சனிக்கிழமை, 5, டிசம்பர் 2009 (11:54 IST)
சென்னை: ''இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் ராஜபக்செவையும், பொன்சேகாவையும் ஆதரிக்க முடியாது. அவர்களை ஆதரிக்கக்கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்மக்களின் விரும்பமும் எனவெ தமிழ் வேட்பாளரை நிறுத்தும் முயற்சி தோல்வியடைந்தால் நானே சுயேச்சையாக போட்டியிடுவேன்"என்று இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியது...''இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்களை கொன்று குவித்த இன வெறியர்களான அதிபர் ராஜபக்செ, முப்படைக்கூட்டுத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஆகியோர் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து அதிபர் தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இனப்படுகொலை நடத்திய இவர்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு கிடையாது. இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் ராஜபக்செவையும், பொன்சேகாவையும் ஆதரிக்க முடியாது. அவர்களை ஆதரிக்கக்கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்மக்களின் விரும்பமும்,
தமிழர்ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அண்மையில் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழர் வெற்றிபெற முடியாது என்ற நிலை இருந்தாலும், இலங்கைத்தமிழர்களின் உணர்வுகளை உலகம் அறிவதற்கு இந்த போட்டி அவசியம்.
அதிபர் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளரை நிறுத்தும் முயற்சி தோல்வியடைந்தால், நானே சுயேச்சையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்."என்றார் சிவாஜிலிங்கம்.
நன்றி:தெனாலி
No comments:
Post a Comment