Monday, December 14, 2009

பார்க் ஹோட்டல் பஞ்சாயத்து... பதுங்கும் பெரும்புள்ளி!

என்னாச்சு திருச்செந்தூரிலும் வந்தவாசியிலும் என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்க நேரில் விசிட் போயிட்டீங்களா?’ என்று மொபைலில் பிடித்தோம் ரகசிய தெனாலியை!

அதைவிட பரபரப்பான விஷயம் தலைநகரத்துலேயே நடந்துகிட்டிருக்கு. அதுதான் இப்போ டாபிகல் செய்தி... இடைத் தேர்தல் எல்லாம் பின்னால் போயிடுச்சு... வந்துகிட்டேயிருக்கேன்...’ என்று பதில் சொன்ன தெனாலி, சொன்னபடி பத்தே நிமிடங்களில் ஆஜரானார்.

அடிக்கடி நடக்கும் பார்க் ஹோட்டல் பஞ்சாயத்துதான்... ஆனால், இந்தமுறை ரியாக்‌ஷன் வேறுமாதிரி இருப்பதுதான் விசேஷம்...’ என்றார் உள்ளே நுழைந்த தெனாலி.

அவர் யாரைப் பற்றிச் சொல்கிறார் என்பது புரிந்ததால் அமைதியாக இருந்தோம்.

கடந்த வாரம் சனிக்கிழமை மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் பிறந்த நாளை சென்னையில் உள்ள ரெயின் ட்ரீ என்ற ஹோட்டலில் நடத்தியது அவருடைய குடும்பம். அந்தக் கொண்டாட்டத்தில் அழகிரி, ஸ்டாலின் ஆகியோரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். வழக்கமாக சனிக்கிழமைகளை பார்க் ஹோட்டலில் கழிக்கும் அந்தக் குடும்பங்களின் இளைஞர் பட்டாளம்கூட அன்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில்தான் இருந்திருக்கிறார்கள். அந்த பார்ட்டியின் நடுவே அங்கிருந்து புறப்பட்ட அழகிரியின் மகள் தன் நண்பர்களைப் பார்க்க பார்க் ஹோட்டலுக்கு விசிட் அடித்திருக்கிறார். அவருக்குத் துணையாக அழகிரியின் மகன் துரை தயாநிதியின் நண்பர்கள் போயிருக்கிறார்கள். அங்கேயிருந்த அண்ணாநகர் சதீஷின் உறவினர் துரைசாமி பரத், மத்திய அமைச்சர் அழகிரியின் மகளைக் கிண்டல் அடித்தாராம்...” என்ற தெனாலியை இடைமறித்தோம்.

இது யார் அண்ணாநகர் சதீஷ்... யார் இந்த துரைசாமி பரத்?’

இவர் முன்பு ஒரு காலத்தில் துரைதயாநிதியின் நண்பர். இப்போது இருவருக்குள் பிணக்கு இருக்கிறது. இந்த சதீஷ் சமீபத்தில் போலீஸ் அதிகாரி ஜெயகவுரி என்பவரை மணந்திருக்கிறார். இருவருக்கும் ஏகமாக வயது வித்தியாசம்... சீனியரை மணந்த சதீஷுக்கு அப்போது ஆதரவு காட்டியதே துரை தயாநிதிதான் என்றெல்லாம் அப்போது பேச்சு எழுந்தது. அந்த நண்பர்களுக்குள்தான் இப்போது பிணக்கு...’

சரி, மேலே தொடருங்கள்...’

