Wednesday, December 9, 2009

வேட்டைக்காரனைச் சுற்றி வில்லங்கம்


2012 படத்தின் வசூல் கணக்கைக் கேட்டாலே கண்ணைக் கட்டுகிறதாம் பல பேருக்கு. வெறும் 55 லட்சத்திற்கு வாங்கிய படம், வசூலில் பத்து கோடியை கிராஸ் பண்ணிவிட்டது. இந்தத் தேன் செய்தி, சோனி கம்பெனி வரை எட்டியிருப்பதுதான் ஆச்சர்யம்.

வேட்டைக்காரன் வெளிவரப்போகும் அதே தேதியில் வரப்போகிறது 'அவதார்' என்ற ஹாலிவுட் படம். பல மில்லியன் டாலரில் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம். இதன் தமிழ் டப்பிங் உரிமையை வாங்க ஏகப்பட்ட போட்டி. ஆனால், நாங்களே ரிலீஸ் பண்ணிக் கொள்கிறோம் என்று கூறிவிட்டார்களாம் சோனியில். ஒரு ஹாலிவுட் படம் தமிழில் 200 பிரிண்டுகள் போடப்படுகிறது என்றால் பாருங்களேன்!

அவதார் ஒருபுறம் வேட்டைக்காரனுக்கு வில்லங்கம் கொடுப்பதால், தியேட்டர் போடுவதிலும் பெரும் சிக்கலைச் சந்திக்கிறார்களாம் விநியோகஸ்தர்கள். இடையில் சைலண்ட்டாக போட்டி போட வந்திருக்கிறது இன்னொரு படமான கந்தக்கோட்டை. இப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம். ஏற்கனவே இவரது மாசிலாமணி படத்தால் சம்பாதித்த தியேட்டர் அதிபர்கள் இவருக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதன் காரணமாக, இங்கேயும் தடுமாறுகிறாராம் வேட்டைக்காரன்.

இப்படி ஆளுக்கு ஆள் வேட்டையாடுகிறார்களே.

நன்றி:தெனாலி

No comments:

Post a Comment