கொழும்பு:
சரணடைந்தவர்களைகொல்லச்சொன்னது கோத்தபயா ராஜபக்செ தான் என்று சரத் பொன்சேகா தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க அதிபர் ராஜபக்செ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிபர் தேர்தலில் ராஜபக்செவுக்கு எதிராக களமிறங்கியுள்ள இலங்கை முன்னாள் ராணுவத்தளபதி சரத்பொன்சேகா அதிபர் ராஜப்கசெ, பாதுகாப்பு செயலாளர் ராஜபக்செ ஆகியோர் குறித்து தொடர்குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்.
கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்பொன்சேகா ...' புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின் போது சரணடைந்த புலிகளின் முக்கிய தலைவர்கள் ப.நடேசன், பூலித்தேவன், உள்ளிட்டோரை குடும்பத்துடன் ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். அவர்களை கொல்லச் சொன்னது பாதுகாப்பு ஆலோசகர் கோத்தபயா ராஜபக்செதான் என்று தெரிவித்தார்.
சரத் பொன்சேகாவின் இந்த குற்றச்சாட்டு அதிபர் ராஜபக்செ, கோத்தபயா ராஜபக்செ ஆகியோரை அதிர்ச்சி அடையச்செய்தது. இதைத்தொடர்ந்து சரத் பொன்சேகாமீது அவதூறாக பேசியது, ராணுவ ரகசிய சட்டத்தை மீறி பேசியது உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Monday, December 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment