’வரும் 18-ம் தேதி வேட்டைக்காரன் ரிலீஸ் என்று அறிவித்திருக்கிறது படத்தை வெளியிடும் சன் பிக்சர்ஸ். அந்தச் செய்தியை பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு வேட்டைக்காரனைப் பற்றி விதவிதமாக பல செய்திகள் அலையடித்துக் கொண்டிருக்கின்றன. சில பாசிட்டிவ் செய்திகள் இருந்தாலும் பல வயிற்றைக் கலக்கும் வில்லங்கச் செய்திகள்தான்! அப்படி சில செய்திகளை அனுப்புகிறேன்... இதை வேட்டைக்காரன் ஸ்பெஷல் என்று வைத்துக் கொள்ளுங்கள்’ என்று தொலைபேசிய ரகசிய தெனாலி அனுப்பிய வேட்டைக்காரன் ஸ்பெஷல் செய்திகள் இதோ!
வெளிநாட்டுச் சிக்கலில் வேட்டைக்காரன்!
வேட்டைக்காரன் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை உள்ளூரில் அல்ல...வசூலுக்கு பெரிதும் நம்பியிருக்கும் வெளிநாடுகளிலிருந்து.
காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நாடகமாடிய விஜய்யின் வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம் என ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும் இலங்கை ராணுவத்துக்கு, வன்னிப் போர் காலத்தில் பாடல்கள் உருவாக்கிய ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்து பணியாற்றும் விஜய் ஆண்டனி, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் உணர்வுக்கு எதிரான ஒரு சிங்களப் பாடலின் மெட்டையும் அப்படியே வேட்டைக்காரனில் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்தப் படத்தை அனைத்து தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கபட்டுள்ளது. இப்படம் தயாரிக்கும் போதும், பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போதும் இத் தவறுகள் தமிழ் நாட்டில் பலரால் சுட்டிகாட்டப்பட்டுள்ளன. இதனை நடிகர் விஜய் புறக்கணித்துள்ளார்.
படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு விஜய் தரப்பை அதிர வைத்துள்ளதாக அறியப்படுகிறது. போர் உக்கிரமடைந்த காலத்தில் சிங்கள படைகளை வலுப்பெற வைக்க பாடல்களை இயற்றி மெட்டுப்போட்ட கயவர்களுடன் இவர் கூட்டுச் சேர்வதா? அதே மெட்டை விஜய் படத்திலும் இவர்போட நாம் பணத்தை வாரி இறைத்து நடிகர் விஜயை வாழ்த்துவதா? இதுவும் ஒரு பிழைப்பா? தமிழர்களே சிந்தியுங்கள், எமது பெருந்தொகையான பணம் இவ்வாறு வசூலிக்கப்பட்டு, ஒரு சில நபர்களிடன் கோடிக்கணக்கில் முடங்கி இருக்கிறது.
அவர்கள் தமிழர்களுக்கு உதவிசெய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமல், தமிழர்களின் மனதைப் புண்படுத்தாமல் வாழ கற்றுக்கொள்ளவேண்டும், இதுவே நாம் இவர்களுக்குப் புகட்டும் நல்ல பாடமாக அமையும். இந்த எதிர்ப்பு கோஷத்தை தமிழர்களுக்கு, தமிழர்கள் தெரியப்படுத்துங்கள். என்கிறது அந்தச் செய்தி!
கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது வேட்டைக்காரன் வட்டாரம்!
சலுகையும் சந்தோஷமும்
வேட்டைக்காரன் பட விளம்பரங்களில் இளைய தளபதி என்ற பட்டத்தைச் சேர்க்க எவ்வளவோ முயன்றும், "முடியாது" என்ற பதிலே வந்திருக்கிறது சன் பிக்சர்ஸ் வட்டாரத்தில் இருந்து. ஆனால் அதிலும் கொஞ்சம் சலுகை. தினசரி விளம்பரங்களில் வேண்டுமானால் 'இளைய தளபதி விஜய் நடிக்கும்' என்று சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறதாம்.
சலுகையோடு சலுகையாக இன்னொரு விஷயமும் நடந்திருப்பதாக கூறுகிறார்கள் கோடம்பாக்கத்தில். படத்தைப் பார்க்க விரும்பிய விஜய்க்கு முதலில் ஒப்புதல் அளிக்காத சன், பின்பு அதற்கும் அனுமதித்துவிட்டார்களாம். தனக்கு வேண்டப்பட்ட சிலருடன் படம் பார்த்திருக்கிறார் விஜய். இந்த வேண்டப்பட்ட லிஸ்ட்டில் டைரக்டர் பேரரசும் இருந்தாராம். வெளியே வந்த இந்த டீம் சொல்லும் தகவல்கள் உச்சி குளிர வைத்திருக்கிறது விஜய் ரசிகர்களை. கடந்த சில படங்களில் தோல்வி முகத்தில் இருந்த விஜய், இந்த படத்தில் சிங்கம் போல சிலிர்த்தெழுவார் பாருங்கள். அந்தளவுக்குப் படம் விறுவிறுப்பாக இருக்கிறது என்றார்களாம்.
ஒரு பேச்சுக்குச் சொல்கிற வார்த்தை அல்ல அது என்பதுதான் இப்போதைய விஜய் பட விசேஷம்!
வில்லனான அவதார்!
'விஜய்க்கு ராசியான இடம் என்றால் வடபழனியில் அமைந்திருக்கும் கமலா தியேட்டரைச் சொல்லலாம். ஒரு ரசிகனாகப் படம் பார்க்க சென்ற விஜய், வெள்ளி விழா நாயகனாக மின்னிய அதிசயமும் இதே தியேட்டரில்தான் நடந்தது. அவர் ஒரு விநியோகஸ்தராக வெற்றிக் கொடி நாட்டியதும் இங்கேதான். விஜய் படம் வெளி வருகிற நேரத்தில் வேறெந்தப் படங்கள் வந்தாலும், அதைப் புறக்கணித்துவிட்டு இதற்குதான் முன்னுரிமை கொடுப்பார் இந்தத் தியேட்டர் அதிபர் சிதம்பரமும். அது மட்டுமல்ல, தனது திரையரங்கைப் புதுப்பித்த சிதம்பரம், அதை மீண்டும் திறந்ததும் விஜய் கையால்தான்.
ஆனால் எல்லாமே பழங்கதை ஆகிவிட்டது இப்போது. இந்த முறை வெளிவரப்போகிற வேட்டைக்காரன் கமலா திரையரங்கில் ரிலீஸ் ஆகப் போவதில்லையாம். மாறாக அதே தேதியில் அவதார் படத்தை வெளியிடப் போகிறாராம் சிதம்பரம். ஏன்? படத்தை வெளியிடும் சன் பிக்சர்ஸ் சொல்லும் அசகாய விலைதான் காரணம்.
வழக்கமாக கமலாவில் இல்லையென்றாலும் சில கிலோமீட்டர் தள்ளி அமைந்திருக்கும் காசி திரையரங்கில் வெளியிடும் முயற்சியும் தோல்வி என்கிறார்கள். அங்கேயும் அவதார்தான் வரப்போகிறாராம்.
நன்றி:தெனாலி
No comments:
Post a Comment