தமிழ் சினிமாவில்தான்வில்லன் ரேஞ்சுக்கு பழிவாங்கும் எண்ணமும் கொலைவெறியும் கொண்டவனை ஹீரோவாகசித்தரிக்கிறார்கள். இதைப் பார்க்கும் நம் வீட்டு ஹீரோக்களும் இப்படி அதிரடியாககளமிறங்கினால்தான் நமக்கும் மரியாதை இருக்கும் என்ற தவறான எண்ணத்தை வளர்த்துக்கொள்கிறார்கள். காரணம் அந்த அளவுக்கு சினிமா நம் மக்களின் வாழ்க்கையுடன்ஒன்றிப்போய் இருக்கிறது. இப்படி சமூகத்தை சீர்குலைக்கும் வகையில் படம் எடுப்பது நியாயமா என்று சம்பந்தப்பட்ட இயக்குனர்களிடம்கேள்வி எழுப்பினால் கிடைக்கும் பதில்களும் அவர்களது படத்தைப் போலவே சகித்துக்கொள்ள முடியாத சப்பைகட்டுக்களாகத்தான் இருக்கின்றன.
‘நாட்டில் நடக்காததை, நிஜ வாழ்க்கையில் பார்க்காத விஷயங்களையா படமாக எடுத்துவிட்டோம்.நிஜத்தில் கொஞ்சம் எங்கள் கலைத்திறமையை(?!) கோர்த்துத்தான் படமாகவடித்திருக்கிறோம்’ என்பது அவர்களது வாதம். ‘யோகி’ படத்தின் பிரஸ்மீட்டில், ‘உங்கள் படங்களில் வன்முறைஅதிகமாக இருக்கிறதே?’ என ஒரு நிருபர் கேட்டபோது, ‘தொலைக்காட்சிசெய்திகளில் காட்டாததையா எனது படத்தில் காட்டிவிட்டேன்?’ என எதிர்கேள்வி எழுப்பியிருக்கிறார் அமீர். இதை செய்தித்தாளில்படிக்கும்போது அமீரின் பதில் பொறுப்பற்ற தன்மையோடு இருப்பதாகத்தான் எனக்குப்படுகிறது.
தொலைக்காட்சிகளில்காட்டப்படும்போது செய்தியை செய்தியாக தெரிந்துகொள்வதுடன்மட்டும் அது நின்றுவிடும். ஆனால் அதை அப்படியே ரத்தமும் சதையுமாக திரைப்படத்தில்பார்க்கும்போது அதனால் ஏற்படும் பாதிப்பும் தாக்கமும் அதிகம்.
ஒருவர் கொலைசெய்யப்படுவது மாதிரியான காட்சியை எடுப்பதில் தவறில்லை. ஆனால் கொலை செய்யப்படும்விதம் குறைத்து அக்குவேறு ஆணிவேராக செயல்முறை விளக்கம் தருவது எந்த வகையில்சேர்த்தி. விட்டால் படம் பார்ப்பவர்களுக்கு இலவசமாக திருப்பாச்சி அரிவாளைத் தந்து அனுப்புவார்கள்போலிருக்கிறது. ‘ரேனிகுண்டா’ படத்தில் கொலைக்காக வகுக்கப்படும் வியூகங்களும் கொலையை நேரில் செய்துகாட்டுவதுபோன்ற காட்சியும் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. காடும் வரையில்வன்முறையைக் காட்டிவிட்டு கடைசியில் போனால் போகட்டும்என்கிற ரீதியில், ‘கத்தியை எடுத்தவன் கத்தியால்தான்சாவான், வன்முறை கூடாது, அகிம்சைதான் அமைதி..’ என்ற க்ளைமாக்ஸ் போதனையெல்லாம் இளரத்தம் ஓடும் இருபது வயதுக்கு குறைவானஇளைஞர்களுக்கு எட்டுமா என்ன?
சென்சாருக்குபோய்வந்த பிறகும் இவ்வளவு வன்முறை என்றால், அதற்கு முன் எப்படி இருந்திருக்கும் எனநினைத்துப்பார்த்தாலே குலைநடுங்குகிறது. இந்தவகை படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துவரும் வரவேற்பும் கவலை ஏற்படுத்துகிறது. முன்பெல்லாம் மதுரை, திருநெல்வேலியைகதைக்களமாக கொண்டு வெளிவரும் படமென்றால் மண்வாசனை தூக்கலாக இருக்கும். இப்போநிலைமை தலைகீழ். ஏதோ அந்த ஏரியாக்களில் இருக்கும் ஸ்கூல் பிள்ளைகள் கூட தங்கள்பையில் கத்தி வைத்திருப்பது போலத்தான் காட்டுகிறார்கள்.
சமூகத்துக்குபயனளிக்கும் எந்த கருத்தையும் சொல்லாமல் கூட ஒரு படம் வெளிவரலாம். ஆனால்வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை கலக்கும் விதத்தில் இருப்பது ஆபத்தானது. நம் தமிழ் சினிமாஇயக்குனர்கள் இனியாவது தங்கள் பேனாக்களில் ரத்தத்தை ஊற்றி திரைக்கதை எழுதுவதை நிறுத்துவார்களா.
நன்றி:தெனாலி
No comments:
Post a Comment