Saturday, August 29, 2009

80 லட்சம் இந்தியப்பெண்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்!

வாஷிங்டன்:

இந்தியாவில் 80 லட்சம் பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது என்று அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

சர்வதேச நுரையீரல் பாதுகாப்பு அமைப்பு உலகம் முழுவதும் பெண்களுக்கு எற்பட்டுள்ள நுரையிரல் பாதிப்பு மற்றும் அதற்காக காரணங்கள் குறித்து அனைத்து நாடுகளிலும் ஆய்வு மேற்கொண்டது.

இதில் இந்தியாவில் பெண்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதற்கு பெண்கள் புகைப்பிடிப்பதும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

உலகில் அதிக அளவ பெண்கள் புகைப்பிடிக்கும் நாடுகள் வரிசையில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 25 கோடி பெண்கள் புகைப்பிடிக்கம் பழக்கம் உள்ளவர்கள் என்ற திடுக்கிடும் தகவலும் தெரியவந்துள்ளது. புகைபிடிப்பதால் ஏற்படும் கேடுகள் குறித்து உலக நாடுகள் பிரசாரம் செய்யாததே பெண்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரிக்க காரணம் என்று அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

ஆண்டுதோறும் 60 லட்சம் பெண்கள் புகைபிடிப்தினால் ஏற்படும் நுரையீரல் நோய்களின் காரணமாக மரணமடைந்து வருவதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இனிமேலும் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கை ஏடுக்கப்படாமல் போனால் இறப்போர் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் 1 கோடியை தாண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

ஒழுக்கம், பாரம்பரியம், பண்பாடு என மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியா போன்ற நாட்டிலேயே பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவது சமூக அக்கறையுள்ளவர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Thanks:thenaali.com

கரூரில் இலங்கை தேசியக்கொடி எரிப்பு



கரூர்:

இலங்கை தேசியக்கொடியை எரித்து கரூர் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்தினர். இலங்கையில் தமிழ் இளைஞர்கள் 9 பேர் சித்திரவதை செய்து, நிர்வாணப்படுத்தி இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதின் எதிரொலியாக தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கத்தொடங்கியுள்ளது.

சிங்கள இராணுவத்தையும, இலங்கை அரசையும் கண்டிக்கும் வகையில் கரூர் நீதிமன்றம் முன்பு கூடிய வழக்குரைஞர்கள் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில இலங்கையின் தேசியக்கொடி தீயிட்டு எரிக்கப்பட்டது.

இனவெறி பிடித்து தமிழினத்தை அழித்துவரும் சிங்கள அரசு ஒழிக!, ஐ.நா.சபையே இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்து என்று வலியுறுத்தி நூற்றுக்கும் அதிகமான வழக்குரைஞாகள் ஆவேசமாக முழக்கமிட்டனர். இந்த போராட்டத்துக்கு கரூர் வழக்குரைஞர்கள் சங்கத்தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார்.

வழக்குரைஞர்கள் நடேசன், கரூர் இராம.இராசேந்திரன், நன்மாறன், ஏராளமான பெண் வழக்குரைஞர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான வழக்குரைஞர்கள் இதில் கலந்துகொண்டனர். இதனால் கரூரில் தீடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Thanks:thenaali.com

''வடக்கின் வசந்தம்" திட்டதிற்காக இந்திய குழு இலங்கை சென்றது


சென்னை:

இலங்கையில் காடுகளை சீர்திருத்தம் செய்து அங்கு தமிழர்களை குடியமர்த்தும் திட்டமான வடக்கின் வசந்தம் திட்டத்தை நிறைவேற்ற இந்தியக்குழு இலங்கை சென்றுள்ளது. இந்த தகவலை தென் இந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

இந்திய ஆசிய வர்த்தக மற்றும் தொழில்துறையின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறயது..'' இந்தியா-இலங்கை இரு நாடுகளுக்கும் இடையே நல்ல உறவு இருந்து வருகிறது. இலங்கையில கடந்த மே-19ஆம் தேதி முதல் தீவிரவாத பயம் நீங்கியுள்ளது.

இலங்கையின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதிகளில் வேளாண்மை திட்டத்தை செயல்படுத்த வடக்கின் வசந்தம் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக இநதிய நிபுணர்கள் கொண்ட குழு கடந்த 23 ஆம் தேதி இலங்கை சென்றுள்ளது. இலங்கை இப்போது தாராள தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக உள்ளது " என்றார்.

இந்த ''வடக்கின் வசந்தம்" திட்டத்துக்காக தமிழக வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அழைக்கப்பட்டு அவர் இலங்கையின் இன்றைய நிலை வேளாண்மை சீர்திருத்தத்திற்கு உகந்ததாக இல்லை என்று கூறி இலங்கை செல்ல மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks:thenaali.com

இலங்கைக்கு இந்திய கடற்படை ''போர்க்கப்பல்" அன்பளிப்பு!


கொழும்பு:

இலங்கை கப்பல் படைக்கு இந்திய கப்பல்படை போர்க்கப்பல் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பலை இலங்கை கடலோர ரோந்துக்கு பயன்படுத்த இலங்கை அரசு பெற்றுக்கொண்டுள்ளது.

இந்திய கடற்படை சேவைக்காக தயாரிக்கப்பட்ட ''விக்ரகா 2008" என்ற பெயருடைய இந்த கப்பல் வெள்ளிக்கிழமை இலங்கை கடற்படையின் கடலோர ரோந்துக்காக இந்தியா அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இதற்கு இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்செ இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்தியா வழங்கிய அன்பளிப்பு கப்பலை பெற்று திரிகோணமலை துறைமுகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர்..''இந்திய அரசின் இத்தகைய நல்லெண்ண உதவிகள் இருநாடுகளுக்குமான உறவை மேலும் பலப்படுத்தும்.

இந்தக் கப்பலில் கடல் மற்றும் தரையைக் கண்காணிக்ககூடிய அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் திரிகோணமலை பகுதியை கண்காணிக்கும் பணி எளிதாக இருக்கும்."என்றார்.

இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்தும், கச்சத்தீவை மீட்டுத்தர வலியுறுத்தி தமிழக மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்திவரும் நிலையில் இந்திய கப்பல் படை போர்க்கப்பலை இலங்கைக்கு இந்தியா அன்பளிப்பாக அளித்துள்ளது தமிழக மீனவர்களிடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
Thanks:thenaali.com

Tuesday, August 25, 2009

முகாமிலிருந்து குண்டுக்காயத்துடன் தமிழகம் வந்த அகதி!

இராமேஸ்வரம்:

இறுதிக்கட்ட போரில் குண்டடி பட்ட இளைஞர் ஒருவர் தனது குடும்பதினரையும் கூட்டிக்கொண்டு தமிழகம் தப்பி வந்துள்ளார். இலங்கையில் இடம் பெயர்ந்த மக்கள் 3 லட்சம் பேர் இராணுவ முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் இறுதிக்கட்டபோரில் காயமடைந்த பலர் வவுனியா முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரான ரஞ்சித் ஜெயக்குமார் தனது குடும்பத்துடன் இராமேஸ்வரத்துக்கு தப்பி வந்துள்ளார். இராமேஸ்வரம் வந்தவர் தனுஷ்கோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைத்துள்ளார்;. தான் குடும்பத்துடன் தப்பி வந்தது குறித்து ரஞ்சித் கூறியது..' சமீபத்தில் நடந்த போரில் உயிருக்கு பயந்து, வீடு மற்றும் உடைமைகளை இழந்து முள்ளிவாய்க்காலில் இருந்தோம்.

அப்போது, 12-05-09 ல் இராணுவம் நடத்தி துப்பாக்கிச்சூட்டில் குண்டின் துகள் எனது மார்பில் பாய்ந்தது. வன்னி சுதந்திரபுரத்தில் வசித்து வந்த நாங்கள் வவுனியா முகாமில் அடைத்துவைக்கப்பட்டோம். அங்கு என்மீது பாய்ந்த குண்டு துகள்களை அகற்றாமலே சிகிச்சை கொடுத்தனர்.

இதனால் தாங்க முடியாது வலி ஏற்படுகிறது. வேறு வழியில்லாமல் எனது மனைவி சுகந்தினி, மகன்கள் மதி இன்பம், கனி இன்பன், ஆகியோருடன் தப்பிவந்துவிட்டோம்." என்றார். இவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது இலங்கை: இந்தியாவிற்கு புதிய சிக்கல்!

பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது இலங்கை: இந்தியாவிற்கு புதிய சிக்கல்!

கொழும்பு:

தீவிரவாதிகளை எதிர்கொள்ள பாகிஸ்தான் இராணுவத்துக்கு இலங்கை இராணுவம் பயிற்சி அளிக்கவுள்ளது. இதனை இலங்கைக்கான புதிய இராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா தெரிவித்தார். இலங்கையில் புதிய இராணுவ தளபதியின் இந்த அறிவிப்பு இந்தியாவிற்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கான புதிய இராணுவத்தளபதியாக பொன்சேகாவிற்கு பதில் ஜெகத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்ள்ளார்.

பதவி ஏற்றுள்ள அவர் செய்தியாளர்களிடம் கூறியது.. ''தீவிவாதிகளை எதிர்த்து போரிட பாகிஸ்தான் இராணுவத்துக்கு பயிற்சி அளிக்க பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டதால் ஒப்புக்கொண்டுள்ளோம். இதே போன்ற பயிற்சியை இந்தயா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் அளிக்க தயாராக உள்ளோம்.” என்றார். இந்தியாவிடம் ஆயுதம், பயிற்சி ஆகிவற்றை பெற்று விடுதலைப்புலிகளை ஒடுக்கியுள்ளது இலங்கை இராணுவம் என்று செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், புதிய இராணுவ தளபதியின் இந்த அறிவிப்பு இந்தியாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இலங்கையிடம் விளக்கம் கே எனறுட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் இராணுவத்துக்கு இலங்கை பயிற்சி அளித்தால் அது இந்திய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று இந்திய பாதுகாப்புத் துறையிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புலிகளுக்கு எதிரான போருக்கு இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி : புதிய தகவல்

புலிகளுக்கு எதிரான போருக்கு இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி : புதிய தகவல்

விடுதலைப்புலிகளுடன் போரிட இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதம் கொடுத்தது என்று புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
ஆங்கில செய்தி சானல் ராணுவ நிருபரும், பிரபல கட்டுரையாளருமான நிதின் கோகலே இலங்கையில் இறுதி கட்ட போர் தொடர்பாக ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.
“ஃபிரம் வார் டூ பீஸ்” என்ற புத்தகத்தில் அவர் எழுதி இருப்பதாவது:-
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்காக இலங்கைக்கு ஆயுத உதவி எதுவும் செய்யவில்லை என்று இந்தியா கூறி வந்தது. ஆனால் அது சரியான தகவல் அல்ல. இந்தியா ஏராளமான உதவிகளை இலங்கைக்கு செய்தது.
இந்திய கடற்படை ஏராளமான தகவல்களை இலங்கை ராணுவத்துக்கு கொடுத்து வந்தது. இதனால் விடுதலைப்புலிகளின் 12-க்கும் மேற்பட்ட ஆயுதகப்பல்களை இலங்கை கடற்படை தகர்த்தது. இதனால் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் வருவது தடைபட்டது.
2006-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியா 5மி-17 ஹெலி காப்டர்களை இலங்கைக்கு கொடுத்தது. அவை இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் போல வர்ணம் தீட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டன.
இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் ஒன்றை இலங்கைக்கு வழங்கியது. விடுதலைப்புலிகள் கடலிலேயே மிதக்கும் ஆயுத குடோன்களை அமைத்து இருந்தனர். அதை இந்தியா அடையாளம் கண்டு இலங்கையிடம் கூறியது. இதன் மூலம் 10-க்கும் மேற்பட்ட குடோன்களை இலங்கை ராணுவம் தகர்த்தது. விடுதலைப்புலிகள் கப்பல்கள், படகுகளை தகர்க்க இந்திய கடற்படை முழு உதவி செய்தது.
ராமநாதபுரத்தில் இந்திய கடற்படை சக்தி வாய்ந்த ரேடாரை பொருத்தி இருந்தது. இதன் மூலம் விடுதலைப்புலிகளின் படகு, கப்பல் நடமாட்டத்தை கண்டு பிடித்து இலங்கையிடம் கூறியது.
இவ்வாறு அந்த புத்தகத்தில் எழுதப்பட்டு உள்ளது.
நன்றி:தெனாலி.காம்