Monday, October 19, 2009

மதமும் மக்களும்

மதமும் மக்களும்

உலக மக்கள் தொகை விபரம் மதம் வாரியாக
.
Cultural tradition Religious category Number of followers Date of origin Main regions covered
Abrahamic religions Christianity 2.1–2.2 billion[6][7] 1st century Worldwide except Northwest Africa, the Arabian Peninsula, and parts of Central, East, and Southeast Asia.
Islam 1.3–1.6 billion [8][9] 7th c. Middle East, Northern Africa, Central Asia, South Asia, Western Africa, Indian subcontinent, Malay Archipelago with large population centers existing in Eastern Africa, Balkan Peninsula, Russia, Europe and China.
Judaism 12–18.2 million[10] 1300 BC Israel and Jewish diaspora (meaning mostly North America and Europe)
Bahá'í Faith 7.6[11]–7.9[12] million 19th c. Noted for being dispersed worldwide[13][14] but the top ten populations (amounting to about 60% of the Bahá'í World Faith adherents) are (in order of size of community) India, United States, Vietnam, Kenya, DR of the Congo, Philippines, Zambia, South Africa, Iran, Bolivia[15]
Rastafari movement 700 thousand[16] 1930s Jamaica, Caribbean, Africa
Indian religions Hinduism 950 million – 1.4 billion[17] 2500–3000 BC or older Indian subcontinent, Fiji, Guyana, Trinidad, Mauritius, Suriname, Bali, Australasia, Northern America and Southeast Asia.
Buddhism 250–500 million[18] c. 500 BC Indian subcontinent, Sri Lanka ,East Asia, Indochina, regions of Russia.
Sikhism 20–30 million[19] 15th c. Indian subcontinent, Australasia, Northern America, Southeast Asia, the United Kingdom and Western Europe.
Jainism 6–12 million[20] c. 800 BC India, and East Africa
Far Eastern religions Taoism Varies[21] Han Dynasty: 206 BC – 220 AD China and the Chinese diaspora
Shinto Varies Varies by tradition Japan
Folk religions Chinese folk religions Varies[21] Varies by tradition China
African traditional and diasporic religions Millions[21] Varies by tradition Africa, Americas
Other folk religions Millions[21] Varies by tradition India, Asia
Other
each over 500 thousand
Cheondoism 3 million[22] 1812 North Korea
Tenrikyo 2 million[23] 1832 Japan, Brazil
Cao Dai 1–3 million[24] 1925 Vietnam
Ahl-e Haqq 1 million[25] 14th century Iraq, Iran
Seicho-no-Ie 800 thousand[23] 1929 Japan
Yazidism 700 thousand[26] 12th century or older mainly Iraq
Unitarian Universalism 630 thousand[27] 1961 United States, Europe
நன்றி
http://en.wikipedia.org/wiki/Major_religious_groups
இதிலிருந்து தெரியும் விபரம் என்ன ?
மதங்கள் அனைத்தும் corporate கம்பனிகள் போல HR RD production marketing admin finance என பல துறைகளை வைத்து கொண்டு ஆள்சேர்க்கும் நடவடிக்கயில் இறங்குகின்றன .
இவர்களின் product வித விதமான கடவுள்கள்

எந்த corporate
கம்பனியாவது லாப நோக்கு இல்லாமல் இருக்குமா?
மதவாதிகள் லாபம் அடையவே மதக் கம்பனிகள் ஆரம்பிக்கப்பட்டு வளர்க்கபடுகின்றன ..இல்லை அவர்கள் சேவை செய்கிறார்கள் என்றால் அது corporate கம்பனிகள் செய்யும் சோசியல் சர்வீஸ் போலதானே தவிர மக்களை முன்னேற்ற மதம் ஒன்றும் செய்வதில்லை ...அப்படியே செய்தாலும் அது அவர்களை இழுத்து வை
ப்பதர்ககவும் ஆள் பிடிக்கவும் , போட்டிக்காக்கவுமே ...

உலகத்தை நன்கு உற்று நோக்கி பார்த்தால் ஒரு வுண்மை நன்றாக புரியும்..
எல்லா மதத்திலும்
ஒழுக்கமானவன், அற்றவன், ஏழை, பணக்காரன், திருடன், சேவை செய்பவன் ,அறிவாளி, அறிவு வளர்ச்சி குறைந்தவன், ஆரோக்கியமானவன், நோயாளி, வீரன் ,கோழை என அணைத்து தரப்பினரும் இருக்கின்றனர்.
அந்தமத
த்தாலும சாவயோ , நோயையோ,ழ்மயயோ, மாற்ற முடியவில்லை...ஏன்?
அப்போ
மொத்தத்தில் இந்த மதம் கடவுள் இவற்றின் பாதிப்பு என்ன?
அவை வளரவேண்டும் என்பதே அதனால் தவிர மக்கள் வளர்சி அல்ல..அவர்களை அறியாமையிலே வைத்திருக்க முயல்கின்றன ....
இதனால் தெரிவதாவது எந்தகடவுளும் இதில் வேறுபாடல்ல ....
மனிதன் உருவாகிய மதமும் கடவுளும் புனிதம் என்பதோ வணக்க
த்திர்க்குரியது என்பதோ நாம் பழகி கொண்டதே
அதனால் மதத்தை கடவுளை போற்றுவதை விட்டு மனிதம் பேணுவோம் ..............நன்றி:முத்தமிழ்

Thursday, October 15, 2009

சிங்கள வெறி நாய்களின் அட்டகாசம்.பெண் புலியின் அவலநிலையை பாருங்கள்.

Tuesday, October 13, 2009

நான் ரசித்த மிகவும் வியப்பூட்டிய நடன களைஞர்களின் நடனம்.

மனிதரை உயிரோடு எரிக்கும் மூடநம்பிக்கை (திகில் வீடியோ)

கென்யா நாட்டின் மேற்குப்பகுதியில் "கீசி" இன மக்கள் வாழும் பிராந்தியத்தில் 15 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். சுமார் 100 பேர் கொண்ட கும்பல் ஒன்று, வீடுகளில் சோதனை நடத்தி இந்த 15 பேரையும் வெளியே இழுத்தெடுத்து. அவர்களை சூனியக்காரிகள் என குற்றம் சுமத்தி தெருவில் பலர் முன்னிலையில் உயிரோடு கொளுத்தியது. கென்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த திகில்சம்பவம், அரசாங்கத்தை விரைந்து நடவடிக்கை எடுக்க தூண்டியது. கும்பல் வன்முறையில் ஈடுபட்ட சிலரை கைது செய்தது. கிறிஸ்தவ மதம் அதிகாரம்செலுத்திய மத்திய கால ஐரோப்பாவில் நிலவிய "சூனியக்காரிகள் எரிப்பு வன்முறை", இன்று ஆப்பிரிக்க கிறிஸ்தவர்களிடையே பரவி வருகின்றது. மதம் வளர்க்கும் மூட நம்பிக்கைகளின் தீய விளைவுகளில் ஒன்று இது. அதிர்ச்சிதரும் "சூனியக்காரிகள் எரிப்பு" வீடியோவை இங்கே இணைத்துள்ளேன். எச்சரிக்கை : இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்ப்பது நன்று.

Kenya mob burns 15 women to death over witchcraft
நன்றி:கலையகம்.

Monday, October 12, 2009

டி.ஆர். பாலு அவசரம், அலைகழிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள்

டி.ஆர்.பாலுவின் தலைமையில் இலங்கைக்கு சென்ற தமிழக எம்.பி.க்கள்.டி.ஆர் பாலுவின் அவசரத்தால், அங்குள்ள தமிழர்கள் தங்களின் கோரிக்கைகளை முழுவதுமாக பதிவு செய்யப்படாமல் பேய் விட்டது எனவும், இவர்களின் வருகை பயண அற்றது எனவும் அங்கு வெளிவரும் வலம்புரி நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக வலம்புரி நாளிதழிம் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

தமிழக எம்.பிக்கள் குழு நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்தது. வழக்கப்படி மங்கள வாத்தியம், பொன்னாடை, மலர்மாலை, வரவேற்ப்பு பாடல், நினைவுப் பரிசு என தடல் புடலான ஏற்பாடு.

இவை எதுவுமே வேண்டாம்.தமிழர் பிரச்சினையை கூறுங்கள் என அவர்கள் தெரிவித்த போதிலும், அதனை எம்மவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இருந்தும் தமிழகத்தில் இருந்து வந்த எம்.பிக்கள் குழு அதனை நிராகரித்து விட்டன. அதுவொன்றே தமிழகக் குழுவிடம் விருப்பிற்குரிய செயலாக இருந்தது. இதற்கு மேலாக அந்தக் குழுவிடம் எதனையும் எதிர்பார்க்க முடியவில்லை.

எங்கள் கஷ்டகாலம் தமிழக குழுவிற்கு டி.ஆர்.பாலு தலைமை ஏற்றிருந்தார். அட! இராமா! வந்த மனுஷன் யாழ்.பொது நுலகத்தில் இருந்து, வந்தவர்களை அதட்டினார்.
நேரமில்லை என்று கூறி கருத்துக்களை தட்டிவிட்டார்.ஒரு சிலர் கூறிய கருத்துக்களையும் அவர் செவிமடுக்கவில்லை.

வந்த குழு தமிழரின் அவலத்தை கேட்கும் என்றால் சுடுமூஞ்சி டி.ஆர்.பாலு எதற்குமே இடம்தரவில்லை.

இராவணன் காலத்தில் இலங்கைக்கு அனுமன் வந்ததுண்டு. ஆனால் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்த தமிழக எம்.பிக்கள் குழுவுக்கு சனீஸ்வரன் தலைமை ஏற்று வந்ததென்பதை யாழ் பொதுநூலகத்திற்கு சென்ற பின்பே தெரிய வந்தது.

சனீஸ்வரனின் பார்வை கனிமொழியின் வாயை அடைத்தது. தொல் திருமாவளவனை பேசவே விடாமல் தடுத்தது .

அப்படியானால் வந்தது சனீஸ்வரன் என்பதை புரிந்து கொள்வதுடன் டி.ஆர்.பாலு ஒரு தமிழ் உணர்வற்றவர் என்பதும் நிருபணமாகியுள்ளது.

அவரின் தலைமையுரை -யாழ் மக்களுடன் அவர் கலந்துரையாடிய நெறிமுறை ,யாழ்ப்பாண பல்கலைக்கழக சமுகத்திற்கு அவர் கொடுத்த கெளரவம் எதுவுமே பொருத்தமானதல்ல .
இது அவரின் சிறுபான்மைத்தனத்தையே சுட்டிநிற்கின்றது.

எதுவாயினும் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் தொல்.திருமாவளவன் ஆகியோர் எங்கள் அவல நிலையை எடுத்துரைப்பர் என்ற நம்பிக்கை மட்டுமே எஞ்சியுள்ளது.

நன்றி:தெனாலி

வன்னி மக்களின் அவலக் குரல் உங்கள் உணர்வுகளைத் தொடவில்லையா?

'நாங்கள் இங்கு இறக்கப் போகின்றோம். அதற்கு முன்பாக எங்களைக் காப்பாற்றுங்கள்' என்று கதறி அழும் வவுனியா வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள எங்கள் உறவுகளின் அவலக் குரல்கள் எங்களுக்குக் கேட்கிறதோ, இல்லையோ உலகின் மனச்சாட்சியை உருக வைத்துள்ளது.


முல்லைத்தீவில்... விசுவமடுவில்... முள்ளிவாய்க்காலில்... எமது உறவுகள் மனிதப் பேரவலத்தை எதிர்கொண்ட போது பொங்கி எழுந்து போராடிய... வீதி மறியல்களில் இறங்கிய புலம்பெயர் தமிழர்களை வீதி வீதியாகத் தேடுகின்றேன். யாரையும் காணவில்லை.

'எங்களைக் காப்பாற்றுங்கள்! எங்களை மரணத்திலிருந்து காப்பாற்றுங்கள்!!' என்று எங்கள் உறவுகள் அவலக் குரல் எழுப்புகிறார்களே... எங்கே போய்விட்டீர்கள்?

விடுதலைப் புலிகளிடமிருந்து வன்னி மக்களை மீட்கின்றோம் என்ற சிங்களத்தின் வார்த்தைகளை நம்பிய மேற்குலகும், அமெரிக்காவும் அந்த மக்களின் அவலங்களைக் கண்டு அதிர்ச்சி கொண்டுள்ளன. சிங்கள ஆட்சியாளர்களுக்கெதிரான கண்டனக் கணைகள் பெரும் அழுத்தங்களாக மாறி வருகின்றன. எங்கள் தேச மக்களின் அவலங்கள் அவர்களது கண்களைத் திறக்க வைக்கின்றன.

ஆனால், நாங்கள் எமது கண்களை மூடிக்கொள்ளவே விரும்புகின்றோம். அந்த வன்னி மக்களின் அவலங்களையும், அழு குரல்களையும் தவிர்த்துவிடவே விரும்புகின்றோம். நாங்கள் பாக்கியவான்கள். சிங்கள தேசத்தின் இன அழிப்பிலிருந்து ஆண்டவனால் காப்பாற்றப்பட்டவர்கள். நாங்கள் வாழும் தேசத்தில் வசதியாக வாழ அனுமதிக்கப்பட்டவர்கள். எஙகளை மழையும், வெய்யிலும், காற்றும் தீண்டப் போவதில்லை. எனவே அந்த வதைமுகாம்களில் அடைபட்டு நாளாந்தம் இறப்பினுள் தள்ளப்படும் மக்களைப்பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்ற தீர்மானம் உங்களால் எடுக்கப்பட்டு விட்டது போலவே தெரிகின்றது.

இப்போதெல்லாம் நடாத்தப்படும் ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும், ஒன்றுகூடல்களும் நீங்கள் இல்லாததனால் யார் கவனத்தையும் ஈர்ப்பதில்லை. நீங்கள் பங்குபற்றாத எங்கள் ஒன்றுகூடல்களைப் பார்த்து எங்களது பாதுகாப்பிற்கு வரும் காவல்துறையினரே பச்சோதாபம் கொள்கின்றனர். நாங்கள் சந்திகளில் எங்கள் மக்களுக்காக ஒன்று கூடும்போதெல்லாம் நீங்கள் தெருவெங்கும் உள்ள கம்பிகளிலும், வீதியோரங்களிலும் வம்பளந்துகொண்டு நிற்கிறீர்களே. உங்களை நினைத்து நாங்கள் வெட்கத்தால் தலை குனிந்து நிற்கின்றோம்.

சிங்கள தேசம் மட்டுமா...? இந்திய தேசமும் எங்களைக் கருவறுக்கும் சதிகளை நிறுத்துவதாகத் தெரியவில்லை. கடந்த வாரமும் இந்தியப் போர்க்கப்பல் கொழும்பிற்குச் சென்று சிங்களக் கடற்படையுடன் போர் ஒத்திகை நடாத்தியுள்ளது.

எந்த நாட்டுடன் போர் தொடுக்க சிங்களப் படைக்கு இந்தியா பயிற்சி வழங்குகின்றது? எந்த மக்களைக் கருவறுத்த சிங்கள தேசம் இந்தியாவுடன் இணைந்து பயிற்சி பெறுகிறது? ஆம்! இந்திய தேசம் சிங்கள தேசத்துடன் இணைந்து நடாத்தும் எம்மீதான இன அழிப்பை நிறுத்தப்போவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றது. இன்றுவரை எமக்காகத் தமது கருணைப் பார்வையைத் திருப்பவிடாமல் உலக நாடுகளைத் தடுத்த பெரும் பாவத்தையும் இந்தியா சுமந்துள்ளது. இனியும் அதன் எண்ணத்திலும் எதிர்காலத் திட்டத்திலும் மாற்றம் இல்லை என்பதையே அதன் தொடரும் நடவடிக்கைகள் எமக்கு வலியுறுத்துகின்றன.

இந்தியாவின் துரோகங்களை நாம் அல்ல தமிழகத்திலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் வார இதழ் வெட்கத்துடனும் வேதனையுடனும் தமிழகத்துத் தமிழர்களின் சார்பில் ஆசிரியர் தலையங்கமாகப் பதிவு செய்துள்ளது.

'ஐக்கிய நாடுகள் சபையின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்குத் துணிச்சலை இவர்களுக்கு யார் தந்தது? ஒருபக்கம் முள்வேலி முகாம்களுக்குள் அப்பாவித் தமிழர்களை வதைத்துக்கொண்டே, மறுபக்கம் தன்னைப் புத்தராகவும் புனிதராகவும் காட்டிக்கொள்ள அங்கே இருப்பவர்கள் வேண்டுமானால் வெட்கம் கெட்டவர்களாக இருக்கலாம். 'தப்பாக எதுவும் நடக்கவில்லை' என்று இந்திய அரசுமா வெட்கம்கெட்டு பக்கவாத்தியம் வாசிக்க வேண்டும்?

அமெரிக்காவோ, ஐ.நா. சபையோ இலங்கை அரசுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கு, இந்திய அரசுதான் மறைமுகத் தடையாக இருக்கிறது என்று இதுநாள் வரை நிலவிவந்த குற்றச்சாட்டுகளை இப்போதாவது பொய்யாக்க வேண்டாமா?' என்று ஆனந்த விகடன் விம்மி எழுதுகின்றது.
இந்தியா இந்தத் தமிழுணர்வுக்கும், மனித நாகரிகத்திற்குமான இந்த வேண்டுகோளை செவி சாய்க்கவா போகின்றது? சிங்கள தேசத்தின் கொடூரமான தமிழின அழிப்பிற்குத் துணை நிற்பதுடன், அவ்வப்போது சிங்களக் கடற்படையினரின் இரத்தப் பசிக்குத் தமிழக மீனவர்களையும் அல்லவா இலவச இணைப்பாக வழங்குகின்றது.

எங்கள் தாய்த் தமிழகமே! உச்சி மோந்து எங்களை அரவணைப்பாய் என்றல்லவா நாங்கள் நம்பி இருந்தோம். எங்களுக்கு ஆபத்து என்றால் நீ கண்ணகியாகக் களம் புகுவாய் என்றல்லவா காத்திருந்தோம். உன் காற்சிலம்பையும் கயவர்கள் களவாடிவிட்டார்களா? உன்னை நிர்வாணமாக்கித் தம்மை வளப்படுத்திக்கொண்டார்களா? எங்கள் மக்களைப் போல் நீயும் அடைத்து வைக்கப்பட்டுள்ளாயா?

தாயே! எம் தமிழே!! நீ போதும்... நீ மட்டும் போதும்... எம் நிலம் மீட்டு உன்னை மீண்டும் அரியணையில் அமர வைப்போம் என்றுதானே உன் வீர மறவர்கள் களமாடிப் பலியானார்கள். எம் மக்கள் நிலமெல்லாம் வீழ்ந்து உனக்கான திசை மீட்கப் போராடினார்கள். நீயும் வீழ்ந்துவிட்டாயே... நீயும் தாழ்ந்துவிட்டாயே... நீயும் தொலைந்துவிட்டாயே...

நாம் எழுவோம்! நாம் விழ விழ எழுவோம்!! ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!! உன்னைச் சிறை மீட்போம்! எம் தேசத்தில் உன்னை அரசாள வைப்போம்!! இது சத்தியம்!

நன்றி - ஈழநாடு
நன்றி:பதிவு

கலெக்டரை நடுத்தெருவுக்கு இழுத்து வந்த மாணவர்கள்

பாழடைந்து சிதலமடைந்த கட்டிடம், சுற்றிலும் முட்புதர்கள், ஆங்காங்கே துருத்திக் கொண்டு நிற்கும் கம்பிகள், உள்ளே நுழையும் முன்பே குடலைப் புரட்டியெடுக்கும் துர்நாற்றம் – இவை ஏதோ பராமரிப்பின்றிக் கிடக்கும் பேருந்து நிலைய இலவசக் கழிப்பிடங்களின் அவலநிலை அல்ல!

திருச்சி-மன்னார்புரம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் மாணவர்கள் நல விடுதியின் ‘உண்மை’ நிலை இது! ஏறத்தாழ தமிழகம் முழுவதுமுள்ள ஆதிதிராவிட மாணவர் விடுதிகளின் ‘முகவரி’யும் இதுதான்!

பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருக்கும் இவ்விடுதி கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இவ்விடுதியில் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதையும் எதிர்பார்க்க முடியாது! இங்கு வழங்கப்படும் உணவின் தரத்தை பற்றி ‘வார்த்தைகளில்’ சொல்லிவிடவும் முடியாது!

இவ்விடுதியில் 2005-ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அடிப்படை வசதிகள் செய்துத் தரக்கோரியும், சுகாதாரமான முறையில் உணவு வழங்கக் கோரியும் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறது. இதன் விளைவாக சமீபத்தில் 26 கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளது. சுகாதாரமான உணவு வழங்குவதையும் உத்திரவாதப்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில்தான் கடந்த 23.9.09 அன்று அதிகாலை விடுதியின் அறையொன்றில் தூங்கிக் கொண்டிருந்த 3 மாணவர்கள் மீது மேற்கூரை இடிந்து விழுந்து, ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனைக் கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள் தங்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கோரியும், விடுதிக் கட்டிடத்தை மாற்றக் கோரியும் பு.மா.இ.மு.வின் விடுதி கிளைச் செயலர் தோழர் சங்கத் தமிழன் தலைமையில் அணிதிரண்டு டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

கோரிக்கை என்ன என்பதைக் கூட கேட்காமல், உதவி கமிசனர் ராஜேந்திரன், போலீசு ஆய்வாளர் கோடிலிங்கம் தலைமையிலான போலீசு கும்பல், காட்டுமிராண்டித்தனமாக மாணவர்களை தாக்கியது. தாக்குதல் தொடர்ந்த போதும் ‘மாவட்ட ஆட்சியர்’ உள்ளிட்ட உயரதிகாரிகள் வரும்வரை இங்கிருந்து கலையப் போவதில்லை என மாணவர்கள் உறுதியா நின்றனர். நிலைமை கைமீறிப் போனதையடுத்து, அலறியடித்து ஓடிவந்த மாவட்ட ஆட்சியரை, “நாங்கள் அனுபவிக்கும் அத்தனை கொடுமைகளையும் நீங்கள் நேரில் வந்து அனுபவியுங்கள்” என மாணவர்கள் இழுத்து சென்றனர். “இடிந்து விழும் இக்கட்டிடத்திற்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்டுவதற்கான” உத்திரவை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெற்ற பின்னரே, அவர் விடுவிக்கப்பட்டார்.

மூன்றுநபர் கொண்ட மாணவர் குழுவின் நேரடிப் பார்வையின் கீழ் புதிய விடுதிக்கான கட்டுமானப் பணிகள் தற்போது விரைவாக நடந்து வருகின்றன. பு.மா.இ.மு.வின் முன்முயற்சியால் கிடைக்கப் பெற்ற இத்தொடர் வெற்றிகள், அனைத்து மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும், வழங்கியிருப்பது மாத்திரமல்ல, வீதியிலிறங்கிப் போராடுவதன் வலிமையையும் உணர்த்தியிருக்கிறது!

-புதிய ஜனநாயகம், அக்டோபர்’ 2009

நன்றி:வினவு