Sunday, August 30, 2009

வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை

எந்தக் காரியத்தையும் உங்களால் ஒழுங்காக ஒருங்கிணைக்க முடியவில்லையா? சோம்பலாகஇருக்கிறீர்களா? காலை ஒரு இடத்தில் வைத்திருக்க முடியாமல் ஆட்டிக்கொண்டேஇருக்கிறீர்களா? "ஆமாம்ப்பா.. ஆமாம்" என்று பதிலளித்தீர்களானால், உங்களுக்கு ரத்த சோகை இருக்கலாம். உடனடியாகமருத்துவரைச் சந்தியுங்கள். ரத்தசோகை என்பது இந்தியர்களிடையே மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு குறைபாடு.ரத்தத்தில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோ குளோபினின் அடர்த்திகுறைவதே ரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. ரத்த்த்தின் சிவப்பணுக்களுக்குள்இருக்கும் ஒரு புரதம்தான் ஹீமோகுளோபின். இதில் இரும்புச் சத்து இருக்கும். இதுதான்ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது.


உணவுப் பற்றாக்குறை காரணமாக வளரும் நாடுகளில் இருப்பவர்கள்தான் இந்தக் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும்அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இருப்பவர்களும் பாதிக்கப்படவேசெய்கிறார்கள். ரத்த சோகைக்கான காரணம் ரத்தசோகை ஏற்படப் பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், ரத்தம் அதிக அளவில்வெளியேறிக்கொண்டே இருப்பது. விபத்து தவிர, இதற்கு வேறு சில காரணங்களும்இருக்கின்றன. அவை:

1. வயிற்றில் அல்சர்

2. வயிற்றில் கட்டி

3. வயிற்றில் வீக்கம்

4. வயிற்றிலோ, குடலிலோ ஏற்படும் புற்றுநோய் காரணமாக சில சமயம் தொடர்ந்துரத்தம் உள்ளே கசியும்.

5. வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால், அவைகாலப்போக்கில் வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தலாம்.

6. குழந்தை பிறப்பின் போது ஏற்படும் ரத்த இழப்பு.

சாதாரணமாக, ஒரு ரத்த சிவப்பணு 110-120 நாட்கள் வரை உயிரோடு இருக்கும்.அதற்குப் பிறகு சிதைந்துவிடும். ஆனால், சில நோய்களின் காரணமாக, ரத்தச்சிவப்பணுக்கள் மிகச் சீக்கிரமாகவே இறந்துவிடும். அப்படி நடக்கும்போது எலும்புமஜ்ஜைகள் அதிக ரத்த செல்களை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அப்படிஎலும்பு மஜ்ஜைகளால் அந்த அளவுக்கு ரத்த செல்களை உருவாக்க முடியாவிட்டால், ஹீமோலிசிஸ்என்ற ரத்தசோகை ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் குறைபாடு, நோய்த்தொற்று, சில மருந்துகள், நச்சுப் பொருள்கள் ஆகியவற்றால் ஹீமோலிசிஸ் ஏற்படலாம். ரத்தசோகையின் அறிகுறிகள்

ரத்தசோகைஇருப்பவர்களுக்கு சோர்வும் சோம்பலும் ஏற்படும். சோர்வு என்பது உடல் ரீதியானது.சோம்பல் என்பது மன ரீதியானது. ஒருவர் உடல்ரீதியாக சோர்வாக இருந்தால் அவரது மன நலன் பாதிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது. இவைபோக மேலும் சில அறிகுறிகள் இருக்கின்றன.

1. உடல் நலம்சரியில்லாதது போன்ற உணர்வு

2. மூச்சுவிடுவதில்சிரமம்.

3. மோசமாக பணிகளைஒருங்கிணைப்பது

4. இதயம் வேகமாகத்துடிப்பது அல்லது தாறுமாறாகத் துடிப்பது

5. குளிர்ச்சியானசூழலைத் தாங்க முடியாமை

இதெல்லாம் போக, தலைவலி,நாக்கு உலர்ந்து போவது, சுவையுணர்வு பாதிக்கப்படுவது, முழுங்கச் சிரம்மாகஇருப்பது, உடல் வெளுத்துப் போவது, நகம்உதிர்வது, வாயின் ஓரங்களில் புண் ஏற்படுவது, அதிகம்வியர்ப்பது, கால்களை ஆட்டிக்கொண்டே இருப்பது, கை கால்களில் வீக்கம், வாந்தி போன்றஅறிகுறிகளும் சிலருக்கு அரிதாக ஏற்படும்.

பரிசோதனை

ரத்தசோகை இருப்பதுசாதாரண ரத்தப் பரிசோதனையின் மூலமே தெரிந்துவிடும். ஒருவருக்கு ரத்தத்தில்ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதாகத் தெரிந்தால், அவருக்கு ரத்தசோகை இருப்பதாகஅர்த்தம். நோயாளியின் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், அவருடைய ரத்த சிவப்பணுக்கள் சிறியதாகவும் வெளுத்துப்போயும் காணப்படும். வைட்டமின் குறைபாடு இருந்தால், அவர்களது ரத்தத்தில்சிவப்பணுக்கள் குறைவாகவும் பெரியதாகவும் இருக்கும். ஆரோக்கியமான ஒருவருக்கு ஒருடெசிலிட்டர் ரத்த்த்தில் 11 -15 கிராம் ஹீமோகுளோபின் இருக்கும்.

ரத்தசோகையால்ஏற்படக்கூடிய பிரச்னைகள்:

பிரசவம்: கர்ப்பமான பெண்களுக்கு ரத்தசோகைஇருந்தால் பிரசவத்தின் போதும் அதற்குப் பிறகும் பல சிக்கல்கள் ஏற்படலாம்.பிரசவத்தின்போது பொதுவாகவே அதிக ரத்த இழப்பு ஏற்படும். ஏற்கனவே ரத்தசோகை நோய்இருந்தால், ரத்த இழப்பு உயிருக்கே ஆபத்தாக முடியும். தாய்க்கு ரத்தசோகை இருந்தால்குழந்தை குறைப் பிரசவத்திலும் குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பிருக்கிறது.அந்தக் குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.

சோர்வு: ரத்த சோகை நோயாளிகளின் வாழ்க்கை முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ரத்த சோகை தீவிரமாக இருந்தால், வேலை பார்ப்பதேஅவர்களுக்கு மிகவும் கடினமான காரியமாக இருக்கும். தங்களுடைய தினசரி வேலைகளையேஅவர்களால் கவனிக்க முடியாமல் போக்க்கூடும். இந்த நீண்ட கால சோர்வின் காரணமாகஒருவர் தீவிர மன அழுத்த நோயாளிகும் வாய்ப்பும் இருக்கிறது.

நோய்க்குள்ளாகும் வாய்ப்பு: ஆரோக்கியமானவர்களைவிட,ரத்தசோகையுடன் கூடியவர்கள் நோய்த் தொற்றுக் குள்ளாகும் வாய்ப்பு அதிகம்.ரத்தசோகையின் காரணமாக ரத்தத்தில் எடுத்துச் செல்லப்படும் ஆக்ஸிஜனின் அளவுகுறைவதால், அதிக ஆக்ஸிஜனுக்காக இதயம்அதிகமாக ரத்தத்தை "பம்ப்" செய்யவேண்டியிருக்கும். இது தொடரும் பட்சத்தில் இருதயம் செயலிழக்க்க்கூடும். ரத்தசோகையின்காரணமாக வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்படும். இதனால் நரம்புகள் சேதமடையும் வாய்ப்புஇருக்கிறது. நரம்புகளின் ஒழுங்கான செயல்பாட்டிற்கு வைட்டமின் பி 12 போதுமான அளவில்உடலில் இருப்பது அவசியம்.

ரத்த சோகைக்கான மருத்துவம்: இரும்புக்குறைபாடு - உடலில் தேவையான அளவு இரும்புச் சத்து இருப்பதை உறுதிசெய்வதற்காகஇரும்புச் சத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம்.

உணவுப் பழக்கம் - நோயாளி இரும்புச் சத்துஇல்லாத உணவுகளை உண்ணும் பழக்க உடையவராக இருந்தால், இரும்புச் சத்து அதிகம்இருக்கும் உணவுகளை அவர் சாப்பிட வேண்டும். கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள், சோயாபீன்ஸ், உலர் திராட்சை ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது.

வலிநிவாரணி, வீக்கத்தைக் குறைக்கும்மருந்துகளாலும் ரத்தசோகை ஏற்படலாம் என்பதால் அவற்றிற்கான மூல காரணத்தைச் சரி செய்யவேண்டும்.

நன்றி:தெனாலி

விமர்சனம் : பொக்கிஷம்


ஹேர்பின், வாடிய ரோஜா, வாடாத சாக்லேட் பேப்பர் என்று காதலின் சின்னமாக பலரும் பல விஷயங்களைப் பொக்கிஷங்களாகப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். இதில் சேரன் தன் காதலி எழுதிய கடிதங்களையும் காதலைப் பற்றி எழுதிய டைரிகளையும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறார். அவருக்குப் பிறகு அவருடைய மனைவியும் மகனும் அதே மரியாதையோடு அதை பாதுக்காக்கிறார்கள்.

கவிதையாகத்தான் இருக்கிறது கதை... ஆனால், சொன்ன விதத்தில்தான் சாக்லேட் பேப்பரையும் வாடிய பூவையும் பாதுகாக்கும் ஆசாமி எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றிவிடுகிறது.

இன்றைய தலைமுறையைக் காட்டி அவர்கள் காதலையும் காட்டி, 'நாங்கள் அந்தக் காலத்தில் எவ்வளவு கவிதையாகக் காதலித்தோம் பார்...' என்றும் காட்ட முனைந்திருக்கிறார் சேரன். ஆனால், 'ஏண்டா... உன்கிட்டேயிருந்து எஸ்.எம்.எஸ். வரலைன்னா என்னால் மூணு நிமிஷம் பொறுக்க முடியலை... முப்பது நாள் லெட்டருக்காகக் காத்துகிட்டு எப்படிடா இருக்கமுடிஞ்சது" என்று ஒரு கேரக்டர் சொல்லும் வசனம்தான் படத்துக்கான விமர்சனமாகவும் ஆகிவிடுகி
றது. இவ்வளவு வேகமாக இருக்கும் தலைமுறைக்கு சொல்லும் கதை எத்தனை வேகமாக இருக்கவேண்டும்.

