பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது இலங்கை: இந்தியாவிற்கு புதிய சிக்கல்!
கொழும்பு:
தீவிரவாதிகளை எதிர்கொள்ள பாகிஸ்தான் இராணுவத்துக்கு இலங்கை இராணுவம் பயிற்சி அளிக்கவுள்ளது. இதனை இலங்கைக்கான புதிய இராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா தெரிவித்தார். இலங்கையில் புதிய இராணுவ தளபதியின் இந்த அறிவிப்பு இந்தியாவிற்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கான புதிய இராணுவத்தளபதியாக பொன்சேகாவிற்கு பதில் ஜெகத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்ள்ளார்.
பதவி ஏற்றுள்ள அவர் செய்தியாளர்களிடம் கூறியது.. ''தீவிவாதிகளை எதிர்த்து போரிட பாகிஸ்தான் இராணுவத்துக்கு பயிற்சி அளிக்க பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டதால் ஒப்புக்கொண்டுள்ளோம். இதே போன்ற பயிற்சியை இந்தயா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் அளிக்க தயாராக உள்ளோம்.” என்றார். இந்தியாவிடம் ஆயுதம், பயிற்சி ஆகிவற்றை பெற்று விடுதலைப்புலிகளை ஒடுக்கியுள்ளது இலங்கை இராணுவம் என்று செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், புதிய இராணுவ தளபதியின் இந்த அறிவிப்பு இந்தியாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இலங்கையிடம் விளக்கம் கே எனறுட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் இராணுவத்துக்கு இலங்கை பயிற்சி அளித்தால் அது இந்திய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று இந்திய பாதுகாப்புத் துறையிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment