“ரஷ்யாவில் அமைந்துள்ள தேசிய ஆவண காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள, தலையில் துளையுள்ள மண்டை ஓடு, சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லருடையது. அதுவே, ஹிட்லரின் தற்கொலைக்கான ஒரே ஆவண சாட்சி’ என, அந்நாட்டு அரசு வலியுறுத்தி உள்ளது.
ரஷ்யாவின் ஆவண காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள, ஹிட்லரின் மண்டை ஓட்டை, டி.என்.ஏ., பரிசோதனை செய்த, அமெரிக்க விஞ்ஞானிகள், “அது 40 வயதுடைய ஒரு பெண்ணின் மண்டை ஓடு’ என, முன்னர் தெரிவித்தனர்.ஆனால், “ரஷ்யாவின் ஆவணக் காப்பகங்களில் பாதுகாத்து வரும் மண்டை ஓடு மற்றும் தாடை எலும்பு ஆகியவை தான், நாசி தலைவராக இருந்த அடால்ப் ஹிட்லரின் தற்கொலைக்கான ஒரே ஆதாரம்’ என, மாஸ்கோவில் அமைந்துள்ள பெடரல் பாதுகாப்பு சேவை ஆவண காப்பகத்தின், தலைமை ஆவண காப்பாளரான லெப்டினன்ட் ஜெனரல் வாசிலி கிரிஸ்டோபரோவ் உறுதியளித்துள்ளார்.
ஹிட்லரின் மண்டை ஓடு என, குறிப்பிடப்படுவதை, கடந்த 2000ம் ஆண்டு முதல், ரஷ்யாவின் ஆவணக் காப்பகத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது தாடை எலும்புகள், அவரின் பல் தொடர்பான ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டாலும் அது, ஹிட்லருடையது என்பதற்கு எவ்வித, டி.என்.ஏ., சான்றும் இல்லாததால், அவற்றை பெடரல் பாதுகாப்பு சேவை மையத்தின் ஆவணக் காப்பகத்தில் வைத்திருந்தாலும், பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை.
இவற்றை கடந்த 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி, ஹிட்லர் சயனைடு சாப்பிட்டதோடு, தன் தலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட பின், பெர்லினில் அவரின் சிதைவுற்ற உடல் கைப்பற்றப்பட்டது. இந்த இரண்டு உடல் பாகங்களும் ஹிட்லருடையது தான்’ என, ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.ஆனால், ஹிட்லர் கடந்த 1945ம் ஆண்டு சாகவில்லை, அவர் தென் அமெரிக்காவிற்கு தப்பி சென்றுவிட்டார். ரஷ்யாவில் வைக்கப்பட்டுள்ளது, ஹிட்லரின் உண்மையான மண்டை ஓடு அல்ல என்ற சர்ச்சைகளும் நீடித்து வருகின்றன.
நன்றி:குறள்
No comments:
Post a Comment