ஆனால், சேரனும் பத்மப்ரியாவும் மாறிமாறி கடிதங்களை படித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அதையே எவ்வளவு நேரம்தான் பார்த்துக் கொண்டேயிருக்க முடியும். அதிலும் நாலு பக்க கடிதம் என்றால் நாலு பக்கத்தையும் பொறுமையாகப் படிக்கிறார்கள்.

படம் தொடங்கிய நொடியில் இருந்தே யுகம் யுகமாகக் கழிகிறது. நடுவில் பத்மப்ரியாவைத் தேடி சேரன் நாகூருக்கு வரும்போது கொஞ்சமே கொஞ்சம் வேகமெடுக்கிறது. சில நிமிடங்கள்தான்... அதன்பிறகு மீண்டும் பழைய கூட்டுக்குள் போய்விடுகிறது. இந்த மெதுவான திரைக்கதைதான் படத்துக்குப் பெரிய கத்தியாக ஆகிவிட்டது.

சேரன் கைவசம் நாலைந்து பாவனைகளை வைத்திருக்கிறார். அதை கூடியமட்டும் ஆட்டோகிராஃபிலேயே காட்டிவிட்டார். இன்னும் ஏன் நடிப்பாசையில் நம்மை சோதித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. நிச்சயமாக நல்ல இயக்குனர் சேரனை நாயகனாக நடிக்க வைக்கமாட்டார். இயக்குனர் சேரன் சிந்திக்க வேண்டிய நேரம் இது!

படத்தின் அழகான விஷயங்கள் கேமராவும் அது காட்டும் பத்மப்ரியாவும்! ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் ஓவொரு காட்சியையும் ஓவியம் போல அமைத்திருக்கிறார். எந்தக் காட்சியையுமே முதல் நொடியிலேயே அதன் தன்மையை உணர்த்தி விடுகிறது கேமராவின் கோணமும் ஒளியமைப்பும்.

பத்மப்ரியா முகபாவனைகளாலேயே மொத்த வசனத்தையும் பேசிவிடுகிறார். அதிலும் இஸ்லாமியப் பெண்ணாக வருவதால் முழுக்க மூடிய பர்தாவில் மிச்சமிருக்கும் கண்கள் பாதி கதைகளைச் சொல்கின்றன. உணர்வுகளை அத்தனை அற்புதமாகக் கொண்டு வருகிறார். க்ளைமாக்ஸில் அவருக்கான மேக்கப்தான் படு உறுத்தல்!

கதை எழுபதுகளில் நடப்பதாகக் காட்டும் சேரன், அதற்காக ஓவராக உழைத்துவிட்டார் போலும். ரூபாய் நோட்டுகள் பெரிதாக இருக்கின்றன. கதாபாத்திரங்கள் நாடகத் தமிழில் வசனங்கள் பேசுகிறார்கள். மீசையில் ஜெமினிகணேசனை நினைவுபடுத்துகிற மேக்கப் தொடங்கி பல இடங்களில் மிகை!

எந்த விஷயத்தையும் ஒரு எஸ்.எம்.எஸ்-ஸுக்குள் சொல்லிவிட வேண்டும் என்பதுதான் இன்றைய இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு. அந்த அளவுக்கு இல்லையென்றாலும் இரண்டு ஷோ சேர்ந்து பார்க்கிறோமோ என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு நீட்டி முழக்க வேண்டியதில்லை.

சேரன் சார்... உங்க பாரதி கண்ணம்மா, பொற்காலம் வெற்றிக்கொடி கட்டு எல்லாமே மக்களின் மனதில் நின்ற படங்கள்தான்... நீங்கள் நல்ல படம் என்றால் வேறு எதுவோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

சேரனின் பொக்கிஷம், சேரனுக்கு பொக்கிஷம்... மற்றவர்களுக்கு!
நன்றி:தெனாலி

‘திரு திரு துறு துறு’- கலகல விறுவிறு படம்?


சென்னை:

தமிழ்த்திரையுலகில் மீண்டும் ஒரு பெண் இயக்குநர் நந்தினி, இவர் இயக்கிவரும் திரு திரு துறு துறு படம் பற்றி கேட்டபோது. பெண் இயக்குநர் என்றாலே லேசான கதைகளைத்தான் தேர்வு செய்வார்கள் என்ற மனநிலை உள்ளது. தயாரிப்பாளர்களும் அதையே விரும்புகிறார்கள். லேசான கதையசத்தோடு வெற்றி பெற்றால் அவர்கள் நம்புவார்கள்.

இந்த திரு திரு துறு துறுவும் அப்படிபடிப்பட்ட கதைதான். கதைப்பாத்திரங்கள் அஜ்மல், ரூபா இருவரும் நெருங்கிய நண்பர்கள், இருந்தாலும் எதிரும் புதிருமான குணம் கொண்டவர்கள். இவர்கள் வேலை செய்யும் நிறுவன முதலாளி மவுளி ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அந்த சிக்கலை அஜ்மலும், ரூபாவும் சேர்ந்து எப்படி தீர்த்துவைக்கிறார்கள் என்பதுதான் கதை இதைதான் விறு விறுப்புடனும், கலகலப்புடனும் சொல்லுகிறது இந்த படம்.” என்றார்.

இந்திய அழுத்தங்களுக்கு மகிந்த இணங்கினால் தாய் நாட்டைப் பாதுகாக்க எதனைச் செய்யவும் தயங்கமாட்டோம்: ஜே.வி.பி. எச்சரிக்கை

இந்திய அழுத்தங்களுக்கு இணங்கி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச செயற்பட்டால், தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக எதனைச் செய்வதற்கும் தாம் தயங்கப் போவதில்லை என ஜே.வி.பி. மீண்டும் அரசை கடுமையாக எச்சரித்திருக்கின்றது.

"வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு காணி, காவல்துறை மற்றும் நிதி தொடர்பான அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அது தனிநாட்டுக்கு அல்லது நாடு பிளவுபடுவதற்கே வழிவகுப்பதாக அமையும்" எனவும் ஜே.வி.பி. தெரிவித்திருக்கின்றது.

"காவல்துறை அதிகாரம் எந்தவொரு மாகாண சபைக்கும் வழங்கப்பட்டால், அந்த மாகாணத்தின் காவல்துறை மத்திய அரசின் காவல்துறை மா அதிபரின் கீழ் செயற்படாது" எனவும் ஜே.வி.பி.யின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்திருக்கின்றார்.

தென்மாகாணத்தில் உள்ள தங்காலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர், தனது உரையில் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

"ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தன உடன்படிக்கையை அல்லது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு தனிநாட்டுக்கான அத்திவாரமாக அமையும்.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்காகவும், வவுனியா நகர சபைக்காகவும் நடைபெற்ற தேர்தல் தொடர்பாகக் குறிப்பிட்ட ரில்வின் சில்வா, இவை எதுவும் அவசரமானவை அல்ல. இந்தப் பகுதியில் உள்ள தமிழ் சமூகத்தினர் பயங்கரவாதம், மற்றும் பிரிவினைவாதத்துக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 12 வீதமானவர்களே வடக்கு - கிழக்குப் பகுதிகளில் உள்ளனர். இருந்தபோதிலும் அவர்களிடம் நாட்டின் நிலப் பகுதியில் 33 வீதமும், கடற்பகுதியில் 61 வீதமும் உள்ளது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களில் 55 வீதமானவர்கள் வடக்கு - கிழக்குப் பகுதிக்கு வெளியிலேயே வசிக்கின்றார்கள். வடக்கு - கிழக்குப் பகுதிகளில் உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது தென்பகுதியில் உள்ள தமிழர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப் பிரச்சினைக்கு இரண்டு வழிகளைத் தவிர வேறு வழிகளில் அரசினால் தீர்வை நாட முடியாது. இந்த இரண்டு மாகாணங்களிலும் வசிப்பவர்களுக்கு உண்மையான ஜனநாயக உரிமைகளை வழங்க வேண்டும். தமிழர்களை சமத்துவத்துடன் நடத்த வேண்டும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அமைப்புக்களினால் போர் வீரர்கள் கெளரவிக்கப்படும்போது, இரண்டு போர் வீரர்கள் கெளரவிக்கப்படும் முறை கேள்விக்குரியதாகவே இருக்கின்றது.

தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் இருந்து ஆச்சரியப்படத் தக்கவகையில் தப்பித்துக்கொண்ட முன்னாள் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் கடற்படைத் தளபதி ஆகிய இருவரும் இவ்வாறான நிகழ்வுகளில் நடத்தப்படும் முறை கேள்விக்குரியதாகவே இருக்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களுடன் வந்த கப்பல்கள் பலவற்றை அழித்து அவர்களைப் பலம் இழக்கச் செய்த முன்னாள் கடற்படைத் தளபதியை அரசு நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக நியமித்திருக்கின்றது. இதுதானா அவரைக் கெளரவிக்கும் முறை?" எனவும் ஜே.வி.பி. செயலாளர் கேள்வி எழுப்பினார்.

நன்றி:புதினம்

'மீட்கப்பட்ட மக்கள்' - 4: பேரினவாதத்தின் இன்னொரு கரம்


அரசியல் அதிகாரத்தை தமிழர் தாயகப் பகுதிகளுக்கும் பகிர்ந்தளித்து, தமிழர்களுக்கான ஆட்சி உரிமைகளை வழங்குமாறு இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் சிறிலங்காவுக்கு சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் - சத்தம் சந்தடி இன்றி தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் வேலைகள் பல வழிகளாலும் தொடங்கப்பட்டுவிட்டன. அதில் ஒரு வழிதான் சுகாதாரத்துறை.

1987 ஆம் ஆண்டில் இந்தியாவின் தலையீட்டுடன் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மாகாண சபைகளுக்கு வழங்கியிருந்த முதன்மையான அதிகாரங்களில் சுகாதார நிர்வாகமும் ஒன்று.

அதன்படி - மாகாண சுகாதார அமைச்சுக்கள் - மத்திய அரச சுகாதார அமைச்சின் அனுமதியோ உத்தரவோ இல்லாமலேயே - சுகாதாரம் தொடர்பான வேலைத் திட்டங்களைத் தத்தமது மாகாணத்திற்குள் செயற்படுத்தும் அதிகாரத்தினைக் கொண்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 2009 ஆம் ஆண்டில் வன்னிப் போர்க்களப் பகுதியில் இருந்து இலட்சக்கணக்கில் வெளியேறிய தமிழ் மக்களில் பெரும் பகுதியினர் செட்டிக்குளம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தடுப்பு முகாம்களை (Detention Camps) சிறிலங்கா அரசு 'நிவாரணக் கிராமம்' (Relive Villages) என்றும், அரசு சாரா நிறுவனங்கள் 'நிவாரண வலயம்' (Relive Zones) என்றும் பெயரிட்டு வைத்துள்ளன. ஆனால் - உண்மையில் இவை எல்லாம் 'தடுப்பு வதைபுரி முகாம்கள்' (Nazi style Concentration Camps) என்பது நாம் அறிந்ததே.

அதன்படி - வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ்வரும் வவுனியா மாவட்ட சுகாதாரச் சேவையின் கீழ் - செட்டிக்குளம் தடுப்பு முகாம்களது சுகாதாரச் செயற்திட்டங்களும், செட்டிக்குளம் அரச மருத்துவமனையின் பணிகளும் இதுவரை காலமும் மிகச்சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அந்த நிலையில் - செட்டிக்குளம் பகுதி தடுப்பு முகாம்களில் மேற்கொள்ளப்படும் மருத்துவ மற்றும் சுகாதாரச் செயற்பாடுகளை அங்கு இருந்தே நேரடியாக இயக்குவதற்கான இணைப்புச் செயலகம் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் 2009 ஆம் ஆண்டில் செட்டிக்குளம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கக் கட்டடத்தில் அமைக்கப்பட்டதுடன் தேர்ந்து எடுக்கப்பட்ட திறமை மிக்க தமிழ் மருத்துவர் ஒருவர் இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

வட மாகாண சபையின் சுகாதார அமைச்சும், வவுனியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து - முற்றுமுழுதாகத் தமிழ் மருத்துவர்களது தலைமையில் - தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களுக்கான சுகாதார மற்றும் மருத்துவ சேவையினை மிகச் சிறப்பாக வழங்கி வந்தன.

ஒவ்வொரு உயர்மட்ட சுகாதார நிர்வாகக் கலந்துரையாடல்களிலும் அந்த மக்களது சுகாதார மற்றும் மருத்துவப் பிரச்சினைகளைத் தெளிவான புள்ளி விபரங்களுடன் முன்வைத்துத் தீர்வுகாண முற்பட்டன.

இது சிறிலங்கா அரச நிர்வாக இயந்திரத்துக்குச் சங்கடத்தினை விளைவித்தது.

நேரடியாக சுகாதாரத்துறையினருடன் முரண்படுவது அனைத்துலக மட்டத்திலான சிக்கல்களைக் கொண்டுவரும் என்பதை உணர்ந்த சிறிலங்கா அரச வட்டாராம் - தந்திரோபாயமாக - பாதுகாப்பு அமைச்சு மற்றும் படைத்துறை மூலம் தமிழ் மருத்துவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியது.

இந்த வேளையில் - அண்மையில் - எதிர்பாராத விதமாக - அந்த தமிழ் மருத்துவ இணைப்பாளர் வீதி விபத்து ஒன்றில் சிக்கிப் படுகாயம் அடைந்து விட்டார்.

அதனை அடுத்து, அவரது இடத்துக்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு - மாகாண சுகாதார அமைச்சின் ஆலோசனை பெறப்படாமலேயே - சிங்கள இனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை அவசர அவசரமாக நியமித்துவிட்டது சிறிலங்கா மத்திய சுகாதார அமைச்சு.

இது ஒன்றும் இயல்பாக நடந்துவிட்ட ஒரு சாதாரண நிர்வாகச் சம்பவம் அல்ல. மிகவும் நுணுக்கமாக - அரவம் எதுவும் இன்றி - அரங்கேற்றப்படும் ஒரு பாரிய பேரினவாதத் திட்டம்.

தமிழ் இனத்தை வேரறுக்கும் மாறாத தனது இலட்சியத்தை அடைய, சிங்களப் பேரினவாதம் மாற்றி மாற்றிச் செயற்படுத்தும் பேரினவாத வடிவங்களில் ஒன்றுதான் - இப்போது இந்த மருத்துவச் சுகாதாரத்துறை.

அந்தத் தமிழ் மருத்துவ இணைப்பாளரைப் படுகாயப்படுத்திய அந்த வீதி விபத்துக் கூட சந்தேகத்துக்கு இடமான விதத்திலேயே நடந்தேறியதாக வவுனியா மாவட்ட தமிழ் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

அதன்பின்பு - சிங்களவர் ஒருவர் செட்டிக்குளம் பகுதிக்கான மருத்துவ சுகாதார இணைப்பாளராக நியமிக்கப்பட்டதன் பின்பு - சிறிது சிறிதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஓரங்கட்டப்பட்டு, சிறிலங்கா மத்திய சுகாதார அமைச்சும் சிங்கள ஆதிக்கமும் செட்டிக்குளம் பகுதியில் மெல்ல மெல்ல ஊடுருவத் தொடங்கின.

அதிலும் குறிப்பாக - இணைப்பாளராகச் சிங்கள மருத்துவரை நியமித்தவுடன், ஒவ்வொரு தடுப்பு முகாமுக்கும் பொறுப்பாகச் செயற்பட்ட தமிழ் மருத்துவர்களது பரிந்துரைகள் எவையுமே செல்லுபடியற்றவையாக ஆக்கப்பட்டன.

உதாரணமாக - அதுவரை காலமும் மருத்துவ மரபின் பிரகாரம் - தடுப்பு முகாமில் இருக்கும் ஒரு நோயாளி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டிய தேவை இருப்பதாக ஒரு மருத்துவர் கருதினால் எதுவித தடையுமின்றி நோயாளர் காவு வாகனம் (Ambulance) மூலம் குறித்த நோயாளி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வசதி இருந்து வந்தது.

ஆனால் இப்போது - தடுப்பு முகாமில் இருக்கும் ஒரு நோயாளி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என ஒரு தமிழ் மருத்துவர் கருதினால் கூட (அவர் சிறப்பு மருத்துவ நிபுணராக இருப்பினும் கூட) மேற்-பரிந்துரை ஒரு சிங்கள மருத்துவரால் அல்லது இராணுவ மருத்துவரால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனை நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்பின்னர் - அந்தச் சிங்கள இணைப்பாளரின் அனுமதி கிடைக்காத நிலையில் - குழந்தைகள், வயோதிபர்கள் உட்பட தமிழ் நோயாளர்கள் தடுப்பு முகாம்களில் கொத்துக் கொத்தாகச் செத்து விழத் தொடங்கினர்.

இதனால் - தமது கண் முன்னாலேயே சொந்தங்கள் செத்து வீழ்ந்து கொண்டிருக்கும் போதும் எதுவும் செய்ய வகையில்லாத தமது கையாலாகாத நிலையால் மனம் வெதும்பிய தமிழ் மருத்துவர்கள் ஒவ்வொருவராக செட்டிக்குளம் பகுதியில் இருந்து வெளியேற தொடங்கினர்.

தற்போது - செட்டிக்குளம் பகுதியில் உள்ள ஏழு தடுப்பு முகாம்களில் எதிலுமே பொறுப்பு மருத்துவர்களாகத் தமிழர்கள் இல்லை. எல்லாவற்றிலுமே சிங்களவர்களே பொறுப்பாக உள்ளனர்.

இது இவ்வாறு இருக்க - நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுவந்த செட்டிகுளம் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியின் (Medical Officer for Health அல்லது Divisional director of Health Services) அதிகாரங்கள், அவர் ஒரு தமிழர் என்பதால் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட சிங்கள் மருத்துவர்களிடம் கொடுக்கப்பட்டுவிட்டன.

சிறிலங்காவின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத ஒரு நடைமுறையாக - நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கை (Preventive and Curative) செட்டிக்குளம் பிரதேச சுகாதார அதிகாரியிடம் இருந்து பறிக்கப்பட்டது.

இதன் பின்னால் இன்னொரு பாரிய சதி நடவடிக்கை ஒளிந்திருக்கிறது.

சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிகளில் சிசு மரணங்கள் (Infant Deaths), கர்ப்பிணிகள் மற்றும் பிரசவத் தாய்மார்களது (Maternal Deaths) இறப்புக்கள் தொடர்பாக அறிக்கையிடுவதும் அடங்குகின்றது.

அந்த அறிக்கையானது அதிகாரபூர்வப் புள்ளி விபரங்களில் வெளியானால் அரசுக்குச் சிக்கல்களை உருவாக்கும். இதனாலேயே தமிழ் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு முகாம்களுக்குப் பொறுப்பான சிங்கள மருத்துவர்களிடம் முடக்கப்பட்டது.

விளைவாக - கடந்த ஐந்து மாத காலத்தில் - செட்டிக்குளம் பகுதியில் உள்ள தடுப்பு முகாம்களில் மட்டும் இறந்து போன 20 வரையான பிரசவத் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களது இறப்புக்கள் தொடர்பான கள விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை (Field Investigation Report) முழுமைப்படுத்தப்படவில்லை.

இது - சிறிலங்கா அரசின் திட்டமிட்ட செயற்பாடு வெற்றியடைந்திருப்பதையே காட்டுகிறது.

மேலும் - தமிழ் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணி அவரிடம் இருந்து பிடுங்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்குப் பொறுப்பான சிங்களவர்களிடம் முடக்கப்பட்டதால் - தாய் சேய் நலன் பேணும் நடவடிக்கைள் (Maternal and Child Health Activities) முற்றாகச் சீர்குலைந்து போயின.

கர்ப்பிணிகள் மற்றும் பிரசவத் தாய்மார்களது மரணங்களும் (Maternal Deaths) சிசு மரணங்களுமாகும் (Maternal Deaths) ஒரு நாட்டின், அல்லது ஒரு நாட்டில் உள்ள குறிப்பிட்ட ஒரு சமுகத்தின் சுகாதார நிலவரத்தின் குறிகாட்டிகள் (Health Indicators) எனக் கருதப்படுபவை.

ஒரு நாட்டில், அல்லது குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் தாய்மார்களது இறப்புக்களோ (Maternal Deaths) அல்லது சிசுமரணங்களோ (Infant Deaths) அல்லது இரண்டுமே கூட - அடிக்கடி நிகழ்கின்றது எனின் அந்தச் சமூகம் சுகாதாரத்தில் படுவீழ்ச்சி கண்டதாகவே (Poor Health Status) அர்த்தம்.

மேலும் - வன்னிக்கு உள்ளே இடப்பெயர்வுகள் நிகழ்ந்த காலத்திலேயே கட்டுப்பாட்டில் இருந்த கொடிய தொற்று நோயான சின்னமுத்து (Measles) செட்டிக்குளம் பகுதி ஏழு தடுப்பு முகாம்களில் வாழும் குழந்தைகள் மத்தியில் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.

இவ்வாறாக - தமிழ் மருத்துவர்களைத் துரத்தி விட்டுச் சிங்களவர்களை அந்த இடங்களுக்கு நியமித்துச் சுகாதாரச் சீர்கேடுகளை முடிமறைத்து, அவை பற்றிய புள்ளி விபரங்கள் வெளியே செல்வதைத் தடுத்துவிட்டது சிறிலங்கா அரசு.

இதே வேளையில் - வெளிநாட்டு அரசுகளும் சரி, அரசு சாரா நிறுவனங்களும் சரி "இடம்பெயர்ந்த மக்களுக்கு நாம் நேரடியாகத் தான் உதவுவோம்" எனக் கூறி மருத்துவ உபகரணங்களாகவும், மருந்துகளாகவும் மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றின் ஊடாகத் தமது உதவிகளைக் குவிக்க தொடங்கின.இவ்வாறாக வந்து குவிந்த மருத்துவ உபகரணங்களைப் பார்வையிட்ட தென்னிலங்கை மருத்துவமனை ஒன்றின் மருத்துவ அதிகாரி ஒருவர் "செட்டிக்குளம் மருத்துவமனையில் உள்ள உபகரணங்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் கூடக் கிடையாது" என்று சொன்னார்.

இதனால் - கொழும்பில் இரகசிய ஆலோசனைகள் அவசர அவசரமாக நடந்தன. "எப்படி இந்த மருத்துவ உபகரங்களைத் தென்னிலங்கைக்குக் கடத்துவது" என்பது பற்றித் தான் அந்த ஆலோசனைகள் நடந்தன.

தற்போதைய சிறிலங்காவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த மருத்துவ உபகரணங்கள் எல்லாம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் சொத்து.

செட்டிக்குளம் பகுதி தடுப்பு முகாம்களில் உள்ள மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் - செட்டிக்குளம் மருத்துவமனையிலும், தடுப்பு முகாம்களில் உள்ள சுகாதார நிலையங்களிலும் இந்தக் கருவிகள் அங்கு பயனற்றவை என வடக்கு மாகாண சுகாதார அமைச்சு எண்ணினால் - அந்த உபகரணங்களை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைகளுக்கோ அல்லது முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கோ அனுப்பலாம். வடக்குக்கு வெளியே வேறு எங்கும் கொண்டுசெல்ல முடியாது.

இதுதான் சிறிலங்கா அரச மட்டத்தினருக்குப் பிடிக்கவில்லை.

"பல கோடி ரூபாய்கள் பெறுமதியான - மிகத் தரமான அவ்வளவு உபகரணங்களையும், ஏனைய மருத்துவ உதவிகளையும் தெற்கிற்கு எப்படி எடுத்துச் செல்வது?"

வேகமாகச் சிந்தித்த மத்திய சுகாதார அமைச்சு - செட்டிக்குளம் ஆதார மருத்துவமனையின் அத்தியட்சகரான தமிழ் மருத்துவரை எப்படித் "தூக்குவது" என்பது பற்றியும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரத்தை செட்டிக்குளத்தில் எப்படி இல்லாது செய்வது என்பது பற்றியும் சிந்தித்து திட்டமிடத் தொடங்கியது.

இறுதியாக - குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடித்த மத்திய சுகாதார அமைச்சு - அவசர அவசரமாக - அமைச்சரவைத் தீர்மானம் ஒன்றின் மூலமாக செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களும் (தடுப்பு முகாம்கள்), ஆதார மருத்துவமனையும் மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதாகப் பிரகடனப்படுத்தும் வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறது.

இந்த முயற்சிக்கு உடந்தையாக - முன்னாள் தரைப்படை அதிகாரியும் தற்போதைய வடக்கு மாகாண ஆளுநருமான மேஜர் ஜெனரல் சந்திரசிறீயின் உத்தரவுக்கு இணங்க மாகாண சுகாதார அமைச்சும், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் எந்தவித எதிர்ப்பும் காட்ட முடியாது அமைதியாக இருப்பது அனைத்து தமிழ் மருத்துவத்துறையினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இது தொடர்பான முதலாவது அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்ட நிலையில், மத்திய சுகாதார அமைச்சின் இந்த முறைகேடான நடவடிக்கை தொடர்பில் உண்மை நிலையினை வெளி உலகுக்கு தெரிவித்து இந்த முறைகேட்டினை முறியடிக்க உதவுமாறு வவுனியா தமிழ் மாவட்ட சுகாதார வட்டாரங்கள் வேண்டுகின்றன.

இந்த விடயத்தைப் பெரிதாக்கி - உரிய முறையில் சிறிலங்கா அரசு மீது - இலங்கைத் தீவுக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் அழுத்தங்களைப் போட்டு தமிழ் இனத்துக்கு உதவுமாறு -

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உலகளாவிய ரீதியில் இயங்கும், தமிழர் மருத்துவ அமைப்புக்கள் மற்றும் தற்போது உருவாக்கப்படும் உலகத் தமிழர் பேரவை ஆகியோரிடம் அவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றனர்.

நன்றி:புதினம்

Saturday, August 29, 2009

பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார்! : இலங்கை எம்பி சிவாஜிலிங்கம்

கோவை : தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். இதுபற்றிய நம்பகமான தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன, என்ற இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 3 மாதங்களுக்கு முன், புலிகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்ட தகவல் வெளியானபோது, "இன்னும் சில நாட்களில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று புலிகளே அறிவிப்பார்கள்... சூழ்நிலை கருதி அப்படியொரு அறிக்கை வெளியாகும்!" என்று மதுரையில் இவர்தான் பேட்டி கொடுத்தார். அடுத்த சில தினங்களிலேயே அப்படியொரு அறிக்கையை செல்வராசா பத்மநாதன் வெளியிட்டார். இந்நிலையில் கோவையில் நிருபர்களிடம் பேசிய சிவாஜிலிங்கம்,
எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். அவர் இறந்துவிட்டதாக செல்வராஜா பத்மநாதன் கூறியிருப்பதில் ஏதேனும் அரசியல் சூசகம் அடங்கியிருக்கலாம். பத்மநாபன் கைது முதற்கொண்டு பல விஷயங்களை நாங்கள் அப்படித்தான் கருதுகிறோம். தேசிய தலைவர் இறந்துவிட்டதாக எந்த தகவலும் எங்களுக்கு உறுதியாக, ஆதாரங்களுடன் கிடைக்கவில்லை. இலங்கை அரசு அதற்கான ஆதாரங்கள் எதையும் தரவுமில்லை.

நான் தமிழ்மக்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான். தேசிய தலைவர் உயிருடன் உள்ளாரா என்பதற்கு காலம் பதில் சொல்லும். தற்போதைய உடனடி தேவை அகதிகளாக உள்ள 3 லட்சம் மக்களை அங்கிருந்து காப்பாற்றி, அவர்களின் இடங்களில் குடியமர்த்துவதுதான். மற்றபடி தமிழர்களுக்கு நிரந்தரத்தீர்வு என்பது சுய அரசியல் நிர்ணய சபையுடன் கூடிய தமிழீழமே. ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வதா இல்லையா என்பது விடுதலைப் புலிகளின் கையில்தான் உள்ளது என்றார்.

தமிழினப்படுகொலைகள் புகைப்பட சாட்சிகள்!

இலங்கையில் தொடரும் தமிழினப்படுகொலைகளுக்கு சாட்சிகளாக சில தினங்களுக்கு முன்பு இளைஞர்கள் கை,வாய் கட்டப்பட்டு நிர்வாணமாக்கி சிங்கள ராணுவத்தினால் வெறித்தனமாக சுடப்பட்டுபடுகொலை செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாயின

.


தற்போது ஈழத்தமிழின மக்களின் சிதைந்த உடல்கள், நிர்வாணமாக கிடக்கும் கோரக்காட்சிகள் வெளியாகியுள்ளன. அனுராதபுரத்தில் இலங்கை விமானப்படை (இந்தியா, பாகிஸ்தான், சீனா,ரஸ்யா ஆகிய நாடுகளிடம் வாங்கியது) தாக்குதலில் கொல்லப்பட்ட இளைஞர்கள், பெண்கள், போராளிகள் உடல்களை மைதானத்தில் கிடத்தியுள்ளார்கள்.

உலகப்போர் சட்டங்களையெல்லாம் காலில் மிதித்துவிட்டு காட்டுமிரண்டிகளைபோல உடல்களை நிர்வாணப்படுத்தி கோரத்தாண்டவம் ஆடியுள்ள சிங்கள இராணுவம் கழுகுக்கும், நாய்க்கும் தமிழன் உடல்களை உணவாக்கியிருக்கிறார்கள்.

உலகின் வேறு எந்த இனமும் இவ்வளவு கொடூரமாக அழிக்கப்பட்டிருக்காது என்பதற்கு தற்போது வெளிவந்துள்ள வீடியோ காட்சிகளும், இந்த புகைப்படங்களுமே சாட்சி.

இலங்கை அரசின் மீது போர்க்குற்ற நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கு என்று இந்த சாட்சிகள் போதும் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.
நன்றி:தெனாலி