தே.மு.தி.க. மாவட்ட தலைவருக்கு தர்ம அடி -3 கார்கள் சேதம் காரை ரிவர்ஸ் எடுத்து தப்பினார் விஜயகாந்த்
ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் தேசிய முற்போக்கு திராவிட கழக விருதுநகர் மாவட்ட தலைவர் தாமோதர கண்ணனை அடித்து உதைத்தனர். இக்கட்சியை சேர்ந்த கிராம தொண்டர்கள் கல்வீசி தாக்கியதில் 3 கார்கள் சேதம் அடைந்தன. இதைப் பார்த்த விஜயகாந்த் சினிமா காட்சி போல் காரை வேகமாக பின் னோக்கி ஒட்டிச் சென்று தப்பினார்.
திருவில்லிபுத்தூரில் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் பல இடங்களில் பேசினார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு விஜயகாந்த் மேல தொட்டிய பட்டி கிராமம் வழியாக பல கிராமங்களுக்கு செல்ல வந்தார். மேல தொட்டிய பட்டி ஊருக்குள் வராமல் மெயின் ரோடு வழியாக் செல்ல முயன்ற விஜயகாந்த் வாகனத்தை அவரது கட்சியினர் டிராக்டரை வைத்து மறித்தனர். ஊருக்குள் வருமாறு விஜயகாந்தை அழைத் தனர். அவர் ஏற்கனவே மூடு அவுட்டாகி இருந்ததால் வர முடியாது என்று கூறிவிட்டார்.
நிர்வாகிகள் கிராம மக்களை கடுமையான வார்த் தைகளால் திட்டினர். ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் மாவட்ட தலைவர் தாமோதர கண்ணனை சரமாரியாக கம்பால் அடித்தனர். விஜயகாந்த் சினிமா போல் தனது காரை பின்னோக்கி மிக வேகமாக ஓட்டிச் சென்று தப்பி ஓடினார்.
கிராமத்து கட்சியினர் சரமாரியாக கற்கள் கம்பு கட்டைகளை வீசி அடித்தனர். இதில் ஒன்றிய செயலாளர் ராஜா கார் உள்பட விஜய காந்துடன் வந்த 3 கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கட்சி கொடி பேனர் டிஜிட்டல் கட் அவுட்-களை உடைத்து கிழித்து தீ வைத்தனர். என்ன நடந்தது என்றுகூட தெரியாமல் விஜயகாந்த் கார் மின்னல் வேகத்தில் பறந்தது. இது அவரது கட்சியினரை மிகவும் அதிர்ச்சி அடைய செய்தது.
நன்றி;தின தந்தி.
Friday, August 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment