Showing posts with label politics. Show all posts
Showing posts with label politics. Show all posts

Thursday, December 24, 2009

முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். இன் பித்தலாட்டம்!

vote-012துரோகம்! பதவி சுகத்துக்காக நடந்துள்ள அப்பட்டமான துரோகம்! தமிழகத்தின் ஐந்து தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணை நீரில், தமிழகத்தின் நியாயவுரிமையைக் காவு கொடுத்து விட்டார், “தமிழினத் தலைவர்’கருணாநிதி.

முல்லைப் பெரியாறு அணையில் மெல்லிய அதிர்வு ஏற்பட்டதைப் பூதாகரமாக்கிப் பீதியூட்டி, 1979 முதல் கடந்த 30 ஆண்டுகளாக பெரியாறு நீரில், தமிழகத்தின் நியாயவுரிமையை கேரளம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இது தொடர்பாக இரு மாநில அரசுகளும் தொடுத்த வழக்குகள் 1998- இல் எடுத்துக் கொள்ளப்பட்டு, எட்டாண்டு இழுத்தடிப்புகளுக்குப் பிறகு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதி மன்றம் கடந்த 27.2.2006 அன்று தீர்ப்பளித்தது.

அத்தீர்ப்பை ஏற்க மறுத்து, முடக்கும் வகையில் 15.3.2006 அன்று கேரள அரசு புதிய சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்தது. இதை எதிர்த்து மார்ச் 2006- இல் உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்தது. அதன் பிறகு, உச்சநீதி மன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யவேண்டுமென்று கேரள அரசு மனுதாக்கல் செய்தது. இந்த வழக்குகளின் விசாரணை முடிவுக்கு வரும் நிலையில், இந்த வழக்குகளை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்ற, உச்சநீதி மன்றம் கடந்த நவம்பர் 10-ஆம் தேதியன்று உத்தரவிட்டுள்ளது.

கேரள அரசின் சட்டத் திருத்தம் செல்லுமா என்ற வழக்கில், ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கையும் சேர்த்து, பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்கும் உரிமைக்கு உச்சநீதி மன்றம் வேட்டு வைத்துவிட்டது. முப்பதாண்டு காலப் போராட்டத்தை, உச்சநீதி மன்ற உத்தரவு இப்போது மறுபடியும் ஆரம்ப நிலைக்கே கொண்டு வந்துவிட்டது. முல்லைப் பெரியாறு அணை வழக்கில் கேரள அரசு, மத்தியிலுள்ள காங்கிரசு அரசு, உச்சநீதி மன்றம் ஆகிய மூன்றும் ஓரணியில் நின்று தமிழகத்தின் நியாயவுரிமைக்கு அநீதியிழைத்து வருகின்றன. இத்தனைக்கும் பிறகும் அமைதி காக்கிறார், கருணாநிதி.

வழக்குகள் விசாரணையில் உள்ளபோதே, முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்காக ஆய்வு செய்ய, கேரள அரசுக்கு அனுமதி அளித்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைக் கண்டித்து மதுரையில் நவம்பர் முதல் நாளன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார் கருணாநிதி. உடனே, மைய தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜாவின் அலுவலகங்களில் “மையப் புலனாய்வுத் துறை சோதனை’என்ற நாடகத்தை காங்கிரசு எஜமானர்கள் ஏவி விட்டனர். அரண்டு போன கருணாநிதி, முல்லைப் பெரியாறு தொடர்பான மதுரை கூட்டத்தையே ரத்து செய்துவிட்டார். இதன் மூலம், தனது சரணாகதி சமிக்ஞையை டெல்லி எஜமானர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

கேரள அரசு புதிதாகச் சட்டம் போட்டதை எதிர்த்தும், மைய அரசின் வஞ்சகத்தை எதிர்த்தும் எதுவும் செய்யாத கருணாநிதி, பிரச்சினையை இப்போது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதைக் கண்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறார். இப்போது மீண்டும் இழுத்தடிப்புக்கான உத்தரவு வந்ததும், “உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராகச் செயல்படும் கேரள முதல்வர் அளவுக்கு எனக்குத் தைரியம் இல்லை”என்று அறிக்கை வெளியிடுகிறார்.

நவம்பர் 10- ஆம் நாளன்று உச்சநீதி மன்றத்தில் இப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாக, தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் பராசரணிடம் “”இந்த உத்தரவை ஏற்றுக் கொள்கிறீர்களா?” என்று நீதிபதிகள் கேட்டபோது, அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். பின்னர், மதியம் மீண்டும் நீதிமன்றம் கூடியபோது, உத்தரவை ஏற்பதாக அறிவித்திருக்கிறார். இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்ன? அவர் தன்னிச்சையாக இப்படி முடிவை மாற்றிக் கொள்ள முடியுமா? அல்லது, கருணாநிதியின் ஒப்புதல் இல்லாமல் இப்படி நடந்திருக்கத்தான் முடியுமா? இப்போது ஒப்பாரி வைத்து அறிக்கை வெளியிடும் கருணாநிதி, அன்று இந்த உத்தரவை நாங்கள் ஏற்கவில்லை என்று அறிவிக்க வேண்டியதுதானே! அதைவிட்டு இப்போது கண்ணீர் அறிக்கை வெளியிடுவது யாரை ஏமாற்ற?

இந்தத் துரோகம் கருணாநிதியோடு முடிந்துவிடவில்லை. 1980- இல் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தமிழக போலீசிடம் இருந்த முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புப் பொறுப்பை கேரளப் போலீசுக்குத் தாரை வார்த்தார். 1980 -லிருந்தே முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்த போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி, கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்கள் – பொறியாளர்களைத் தாக்கியும், கைது செய்தும், வாகனங்களைப் பறிமுதல் செய்தும் வழக்கு போட்டும் கேரள அரசு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தது. இருப்பினும் எம்.ஜி.ஆரும் அதன் பிறகு ஜெயலலிதா, கருணாநிதியும் இவற்றுக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், குறைந்தபட்சம் கேரள அரசுக்குக் கண்டனம்கூடத் தெரிவிக்காமல், தொடர்ந்து தமிழகத்துக்குத் துரோகமிழைத்தே வந்துள்ளனர். பெரியாறு அணையைப் பராமரித்து இயக்குவது, படகு விடுவது, அணைக்கான பாதைகளைப் பயன்படுத்துவது –எனப் பல உரிமைகளை கேரளத்துக்குத் தாரை வார்த்திருக்கின்றனர். முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றத்தில் கேரள அரசின் வழக்குரைஞர் 31 முறை வாய்தா கேட்டு இழுத்தடித்த போதிலும், தமிழக ஆட்சியாளர்கள் அதை எதிர்த்து வாயே திறக்கவில்லை.

இப்போது கருணாநிதியின் துரோகம் அம்பலமானதும், ஏதோ அவரால்தான் தமிழகத்தின் உரிமை பறிபோய் விட்டது போலக் கூப்பாடு போடுகிறார் ஜெயலலிதா. கேரள தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்ட தொகுதிகளில் “முல்லைப் பெரியாறில் நீரைத் தேக்கவிட மாட்டோம்!” என்று வாக்குறுதி அளித்து ஓட்டுப் பொறுக்கிவிட்டு, இப்போது தமிழகத்தின் உரிமைக்காகப் போராடுவதாகப் பாசாங்கு செய்கிறார். முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்கலாம் என்று உச்சநீதி மன்றம் 27.2.2006 -இல் தீர்ப்பளித்தபோது ஆட்சியிலிருந்தவர் ஜெயலலிதாதான். “அப்போது கோடைகாலமாக இருந்ததால் தீர்ப்பை செயல்படுத்த முடியவில்லை”என்று இப்போது தனது துரோகத்துக்குப் புதுவிளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார்.

“பதவி பேரத்தில் பாழான தமிழக உரிமைகள்” என்று கருணாநிதியை மட்டும் குறிவைத்து தாக்கி, தினமணியில் கட்டுரை எழுதுகிறார், பழ.நெடுமாறன். “தி.மு.க. அரசு தேவையில்லாமல் மைய அரசிடம் பிரச்சினையை எழுப்புகிறது. அண்டை மாநிலங்களுக்கிடையே வெறுப்பையும் முரண்பாட்டையும் தோற்றுவிப்பதை தமிழக ஆட்சியாளர்கள் நிறுத்த வேண்டும்” என்று கருணாநிதியைக் குறிவைத்துத் தாக்குகிறார், வலது கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளரான பரதன். “கருணாநிதியின் துரோகத்தால் தமிழகம் பாலைவனமாக மாறும்” என்று ஜெயலலிதாவின் பின்னே நின்று கொண்டு சீறுகிறார், வைகோ.

கருணாநிதி மட்டுமல்ல; அவருக்கு முன்பிருந்தே, எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஆட்சிகளில் கேரள அரசுக்கும் மைய அரசுக்கும் துணைநின்று தமிழகத்தின் நியாயவுரிமை பறிகொடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை இவர்கள் திட்டமிட்டே மறைக்கின்றனர். பெரியாறு அணை பற்றி செய்திகள் அடிபடும்போது, பரபரப்பாக அறிக்கை வெளியிடுவதும், அடையாள எதிர்ப்புப் போராட்டம் நடத்துவதும், அதன் பிறகு வாய்மூடிக் கிடப்பதுமாக வைகோ வகையறாக்கள் சூரத்தனம் காட்டுகின்றன.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதியின் துரோகம் ஒரு பங்கு என்றால் ஒன்பது பங்கு துரோகத்தை புரட்சி பேசும் சி.பி.எம். கட்சி செய்து கொண்டிருக்கிறது. “உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!” என்று சர்வதேசியம் பேசி சவடால் அடிக்கும் இக்கட்சி, ஓட்டுக்காக முதலாளித்துவ இனவெறியைத் தூண்டிவிட்டு குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது. கேரள மக்களுக்காக, தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்து அனுப்பும் உணவு தானியங்கள்-காய்கறிகள் முதலானவற்றுக்குத் தேவையான நீரின் அளவு 511 டி.எம்.சி.யாகும். அந்த அளவுக்கான நீரையாவது தமிழகத்துக்குத் தரவேண்டும் என்ற நியாய உணர்வு கூட அக்கட்சியிடம் இல்லை. நிபுணர்கள் ஆய்வு செய்து அணை வலுவாக உள்ளது என்று அறிவித்துள்ள போதிலும், பெரியாறு அணையில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக திரித்துச் சொல்லி பயபீதியூட்டியும், குறுகிய தேசிய இனவெறியைக் கிளப்பிவிட்டும், புதிய அணை கட்டும் திட்டத்தைச் செயல்படுத்தி இடுக்கி அணைக்கு நீரைக் கொண்டு செல்ல கேரள “இடதுசாரி’அரசு விழைகிறது. இதன்மூலம் அணையைத் தனது பொறுப்பில் வைத்துக்கொண்டு, தமிழகத்தின் ஐந்து தென்மாவட்டங்களைப் பாலைவனமாக்கத் துடிக்கிறது.

இவ்வளவுக்குப் பின்னரும், இரு மாநில அரசுகளும் இணக்கமாகப் பேசித் தீர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் மையத் தலைமை உபதேசம் செய்து, தமிழகத்தின் நியாயவுரிமையை மறுக்கிறது. “”முல்லைப் பெரியாறு பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் தேட தமிழக அரசியல்வாதிகள் கீழ்த்தரமாக முயற்சிக்கிறார்கள்” என்று சாமியாடுகிறார் கேரள போலி கம்யூனிஸ்டு முதல்வர் அச்சுதானந்தன். தமிழகத்தின் நியாயவுரிமையைக் கோருவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாம்! கேரள “இடதுசாரி’அரசின் அடாவடித்தனத்தை எதிர்க்க முன்வராத சி.பி.எம்.கட்சி, தமிழகத்தில் விவசாயிகளின் உரிமைக்காக விவசாய சங்கம் கட்டவும், போராடவும் ஏதாவது அருகதை இருக்கிறதா? தமிழகத்தின் நியாயவுரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து சி.பி.எம்.கட்சியின் தமிழ் மாநிலக்குழு எந்தப் போராட்டத்தையும் நடத்தியதில்லை. கேரள “இடதுசாரி’அரசின் அடாவடித்தனத்தை எதிர்த்து கட்சியின் மத்தியக் கமிட்டியில் வாதிட்டதுமில்லை. இத்துரோகக் கூட்டத்தை அம்பலப்படுத்தித் தனிமைப்படுத்தாமல், பெரியாறு நீரில் தமிழகத்தின் நியாயவுரிமையைச் சாதிக்க முடியுமா? ஆனால், கருணாநிதி, ஜெயலலிதா மட்டுமல்ல; எல்லா ஓட்டுக் கட்சிகளும் தேர்தல் கூட்டணிக்காக சி.பி.எம். துரோகக் கூட்டத்தை எதிர்த்து வாயே திறப்பதில்லை. கருணாநிதியின் துரோகத்தைச் சாடும் பழ.நெடுமாறன் வகையறாக்கள், ஜெயலலிதாவையோ சி.பி.எம். துரோகத்தையோ சாடுவதுமில்லை.

நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதி மன்றத் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த ஒரு மாநில அரசு மறுக்கும் போது, மைய அரசு அம்மாநில அரசு மீது இராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இதை மைய அரசு செய்யாத போது, மைய அரசின் எல்லா அதிகாரங்களையும் ஏற்க மறுப்பதற்கு தமிழகத்துக்கு எல்லாவித நியாயமும் உரிமையும் உண்டு. இந்த நியாயத்தையும் உரிமையையும் உறுதி செய்வதுதான் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையாகும். இதுவொன்றுதான், இரு வேறு தேசிய இனங்களைக் கொண்ட அண்டை மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சரியான வழியுமாகும்.

பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது, நிரந்தர நீண்டகாலத் தீர்வாக அமையும் ஒரு ஆயுதம். அதேசமயம், தற்போதைய உடனடிப் பணியாக கேரள மாநிலத்துக்கு எதிரான பொருளாதார முற்றுகை, பரம்பிகுளம் — ஆழியாறு – மண்ணாறு போன்ற ஆறுகள் வழியே கேரளத்துக்குச் செல்லும் தண்ணீரை மறுப்பது, சபரிமலை மற்றும் கேரளத்துக்குச் செல்லும் சாலை மற்றும் இரயில் போக்குவரத்தை மறிப்பது போன்ற நடவடிக்கைகளை தமிழக மக்கள் மேற்கொள்ள வேண்டும். கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு வரும் தண்ணீர் எவ்வளவு முக்கியமோ, அதைப்போல தமிழகத்திலிருந்து கேரளம் அடையும் பொருளாதார உதவியும் முக்கியம் என்பதை அம்மாநில மக்களுக்கு உணர்த்தியே தீர வேண்டும். இது இனவெறியூட்டும் செயல் அல்ல. மாறாக, தமிழகத்தின் நியாயவுரிமையை மறுக்கும் இனவெறி அடாவடித்தனத்துக்குப் பாடம் புகட்டும் செயல்தான்.

நாற்காலி சுகத்திற்காக “தேசிய ஒருமைப்பாடு’ நீரோட்டத்தில் சங்கமித்துவிட்ட தமிழக ஓட்டுக்கட்சி துரோகிகளும், அவற்றின் பின்னே வால்பிடித்துச் செல்லும் தமிழினப் பிழைப்புவாத அமைப்புகளும் இத்தகைய போராட்டங்களை முன்னெடுக்காது. இத்துரோகக் கும்பலைப் புறக்கணித்துவிட்டு, தமிழகத்தின் நியாயவுரிமையை மீட்க, புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் தலைமையில் அணிதிரண்டு போராட தமிழக மக்கள் முன்வர வேண்டும்.

-புதிய ஜனநாயகம், டிசம்பர்’ 2009

நன்றி:வினவு

Monday, December 21, 2009

அதிபர் தேர்தல்:வாக்களிக்க விரும்பாத முகாம் தமிழர்கள்!

கொழும்பு:

இலங்கையில் வரும் 2010 ஜனவரி மாதம் 26ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முகாமில் உள்ள பல லட்சம் தமிழர்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்று தெரிகிறது. இலங்கையில் இறுதிக்கட்டப் போருக்குப்பின் தமிழர்கள் 3.5லட்சம் பேர் முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் 1.5லட்சம் பேரை அவர்கள் சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்றம் செய்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில்இலங்கையில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அதிபர் தேர்தலை நடத்த அதிபர் ராஜபக்செ முடிவு செய்தார். அதன்படி 2010 ஜனவரி 26ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்மூலம் அறிவிக்கப்பட்டது.

இதில் இலங்கை ராணுவத்திலிருந்து ராஜினாமா செய்த கூட்டுப்படைத்தளபதி சரத்பொன்சேகா எதிர்க்கட்சிகளின் ஆதரவு பெற்ற வேட்பாளராக அதிபர் ராஜபக்செவை எதிர்த்து போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் ஐக்கிய தேசியக்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் அதிபர் தேர்தலில் வாக்களிக்க தேர்தல் அணையம் ஏற்பாடு செய்வேண்டும் என்று கோரிக்கைவைத்தார்.

அதன்படி இலங்கை முகாமில் உள்ள தமிழர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.அதற்காக முகாம் அலுவலகத்தில் விண்ணப்பக்க முகாம் தமிழர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

ஆனால் முகாமில் இருக்கும் 2லட்சம் தமிழர்களில் 5ஆயிரம் முதல் பத்தாயிரம் வரையிலான தமிழாகள் மட்டுமே வாக்களிக்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். மீதம் உள்ள 1.9 லட்சம்தமிழர்கள் அதிபர்தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.

அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்ற மனநிலை முகாம் தமிழர்களிடம் ஏற்பட்டுள்ளதுதான் இதற்கு காரணம் என்று தெரிகிறது.

தமிழர்கள பகுதிகள் புலிகளின்கட்டுப்பாட்டில் இருந்தபோது நடைபெற்ற அதிபர் தேர்தலில் புலிகளின் வேண்டுகோளை ஏற்று பல லட்சம் தமிழர்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர் என்பது இங்கு குறிப்பிட்டத்தக்கது.
நன்றி:தெனாலி

பணத்தைப் பறிச்சுட்டாங்க..!


பணத்தைப் பறிச்சுட்டாங்க..!

.தி.மு.-வின் பிரம்மாஸ்திரம்!

அரசியல் செய்திகள் இருந்தால் ஆபீஸ் பக்கம் வரவும் என்று கொஞ்சம் கண்டிப்பான குரலில் சொல்லியிருந்ததால், சீரியஸான முகத்துடன் வந்திருந்தார் ரகசிய தெனாலி.

சினிமா செய்திகள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன. ஆனால், அரசியல் செய்திகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லையோ என்ற ஆதங்கம்... அதனால்தான் அப்படி கடிந்து கொண்டோம் என்று விளக்கம் சொன்னதும் சமாதானம் ஆகிவிட்டார்.

இடைத்தேர்தல் செய்திகளில் இருந்தே ஆரம்பித்தார்.

ஏகமாக எதிர்பார்க்கப்பட்ட திருச்செந்தூர் இடைத்தேர்தல் அத்தனை சுறுசுறுப்பாக இல்லை. கடமைக்காக பலரும் வேலை செய்கிறார்கள். தி.மு.. தரப்பில் முக்கிய தலைவர்கள் பலரும் அழகிரி அத்தனை ஆர்வமாக இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு தாங்களும் சைலண்ட் ஆகிவிட்டனராம். அழகிரிக்கும் அனிதாவுக்கும் அத்தனை பிணைப்பு ஏற்படவில்லை என்பதால் அவரும் கணக்குக்கு சில தினங்கள் தலைகாட்டியதோடு சரி என்று ஒதுங்கிக் கொண்டாராம்! இதனால், அனிதா தரப்பு கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறது. கம்பீரமான வித்தியாசம் கைக்கு எட்டாமல் போய்விடுமோ என்று கலங்கிப் போயிருக்கிறார். என்று நிறுத்தியவரிடம்,

அப்போ வெற்றி உறுதி என்று முடிவு செய்துவிட்டாரா?' என்றோம்.

அதை அவர் உறுதி செய்யவில்லை. .தி.மு.-வின் மந்தமான பிரசாரம் உறுதி செய்திருக்கிறது. தி.மு.. தரப்பில் ஆரம்பத்திலேயே வோட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் பட்டுவாடா நடந்துவிட்டது என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் அ.தி.மு.க இன்னமும் முடிச்சை அவிழ்க்கவேயில்லை. அதிமுகவின் வேட்பாளரான அம்மன் நாராயணனின் சொந்த ஏரியாவான உடன்குடி பகுதியில் மட்டும் வோட்டுக்கு 200 ரூபாய் என்ற கணக்கில் விநியோகம் நடந்திருக்கிறதாம். ஆனால், திருநெல்வேலியில் பிடிபட்ட 41 லட்ச ரூபாயை வைத்து அனுதாப வோட்டுக்களைக் கவர்ந்துவிடலாம் என்று திட்டம் போடுகிறதாம் அ.தி.மு.. அதனால்தான் நெல்லையில் அதிமுகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் வசம் இருக்கும் ஹோட்டலில் வைத்திருந்த பணத்தைக் கைப்பற்றப் போகிறார்கள் என்று தெரிந்தும் அதிமுக எதுவும் செய்யாமல் விட்டுவிட்டது என்கிறார்கள்.

அது எப்படி வோட்டுக்களைக் கவரமுடியும்?

அதாவது, உங்களுக்குக் கொடுப்பதற்காகக் கொண்டு வந்த பணம்தான் அது. அதை அப்படியே போலீஸும் ஆளுங்கட்சியும் கொள்ளை அடித்துவிட்டது. அடித்த பணத்தில் கொஞ்சத்தை மட்டும்தான் கணக்கில் காட்டியிருக்கிறார்கள். உங்களுக்கு வரவேண்டிய பணத்தை தட்டிப் பறித்துக் கொண்டு போனவர்களுக்கா வோட்டு என்று கேட்கப் போகிறார்களாம். ஆனால், நேரடிப் பிரசாரம் முடிந்த நிமிடத்தில் இருந்து தனக்கே உரித்தான ஸ்பெஷல் பிரசாரத்தை அதிமுக தொடங்கும் என்று பேசிக் கொள்கிறார்கள். அந்த விஷயத்தில் வேட்பாளர் அம்மன் நாராயணன் எக்ஸ்பர்ட்டாம்! கடந்தமுறை அனிதாவை அவர் ஜெயிக்க வைத்ததே அந்த டெக்னிக்கால்தானாம்! அதை நினைத்து அனிதாவே கொஞ்சம் அரண்டு போய்த்தான் இருக்கிறாராம். அனிதாவை மிரட்டும் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அவர் வோட்டு கேட்டுச் செல்லும் கிராமங்களில் உங்களுக்குத்தானே... இரட்டை இலையில் கண்டிப்பா போட்டுடுறோம் என்று கிராம மக்கள் சொல்கிறார்களாம். இதை எப்படிச் சமாளிப்பது என்று குழம்பிப் போயிருக்கிறார் அனிதா!

நல்ல வேடிக்கையா இருக்கே! இது இல்லாமல் சில வோட்டு வங்கிகளை வளைக்கும் முயற்சி நடக்குமே... அப்படி ஏதாவது?

ஏன் இல்லாமல்... திருச்செந்தூர் கோவிலில் திரிசுதந்திரர்கள் என்று ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கும். கோவில் கட்டமைப்பில் உதவியவர்களின் வாரிசுகள் அவர்கள் என்று மரியாதையோடு நடத்தப்பட்டார்கள். அவர்களும் பக்தர்களுக்கு கோவிலை சுற்றிக் காட்டுகிறேன் என்று அழைத்துச் சென்று காசு வசூலிக்கும் கதை நீண்டகாலமாக நடந்து கொண்டிருந்தது. சமீபத்தில் கோவில் நிர்வாகத்தைக் கையில் எடுத்த கோவில் அதிகாரி பாஸ்கரன் திரிசுதந்திரர்களை வெளியேற்றிவிட்டார். இவர்கள் கையில் நேரடியாக 3000 வாக்குகளும் மறைமுகமாக சில ஆயிரம் ஆதரவாளர்கள் வாக்குகளும் இருப்பதால் இவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது தி.மு..

அப்பா... திகட்டத் திகட்ட திருச்செந்தூர் செய்திகளைக் கொடுத்து விட்டீரே... நன்றி! என்றோம்.

இப்போதாவது காதில் விழுந்த சில சினிமா செய்திகளைச் சொல்லலாமா? என்று பணிவாக அனுமதி கேட்டுவிட்டுத் தொடர்ந்தார்.

அதிகாரச் சண்டை சினிமா தயாரிப்பில் புகுந்துவிட்டது. அரசியலில் இருக்கும் மூத்த தலைமுறையினரின் இளவல்கள் சினிமா தயாரிப்பில் முட்டிக் கொண்டிருக்கிறார்களாம். மூத்த நடிகர் ஒருவர் இளவலுக்கு தேதி கொடுத்திருக்கிறார். படப்பிடிப்பு தொடங்கப் போகும் நிலையில், அந்தத் தேதிகளைக் கேட்டு இன்னொரு இளவல் அந்த நடிகரிடமே கேட்டாராம். அந்த நடிகர் நோ சொல்லிவிட, தம்பிதான் இதற்குக் காரணம்... தயாரிப்பிலும் அவர்கள் சூரியன்தான் பிரகாசிக்க வேண்டுமா என்று கொந்தளிக்கிறாராம் அண்ணன் மகன்!

ஓஹோ என்று மட்டும் சொன்னோம்.

அடுத்த செய்தி இளைய தளபதி பற்றி..! சுறாவுக்குப் பிறகு அவர் நடிக்கப் போகும் படத்தை இயக்கப் போவது ஜெயம் ராஜா. இன்னமும் வேட்டைக்காரனே ரிலீஸ் ஆகாத நிலையில் ஜெயம் ராஜா, தன் தம்பியை வைத்து தில்லாலங்கடியை முடித்துவிடலாம் என்று திட்டமிட்டாராம். இன்னமும் கதைகூடச் சொல்லவில்லை. இப்படிப்பட்ட நிலையில் என் பட வேலைகளைப் பார்க்காமல் தம்பி படத்துக்கு எப்படிப் போகலாம் என்று ராஜா மீது கடுப்பாகிவிட்டாராம் விஜய். இதைக் கேள்விப்பட்ட எடிட்டர் மோகன், இவர் மட்டும் அடுத்தடுத்து படங்கள் நடிப்பார்... ஆனால், இவர் ஓகே சொன்ன ஒரே காரணத்துக்காக என் மகன் எல்லா வாய்ப்புகளையும் விட்டுவிட்டு இவருக்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டுமா என்று தனக்குத் தெரிந்த வட்டாரத்தில் குமுறுகிறாராம். இதற்கிடையில் லிங்குசாமி சொன்ன கதை விஜய்க்கு பிடித்துப் போனதால், ராஜாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு லிங்குவை ஓகே பண்ணிவிட்டாராம் விஜய்.

பிரிந்த செய்தியைச் சொன்னால் சேர்ந்த செய்தி சொல்வீர்களே..?

சொல்லலாமே... செல்வராகவனும் யுவனும் அனேகமாகச் சேர்ந்துவிடுவார்கள் என்று பேச்சு இருக்கிறது. இருவருக்குமே பிரிவுக்குப் பிறகு முழு திருப்தி கிடைக்கவில்லையாம். அதனால், இருவருக்கும் பொதுவான நண்பர்கள் இணைப்பு படலத்தை அரங்கேற்ற, செல்வா விக்ரமை வைத்து இயக்கும் படத்துக்கு இசை யுவன்தான் என்கிறார்கள். சேர்ந்தால் நல்லதுதானே! என்று சொல்லிவிட்டு கிளம்பினார் ரகசிய தெனாலி!
நன்றி:தெனாலி

Saturday, December 5, 2009

Your Name : Your e-mail : Message subject : இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்

சனிக்கிழமை, 5, டிசம்பர் 2009 (11:54 IST)
சென்னை:

''இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் ராஜபக்செவையும், பொன்சேகாவையும் ஆதரிக்க முடியாது. அவர்களை ஆதரிக்கக்கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்மக்களின் விரும்பமும் எனவெ தமிழ் வேட்பாளரை நிறுத்தும் முயற்சி தோல்வியடைந்தால் நானே சுயேச்சையாக போட்டியிடுவேன்"என்று இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியது...''இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்களை கொன்று குவித்த இன வெறியர்களான அதிபர் ராஜபக்செ, முப்படைக்கூட்டுத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஆகியோர் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து அதிபர் தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் இனப்படுகொலை நடத்திய இவர்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு கிடையாது. இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் ராஜபக்செவையும், பொன்சேகாவையும் ஆதரிக்க முடியாது. அவர்களை ஆதரிக்கக்கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்மக்களின் விரும்பமும்,

தமிழர்ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அண்மையில் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழர் வெற்றிபெற முடியாது என்ற நிலை இருந்தாலும், இலங்கைத்தமிழர்களின் உணர்வுகளை உலகம் அறிவதற்கு இந்த போட்டி அவசியம்.

அதிபர் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளரை நிறுத்தும் முயற்சி தோல்வியடைந்தால், நானே சுயேச்சையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்."என்றார் சிவாஜிலிங்கம்.
நன்றி:தெனாலி