Wednesday, December 2, 2009

செல்போனில் எடுக்கப்பட்ட ஆபாச படங்களை காட்டி அர்ச்சகர் கற்பழித்தார்; ஏமாந்த பெண்கள் குமுறல்






காஞ்சீபுரம், டிச. 1-


காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் வைத்து அர்ச்சகர் தேவநாதன் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து சிவகாஞ்சி போலீசார் தேவநாதனை பிடிக்க வலைவிரித்தனர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் அவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

2 முறை காவலில் எடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

செக்ஸ் லீலையில் ஈடுபட்ட தேவநாதனை மச்சேஸ்வரர் கோவிலுக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு கருவறையில் பெண்களுடன் எவ்வாறு செக்சில் ஈடுபட்டேன் என்பதை தேவநாதன் நடித்து காட்டினார். அதன் பின்னர் கருவறையில் இருந்து ஒரு முக்கிய ஆதாரம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.

பின்னர் தேவநாதன் தன் செல்போனில் பதிவு செய்த செக்ஸ் காட்சிகள் எவ்வாறு வெளியானது என விளக்கினார். காஞ்சீபுரம் கவரை தெருவில் உள்ள ஒரு செல்போன் கடையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த கடையை தேவநாதன் அடையாளம் காட்டினார்.

தேவநாதன் பல பெண்களுடன் செக்சில் ஈடுபட்ட காட்சிகள் செல் போனில் இருந்து ஒரு லேப்-டாப் (கம்ப்யூட்டர்) மூலம் டவுன்லோடு செய்யப்பட்டது தெரிய வந்தது. அந்த கடையில் இருந்து லேப்-டாப், உயர்ரக செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து தேவநாதனுடன் கோவில் கருவறையில் செக்சில் ஈடுபட்ட ஒரு பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண், போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

நான் தினமும் மச்சேஸ்வரர் கோவிலுக்கு செல்வேன். மிகவும் பயபக்தியுடன் சாமி கும்பிடுவேன். அங்கு அர்ச்சகராக இருந்த தேவநாதன் பார்ப்பதற்கு அப்பாவி போல நல்லவராக காட்சி அளித்தார். அவரிடம் என் கஷ்டங்களை சொல்லுவேன். அவரும் ஆறுதலாக பேசுவார்.

ஒருநாள் எனக்கு கோவில் பிரசாதம் என்று சர்க்கரை பொங்கல் கொடுத்தார். பின்னர் ஒரு சாக்லெட் கொடுத்து சாப்பிட சொன்னார்.

நானும் சாமிக்கு வைத்து பூஜை செய்தது என்று நம்பி பிரசாதத்தை சாப்பிட்டேன். சிறிது நேரத்தில் எனக்கு மயக்கமாக இருந்தது. என்னை கோவிலின் கருவறைக்கு அர்ச்சகர் தேவநாதன் அழைத்து சென்றார். என் ஆடைகளை எல்லாம் களைந்தார். நான் தடுக்க முயன்றேன். ஆனால் மயக்கமாக இருந்ததால் என்னால் முடியவில்லை. என்னை அர்ச்சகர் தேவநாதன் கருவறையில் வைத்து கற்பழித்து விட்டார். அதை தனது செல்போனில் படம் பிடித்து அடிக்கடி என்னை மிரட்டி பலமுறை என் கற்பை சூறையாடினார்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து தேவநாதன் மீது போலீசார் புதிதாக கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

போலீசார் தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை அனைத்தையும் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஒப்படைத்துள்ளனர். போலீஸ் விசாரணையில் காஞ்சீபுரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் விபசாரம் நடப்பதாகவும் அதில் அர்ச்சகருக்கு தொடர்பு உடையதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இது போல மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்கள் பலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

http://www.maalaimalar.com/2009/12/01113356/CNI0120101209.html
நன்றி:ஓடும்நதி

No comments:

Post a Comment