Monday, December 14, 2009
சரணடைந்தவர்களை கோத்தபயாதான் கொல்லச் சொன்னார்: சரத் பொன்சேகா!
கொழும்பு:
சரணடைந்த புலிகளைக் குடும்பத்தோடு கொல்லச்சொன்னது கோத்தபயா ராஜபக்செ தான் என்று சரத் பொன்சேகா புகார் கூறினார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் சமாதான் பேச்சுக்வார்த்தை நடத்துவதற்காகவும் பல்லாயிரம் தமிழர்கள் கண்மூடித்தனமாக குண்டுவீசி கொல்லப்படுவதை தடுக்கவும்,
விடுதலைப்புலிகளின் உயர்மட்டத்தலைவர்களான சமாதானக்குழு தலைவர் சீவரத்தினம் பூலித்தேவன், அரசியல் குழு தலைவர் பாலசிங்கம் நடேசன், ராணுவ கமாண்டோ ரமேஷ் ஆகியோர் சரணடைவதவாக இலங்கை ராணுவத்தலைமைக்கும் நார்வே உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கும் தூது அனுப்பினர்.
அதை ஏற்றுக்கொண்டது போல வரவழைத்து சரணடைய வந்தவர்களை மே-17ஆம்தேதி சிங்கள ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவம் இலங்கை ராணுவத்தின் போர்விதி மீறல் என்று குற்றம்சாட்டப்பட்டு சர்ச்சைக்கு உள்ளானது. இந்நிலையில் அப்போதைய இலங்கை கூட்டுப்படை தளபதி சரத்பொன்சேகா தனது ராணுவப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிபர் ராஜபக்செவை எதிர்த்து இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து இருசாராரும் சரமாறியாக ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டுள்ளனர்.
கொழும்புவில் சண்டே லீடர் ஆங்கில நாளிதளுக்கு சரத்பொன்சேகா அளித்த போட்டியில்...' இலங்கையில் உச்சகட்ட போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது புலிகளின் முக்கிய தலைவர் 3 பேர் குடும்பத்துடன் சரணடைய உதவுமாறு நார்வே உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள்விடுத்தனர். தெலைபோசியிலும், ஈ.மெயிலிலும் தொடர்ந்து வேண்டுகோள்கள் வந்ததையடுத்து அவர்கள் சரணடைய இலங்கை அரசு ஒப்புக்கொண்டது.
வெள்ளைத்துணியுடன் 58வது பரிவு படையணியிடம் சரணடையுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். எனினும், மூன்று தலைவர்களும், அவர்களது குடும்பத்தினரும் சரணடையும் போது அவர்களை கொல்ல உத்தரவிட்டவர் அதிபர் ராஜபக்செவின் சகோதரரும், பாதுகாப்பு ஆலோசகருமான கோத்தபயா ராஜபக்செ தான்."என்று சரத்பொன்சேகா தெரிவித்தார்.
சர்வதேச அளவில் இலங்கையின் மனித உரிமை மீறல்குறித்து கடும் கண்டனம் எழுந்துவரும் நிலையில் முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் சரணடையவந்தவர்களை கொலை செய்த போர்விதி மீறல் குறித்த பகிரங்க குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நன்றி: தெனாலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment