ரேனிகுண்டா வசூல் ஸ்டடியாகப் போகாமல் செவ்வாய் கிழமை நிலவரப்படி இறக்கத்தை சந்தித்திருக்கிறது. ஆனாலும் படத்தில் நடித்த அந்த குள்ளப் பையனான தீப்பெட்டி கணேசனைக் கொண்டாடுகிறார்கள் பத்திரிகைகளும் ரசிகர்களும். இவரைப் பார்க்கவே ஒரு கூட்டம் தியேட்டருக்கு வருவதால், பையனுக்கு இப்பவே பயங்கர ஆஃபர் என்கிறார்கள். முன்னணி இயக்குனர்களும் போன் செய்து பாராட்டுகிறார்களாம்.
மதுரை கேபிள் சேனல்களில் நடிக்க ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்து இன்டர்வியூவுக்கு வந்திருந்த ஆயிரம் பேரில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டவர்தான் இந்த கணேசன். இந்தியில் நஸீரூத்தின் ஷா நடிக்கும் ஒரு டாகுமென்ட்டரி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம் இப்போது. சுமார் நாற்பது நிமிடங்கள் ஓடும் இப்படத்தில் ஷாவுக்கு இணையான கேரக்டரில் நடிக்கப் போகிறாராம் கணேசன்.
வாழ்வுன்னா இப்படி வரணும் என்று வாழ்த்துகிறார்கள் சக நடிகர்களே...
நன்றி:தெனாலி
No comments:
Post a Comment