உடனே பரத் மீது பாய்ந்த துரை தயாநிதியின் நண்பர்கள், ‘யாரைப் பார்த்து கேலி செய்கிறீர்கள்?’ என்று சத்தம் போட்டார்களாம். இதையடுத்து அங்கே கைகலப்பு ஏற்பட, பாட்டில்கள் பறந்திருக்கின்றன. அழகிரியின் மகளை அனுப்பிவிட்டு இந்தச் சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள் துரை தயாநிதியின் நண்பர்கள். விஷயம் விபரீதமாக, பரத், ஹைதராபாத்தில் இருந்த தன் உறவினர் சதீஷுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். அவர் உடனே, ‘காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிடுஎன்றாராம். ஆனால், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், சதீஷ் தரப்பு புகாரை வாங்க மறுத்திவிட்டதாம் போலீஸ். அதன்பிறகு சதீஷ் கமிஷனருக்குப் பேசி புகாரை வாங்க வைத்திருக்கிறார்.

துரை தயாநிதியின் நண்பர்களும் துரை தயாநிதிக்குப் பேசியிருக்கிறார்கள். அவரும் புகார் கொடுக்கச் சொல்லி அறிவுறுத்தினாராம். கூடவே, இந்த சிக்கலில் தன்னுடைய பெயர் நேரடியாக வருவதை விரும்பவில்லை என்றும் சொன்னாராம். இந்த விஷயத்தால் அவருடைய நண்பர்கள் அப்செட்டில் இருக்கிறார்களாம்.’

வழக்கமாக துரை தயாநிதி தன் நண்பர்களுக்காகக் குரல் கொடுப்பாரே..?’ என்று சந்தேகம் கிளப்பினோம்.

அது பழைய கதை... இப்போது ஏதாவது விவகாரத்தில் பெயர் அடிபட்டால் அப்பா திட்டுவாரோ என்று நினைத்து பதுங்குகிறாராம். கூடவே, இளைஞர் அணியில் முக்கியமான பொறுப்பைக் கேட்கும் திட்டம் இருக்கிறதாம். இந்தச் சூழ்நிலையில் சிக்கல் வேண்டாமே என்றும் யோசிக்கிறாராம்.” என்றார்.

அட... இது நல்லாயிருக்கே..!” என்றோம்.

துரை தயாநிதியின் திடீர் மாற்றத்தால் நண்பர்கள் படு பயங்கர அப்செட்டில் இருக்கிறார்களாம். ஏற்கனவே இவருடைய பழைய நண்பரான ஒரு ஓட்டல் அதிபர் மகன் விஷயத்தில் துரை தயாநிதி ரொம்பவே அடக்கி வாசித்திருக்கிறார். அந்த ஓட்டல் அதிபர் மகன் கோர்ட்வரையில் போய் தங்களை மூக்குடைத்துவிட்டதாக நினைக்கும் இந்த குரூப், இப்போதும் விட்டுக் கொடுத்துவிட்டால் துரை தயாநிதிக்கு நொம்பவே வீக்காகப் போய்விடும் என்று நினைக்கிறார்களாம். ஆனால், சிக்கலுக்குள் தான் வரவிரும்பவில்லை என்பதை உறுதியாகவே சொல்லிவிட்டாராம் துரை!”

அப்போ அந்த புகார்கள் என்னதான் ஆனது?” என்றோம்.

கமிஷனர் தலையிட்ட பிறகு பரத் கொடுத்த புகார் வாங்கப்பட்டது. பதிலுக்கு துரை தயாநிதி நண்பர்கள் கொடுத்த புகாரும் வாங்கப்பட்டிருக்கிறது. யாரும் எதிர்பாராத விதமாக அழகிரி இதில் தலையிட்டு, என் மகளைக் கேலி செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்... என் மகளுக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்களின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்ப, திகைத்து நிற்கிறது போலீஸ் வட்டாரம்! என்று சொன்ன ரகசிய தெனாலி, ‘அடிக்கடி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் ஹோட்டல் மீதும் எச்சரிக்கைப் பார்வை விழுந்திருக்கிறதாம். பார்க்கலாம், அடுத்த பரபர என்னவென்று! என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் ரகசிய தெனாலி.

நன்றி:தெனாலி

No comments:

Post a Comment