கொழும்பு:
இலங்கையில் வரும் 2010 ஜனவரி மாதம் 26ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முகாமில் உள்ள பல லட்சம் தமிழர்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்று தெரிகிறது. இலங்கையில் இறுதிக்கட்டப் போருக்குப்பின் தமிழர்கள் 3.5லட்சம் பேர் முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் 1.5லட்சம் பேரை அவர்கள் சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்றம் செய்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில்இலங்கையில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அதிபர் தேர்தலை நடத்த அதிபர் ராஜபக்செ முடிவு செய்தார். அதன்படி 2010 ஜனவரி 26ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்மூலம் அறிவிக்கப்பட்டது.
இதில் இலங்கை ராணுவத்திலிருந்து ராஜினாமா செய்த கூட்டுப்படைத்தளபதி சரத்பொன்சேகா எதிர்க்கட்சிகளின் ஆதரவு பெற்ற வேட்பாளராக அதிபர் ராஜபக்செவை எதிர்த்து போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் ஐக்கிய தேசியக்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் அதிபர் தேர்தலில் வாக்களிக்க தேர்தல் அணையம் ஏற்பாடு செய்வேண்டும் என்று கோரிக்கைவைத்தார்.
அதன்படி இலங்கை முகாமில் உள்ள தமிழர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.அதற்காக முகாம் அலுவலகத்தில் விண்ணப்பக்க முகாம் தமிழர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
ஆனால் முகாமில் இருக்கும் 2லட்சம் தமிழர்களில் 5ஆயிரம் முதல் பத்தாயிரம் வரையிலான தமிழாகள் மட்டுமே வாக்களிக்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். மீதம் உள்ள 1.9 லட்சம்தமிழர்கள் அதிபர்தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.
அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்ற மனநிலை முகாம் தமிழர்களிடம் ஏற்பட்டுள்ளதுதான் இதற்கு காரணம் என்று தெரிகிறது.
தமிழர்கள பகுதிகள் புலிகளின்கட்டுப்பாட்டில் இருந்தபோது நடைபெற்ற அதிபர் தேர்தலில் புலிகளின் வேண்டுகோளை ஏற்று பல லட்சம் தமிழர்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர் என்பது இங்கு குறிப்பிட்டத்தக்கது.
நன்றி:தெனாலி
Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment