Wednesday, December 2, 2009

அரை மண்டையனின் அட்டகாசங்கள்...!

விரட்டி விரட்டி செருப்பால் அடிப்போம்: அர்ச்சகர் தேவநாதன் எங்கு சென்றாலும் விடமாட்டோம்; பெண்கள் ஆவேசம்




காஞ்சீபுரம், டிச. 1-

அர்ச்சகர் தேவநாதன் நேற்று மாலையில் விசா ரணை முடிந்து காஞ்சீபுரம் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மன்றம் அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கோர்ட்டு வளாகத்தில் அர்ச்சகர் தேவநாதன் வந்த போலீஸ் ஜீப்பை வழிமறித்து செருப்பு மற்றும் துடைப்பம் ஆகியவற்றால் தாக்கினர். சாணியை வாரி ஜீப் மீது வீசினர்.

தகவலறிந்த டி.எஸ்.பி. சமுத்திரகனி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆவேசமாக இருந்த பெண்களை கைது செய்து ஜீப்பில் ஏற்றிசென்றனர். பின்னர் அர்ச்சகர் தேவநாதனை போலீசார் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று நீதிபதி சுதா முன்பு ஆஜர்படுத்தினர்.

நீதிபதி சுதா அர்ச்சகர் தேவநாதனை மீண்டும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தேவநாதன் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அர்ச்சகர் தேவநாதனை செருப்பாலும், துடைப்பத்தாலும் தாக்கிய மக்கள் மன்ற அமைப்பாளர்களில் ஒருவரான மகேஷ் கூறியதாவது:-

கோவிலின் புனித இடமான கருவறையில் பெண்களுடன் காமவெறியாட்டம் நடத்திய காமகொடூரன் அர்ச்சகர் தேவநாதனை ஜாமீனில் விடுவிக்ககூடாது. மேலும் இந்த வழக்கில் பல உண்மைகள் வெளி வரவேண்டும். போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி பல உண்மைகளை வெளியில கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மத உணர்வுகளை சீர்கெடுத்த காமகொடூரன் தேவநாதனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

தேவநாதனை எந்த காலத்திலும் எந்த கோவிலிலும் அனுமதிக்கவே கூடாது. அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அர்ச்சகர் தேவநாதனுக்கு உரிய தண்டனை வழங்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் . காமகொடூரன் தேவநாதனை எங்கு பார்த்தாலும் அவரை விரட்டி, விரட்டி செருப்பால் அடிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அர்ச்சகர் தேவநாதனுக்கு எதிராக கோர்ட்டு வளாகத்தில் போராட்டம் நடத்திய 47 பெண்கள் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். 447 ஐ.பி.சி. (அத்து மீறி நுழைதல்), 143 சட்ட விரோதமாக கூடுதல், 341 வழிமறித்து தாக்குதல், 294 ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

http://www.maalaimalar.com/2009/12/01164115/vlr05012009.html
நன்றி:ஓடும்நதி

No comments:

Post a Comment