Wednesday, December 9, 2009
தமிழர்கள் சமவுரிமைக்கு சட்டத் திருத்தம்: இலங்கை உறுதி!
டெல்லி:
இலங்கையில் தமிழர்கள் சமவுரிமையுடன் வாழ சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்று இலங்கை சார்பில் இந்தியாவந்துள்ள மூவர் அடங்கிய தூதுக்குழு இந்தியாவிடம் உறுதியளித்துள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்செ சார்பில் அவரின் சகோதரர்களான இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே, அரசியல் ஆலோசகர் பசில்; ராஜபக்செ, அதிபர் ராஜபக்செவின் தனிச்செயலாளர் உள்ளிட்டோர் 3பேர் அடங்கிய தூதுக்குழு இந்தியா வந்துள்ளது.
நேற்றிரவு இந்தியாவந்த இக்குழுவினர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் ஆகியோரை சந்தித்து பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அதிபரின் அரசியல் அலோசகர் பசில் ராஜபக்செ தமிழர்களுக்கு அரசியல் சட்ட உரிமைகள் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இலங்கை முகாம்களில் இன்னும் 1லட்சத்து 10ஆயிரம் தமிழர்கள்தான் தங்கவைக்கப்பட்டுள்ளனர் மற்றவர்கள் அவர்கள் சொந்த குடியிருப்புகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். மீதமுள்ளவர்களும் அவர்கள் சொந்த குடியிருப்புகளுக்கு வரும் ஜனவரி 30ஆம் தேதிக்குள் அனுப்பப்படுவார்கள்.
இலங்கையில் தமிழர்கள் சமவுரிமையோடு வாழ அரசியல் சட்டத்திருந்தம் கொண்டுவரப்படும் அதிபர் தேர்தல் முடிந்தபின்பு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும். இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்கவே இலங்கை விரும்புகிறது. இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுப்பணிகளுக்கு இந்தியா பெருமளவில் உதவி செய்துவருகிறது "என்றார்.
நன்றி:தெனாலி
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இவர் சொல்றாராம்; அவர் நம்புறாராம் ; ஆனபடியா நாங்களும் நம்பவேணுமாம்.
அரைநூற்றாண்டுகாலமாக் கேட்டுகேட்டுப்புளிச்சுப்போச்சு !
30 வருஷமா அகிம்சை வழியிலை கேட்ட , தந்தை செல்வாவுக்கும் இதைத்தான் சொன்னாங்கள். செய்ததெல்லாம் தமிழின அழிப்பும் தமிழ்நில ஆக்கிரமிப்பும்தான்.
கடைசியா அந்தக்கிழவன்,நொந்துநூலாகி,
“ இனித்தமிழினத்தை அந்தக்கடவுள்தான் காப்பாத்தவேணும்” எண்டு சொன்னார்.
இதாலைதான் அந்தக்கடவுளே வந்தமாதிரி, பிரபாகரன்
ஆயுதத்தோடையே வந்தார்; அதுக்கும் இப்பிடித்தான் திரும்பத்திரும்பச்சொன்னாங்கள்.
ஆனா ஒண்டும் நடக்கேல்லை.
இப்ப புதிசா, இந்த ரௌடிக்கு அந்த ரௌடி சொல்றாராம்.
எங்கையடா விடுகிறியள் விடுகை?
Post a Comment