேண்டிய, ரசிக்க வேண்டிய பகுதியாகும்.
பல ஆயிரம் கோடி கடனை வாங்கிக் கொண்டு, அரசை ஏய்த்து தொழில் செய்து கொண்டு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் தங்களுக்கான கடனைத் தள்ளுபடி செய்யச் சொல்லி நியாயம் பேசும் முதலாளிகளின் கேடுகெட்ட செய்கையை இந்த சுமைதூக்கும் தொழிலாளியின் நடத்தையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த நாட்டின் உண்மையான தேசப்பற்றாளர்கள் முத்துராமலிங்கம் போன்ற உழைக்கும் மக்களே என்ற உண்மை தெரிய வரும்.
நாட்டின் மீதான தனது உரிமையை ஒரு சிறிய செயலின் மூலமாக நிலைநாட்டிக் காட்டும் முத்துராமலிங்கம் போல மக்கள் உணர்வு பெற்றுவிட்டால் “எங்களைக் கேட்காமல் எப்படிக் கடன் வாங்கினாய் என்ற கேள்வி முதல் .. எங்களைக் கேட்காமல் எப்படிக் கடன் வாங்கினாய் என்ற கேள்வி முதல் .. எங்களைக் கேட்காமல் ஏன் சிங்கள இனவெறி அரசுக்கு உதவி செய்தாய்?” என்ற அரசியல் கேள்விகள் வரை கேட்கும்படியாக நிலைமை மாறிவிடும். இந்த திசையில் சிந்திக்குமபடியாக செய்கிறது முத்துராமலிங்கத்தின் பாணி.
‘படிக்கலேன்னா மூட்டை தூக்கத்தான் லாயக்கு’ என்று கேலி பேசும் படித்த வர்க்கம் ஒரு கணம் யோசிக்கவும். ஒரு சாதாரண சுமை தூக்கும் தொழிலாளி, அதிகம் படிக்காதவர், தேசத்தையே சுமக்கும் அளவுக்கு உழைக்கும் வர்க்கத்தின் சுயமரியாதையுடன் தமது ஆளுமையை வளர்த்துக் கொண்டு முன்னுதாரணமாக நம்முன்னே நிற்கிறார். இப்படிப்பட்ட வழிகாட்டிகளிடம் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. இப்படிக் கற்றுக் கொள்வதன் மூலமாகவே நாம் உருப்படுவதற்கும் வழி இருக்கிறது என்று நம்புகிறேன் நான். நீங்களும் மறுக்க மாட்டீர்கள்தானே ?
http://www.vinavu.com/2009/09/01/life/Sunday, August 30, 2009
வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை
எந்தக் காரியத்தையும் உங்களால் ஒழுங்காக ஒருங்கிணைக்க முடியவில்லையா? சோம்பலாகஇருக்கிறீர்களா? காலை ஒரு இடத்தில் வைத்திருக்க முடியாமல் ஆட்டிக்கொண்டேஇருக்கிறீர்களா? "ஆமாம்ப்பா.. ஆமாம்" என்று பதிலளித்தீர்களானால், உங்களுக்கு ரத்த சோகை இருக்கலாம். உடனடியாகமருத்துவரைச் சந்தியுங்கள்.
2. வயிற்றில் கட்டி
3. வயிற்றில் வீக்கம்
4. வயிற்றிலோ, குடலிலோ ஏற்படும் புற்றுநோய் காரணமாக சில சமயம் தொடர்ந்துரத்தம் உள்ளே கசியும்.
5. வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால், அவைகாலப்போக்கில் வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தலாம்.
6. குழந்தை பிறப்பின் போது ஏற்படும் ரத்த இழப்பு.
ரத்தசோகைஇருப்பவர்களுக்கு சோர்வும் சோம்பலும் ஏற்படும். சோர்வு என்பது உடல் ரீதியானது.சோம்பல் என்பது மன ரீதியானது. ஒருவர் உடல்ரீதியாக சோர்வாக இருந்தால் அவரது மன நலன் பாதிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது. இவைபோக மேலும் சில அறிகுறிகள் இருக்கின்றன.
2. மூச்சுவிடுவதில்சிரமம்.
3. மோசமாக பணிகளைஒருங்கிணைப்பது
4. இதயம் வேகமாகத்துடிப்பது அல்லது தாறுமாறாகத் துடிப்பது
5. குளிர்ச்சியானசூழலைத் தாங்க முடியாமை
நன்றி:தெனாலி
விமர்சனம் : பொக்கிஷம்
ஹேர்பின், வாடிய ரோஜா, வாடாத சாக்லேட் பேப்பர் என்று காதலின் சின்னமாக பலரும் பல விஷயங்களைப் பொக்கிஷங்களாகப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். இதில் சேரன் தன் காதலி எழுதிய கடிதங்களையும் காதலைப் பற்றி எழுதிய டைரிகளையும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறார். அவருக்குப் பிறகு அவருடைய மனைவியும் மகனும் அதே மரியாதையோடு அதை பாதுக்காக்கிறார்கள்.
கவிதையாகத்தான் இருக்கிறது கதை... ஆனால், சொன்ன விதத்தில்தான் சாக்லேட் பேப்பரையும் வாடிய பூவையும் பாதுகாக்கும் ஆசாமி எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றிவிடுகிறது.
இன்றைய தலைமுறையைக் காட்டி அவர்கள் காதலையும் காட்டி, 'நாங்கள் அந்தக் காலத்தில் எவ்வளவு கவிதையாகக் காதலித்தோம் பார்...' என்றும் காட்ட முனைந்திருக்கிறார் சேரன். ஆனால், 'ஏண்டா... உன்கிட்டேயிருந்து எஸ்.எம்.எஸ். வரலைன்னா என்னால் மூணு நிமிஷம் பொறுக்க முடியலை... முப்பது நாள் லெட்டருக்காகக் காத்துகிட்டு எப்படிடா இருக்கமுடிஞ்சது" என்று ஒரு கேரக்டர் சொல்லும் வசனம்தான் படத்துக்கான விமர்சனமாகவும் ஆகிவிடுகி
றது. இவ்வளவு வேகமாக இருக்கும் தலைமுறைக்கு சொல்லும் கதை எத்தனை வேகமாக இருக்கவேண்டும்.
ஆனால், சேரனும் பத்மப்ரியாவும் மாறிமாறி கடிதங்களை படித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அதையே எவ்வளவு நேரம்தான் பார்த்துக் கொண்டேயிருக்க முடியும். அதிலும் நாலு பக்க கடிதம் என்றால் நாலு பக்கத்தையும் பொறுமையாகப் படிக்கிறார்கள்.
படம் தொடங்கிய நொடியில் இருந்தே யுகம் யுகமாகக் கழிகிறது. நடுவில் பத்மப்ரியாவைத் தேடி சேரன் நாகூருக்கு வரும்போது கொஞ்சமே கொஞ்சம் வேகமெடுக்கிறது. சில நிமிடங்கள்தான்... அதன்பிறகு மீண்டும் பழைய கூட்டுக்குள் போய்விடுகிறது. இந்த மெதுவான திரைக்கதைதான் படத்துக்குப் பெரிய கத்தியாக ஆகிவிட்டது.
சேரன் கைவசம் நாலைந்து பாவனைகளை வைத்திருக்கிறார். அதை கூடியமட்டும் ஆட்டோகிராஃபிலேயே காட்டிவிட்டார். இன்னும் ஏன் நடிப்பாசையில் நம்மை சோதித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. நிச்சயமாக நல்ல இயக்குனர் சேரனை நாயகனாக நடிக்க வைக்கமாட்டார். இயக்குனர் சேரன் சிந்திக்க வேண்டிய நேரம் இது!
படத்தின் அழகான விஷயங்கள் கேமராவும் அது காட்டும் பத்மப்ரியாவும்! ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் ஓவொரு காட்சியையும் ஓவியம் போல அமைத்திருக்கிறார். எந்தக் காட்சியையுமே முதல் நொடியிலேயே அதன் தன்மையை உணர்த்தி விடுகிறது கேமராவின் கோணமும் ஒளியமைப்பும்.
பத்மப்ரியா முகபாவனைகளாலேயே மொத்த வசனத்தையும் பேசிவிடுகிறார். அதிலும் இஸ்லாமியப் பெண்ணாக வருவதால் முழுக்க மூடிய பர்தாவில் மிச்சமிருக்கும் கண்கள் பாதி கதைகளைச் சொல்கின்றன. உணர்வுகளை அத்தனை அற்புதமாகக் கொண்டு வருகிறார். க்ளைமாக்ஸில் அவருக்கான மேக்கப்தான் படு உறுத்தல்!
கதை எழுபதுகளில் நடப்பதாகக் காட்டும் சேரன், அதற்காக ஓவராக உழைத்துவிட்டார் போலும். ரூபாய் நோட்டுகள் பெரிதாக இருக்கின்றன. கதாபாத்திரங்கள் நாடகத் தமிழில் வசனங்கள் பேசுகிறார்கள். மீசையில் ஜெமினிகணேசனை நினைவுபடுத்துகிற மேக்கப் தொடங்கி பல இடங்களில் மிகை!
எந்த விஷயத்தையும் ஒரு எஸ்.எம்.எஸ்-ஸுக்குள் சொல்லிவிட வேண்டும் என்பதுதான் இன்றைய இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு. அந்த அளவுக்கு இல்லையென்றாலும் இரண்டு ஷோ சேர்ந்து பார்க்கிறோமோ என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு நீட்டி முழக்க வேண்டியதில்லை.
சேரன் சார்... உங்க பாரதி கண்ணம்மா, பொற்காலம் வெற்றிக்கொடி கட்டு எல்லாமே மக்களின் மனதில் நின்ற படங்கள்தான்... நீங்கள் நல்ல படம் என்றால் வேறு எதுவோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நன்றி:தெனாலி
‘திரு திரு துறு துறு’- கலகல விறுவிறு படம்?
சென்னை:
தமிழ்த்திரையுலகில் மீண்டும் ஒரு பெண் இயக்குநர் நந்தினி, இவர் இயக்கிவரும் திரு திரு துறு துறு படம் பற்றி கேட்டபோது. பெண் இயக்குநர் என்றாலே லேசான கதைகளைத்தான் தேர்வு செய்வார்கள் என்ற மனநிலை உள்ளது. தயாரிப்பாளர்களும் அதையே விரும்புகிறார்கள். லேசான கதையசத்தோடு வெற்றி பெற்றால் அவர்கள் நம்புவார்கள்.
இந்த திரு திரு துறு துறுவும் அப்படிபடிப்பட்ட கதைதான். கதைப்பாத்திரங்கள் அஜ்மல், ரூபா இருவரும் நெருங்கிய நண்பர்கள், இருந்தாலும் எதிரும் புதிருமான குணம் கொண்டவர்கள். இவர்கள் வேலை செய்யும் நிறுவன முதலாளி மவுளி ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அந்த சிக்கலை அஜ்மலும், ரூபாவும் சேர்ந்து எப்படி தீர்த்துவைக்கிறார்கள் என்பதுதான் கதை இதைதான் விறு விறுப்புடனும், கலகலப்புடனும் சொல்லுகிறது இந்த படம்.” என்றார்.
இந்திய அழுத்தங்களுக்கு மகிந்த இணங்கினால் தாய் நாட்டைப் பாதுகாக்க எதனைச் செய்யவும் தயங்கமாட்டோம்: ஜே.வி.பி. எச்சரிக்கை
"வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு காணி, காவல்துறை மற்றும் நிதி தொடர்பான அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அது தனிநாட்டுக்கு அல்லது நாடு பிளவுபடுவதற்கே வழிவகுப்பதாக அமையும்" எனவும் ஜே.வி.பி. தெரிவித்திருக்கின்றது.
"காவல்துறை அதிகாரம் எந்தவொரு மாகாண சபைக்கும் வழங்கப்பட்டால், அந்த மாகாணத்தின் காவல்துறை மத்திய அரசின் காவல்துறை மா அதிபரின் கீழ் செயற்படாது" எனவும் ஜே.வி.பி.யின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்திருக்கின்றார்.
தென்மாகாணத்தில் உள்ள தங்காலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர், தனது உரையில் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
"ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தன உடன்படிக்கையை அல்லது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு தனிநாட்டுக்கான அத்திவாரமாக அமையும்.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்காகவும், வவுனியா நகர சபைக்காகவும் நடைபெற்ற தேர்தல் தொடர்பாகக் குறிப்பிட்ட ரில்வின் சில்வா, இவை எதுவும் அவசரமானவை அல்ல. இந்தப் பகுதியில் உள்ள தமிழ் சமூகத்தினர் பயங்கரவாதம், மற்றும் பிரிவினைவாதத்துக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 12 வீதமானவர்களே வடக்கு - கிழக்குப் பகுதிகளில் உள்ளனர். இருந்தபோதிலும் அவர்களிடம் நாட்டின் நிலப் பகுதியில் 33 வீதமும், கடற்பகுதியில் 61 வீதமும் உள்ளது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களில் 55 வீதமானவர்கள் வடக்கு - கிழக்குப் பகுதிக்கு வெளியிலேயே வசிக்கின்றார்கள். வடக்கு - கிழக்குப் பகுதிகளில் உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது தென்பகுதியில் உள்ள தமிழர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்தப் பிரச்சினைக்கு இரண்டு வழிகளைத் தவிர வேறு வழிகளில் அரசினால் தீர்வை நாட முடியாது. இந்த இரண்டு மாகாணங்களிலும் வசிப்பவர்களுக்கு உண்மையான ஜனநாயக உரிமைகளை வழங்க வேண்டும். தமிழர்களை சமத்துவத்துடன் நடத்த வேண்டும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அமைப்புக்களினால் போர் வீரர்கள் கெளரவிக்கப்படும்போது, இரண்டு போர் வீரர்கள் கெளரவிக்கப்படும் முறை கேள்விக்குரியதாகவே இருக்கின்றது.
தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் இருந்து ஆச்சரியப்படத் தக்கவகையில் தப்பித்துக்கொண்ட முன்னாள் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் கடற்படைத் தளபதி ஆகிய இருவரும் இவ்வாறான நிகழ்வுகளில் நடத்தப்படும் முறை கேள்விக்குரியதாகவே இருக்கின்றது.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களுடன் வந்த கப்பல்கள் பலவற்றை அழித்து அவர்களைப் பலம் இழக்கச் செய்த முன்னாள் கடற்படைத் தளபதியை அரசு நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக நியமித்திருக்கின்றது. இதுதானா அவரைக் கெளரவிக்கும் முறை?" எனவும் ஜே.வி.பி. செயலாளர் கேள்வி எழுப்பினார்.
நன்றி:புதினம்
