Friday, August 14, 2009

அத்துமீறிச் செல்லும் சிங்களக் காவல்துறையினரின் அடாவடித்தனங்கள்: சிங்கள மக்கள் மத்தியில் உருவாகும் எதிர்ப்பு

அத்துமீறிச் செல்லும் சிங்களக் காவல்துறையினரின் அடாவடித்தனங்கள்: சிங்கள மக்கள் மத்தியில் உருவாகும் எதிர்ப்பு

[வெள்ளிக்கிழமை, 14 ஓகஸ்ட் 2009, 08:27 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

இதுவரை காலமும் பெருமளவுக்கு தமிழர்களையே இலக்கு வைத்திருந்த சிறிலங்கா காவல்துறையினரின் அத்துமீறல்களும், சட்டவிரோதச் செயற்பாடுகளும் தற்போது கொழும்பில் உள்ள சிங்கள் மக்கள் மீதும் பாயத் தொடங்கியுள்ளமை சிங்களவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னர் தமிழ் மக்களை கடத்தல்கள், கொலைகள், கப்பம் மற்றும் ஏனைய பல துன்புறுத்ததல்களில் சிறிலங்கா காவல்துறை ஈடுபட்டு வந்திருந்தது.
ஆனால், அவற்றை சிங்கள மக்கள் கண்டுகொள்ளவில்லை பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்றும் காரணத்தினால் தமக்கு என்ன என இருந்து விட்டார்கள். அத்துடன், இவ்வாறு கடத்தப்படுபவர்கள், அல்லது காணாமல் போனவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் குறிப்பிட்டு பிரச்சினைகளை காவல்துறையினர் தவிர்த்துக்கொண்டனர்.
தற்போது மிக வெளிப்படையாக சிங்களவர்கள் மீதே சிங்கள காவல்துறை தனது அடாவடிகளை காட்டத் தொடங்கியுள்ளமை நிரூபணமாகியுள்ள நிலையில் தமிழ் மக்களின் நிலை என்ன என்பதை சிந்தித்து பார்க்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கொழும்பில் நடந்த மாணவர் ஒருவரின் கடத்தல் மற்றும் அவர் மீதான கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து சிங்கள காவல்துறையின் நடவடிக்கைகள் எந்த அளவில் தான்தோன்றித்தனமாக உள்ளன என்பது புலப்பட்டுள்ளது. கொழும்பு குற்றப் புலனாய்வுத்துறையின் பொறுப்பு அதிகாரி வாஸ் குணவர்த்தனவின் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் அவரது மகன் இணைந்து மாணவன் ஒருவனை கடத்தி
அவர்கள் வீட்டில் வைத்து தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வாஸ் குணவர்த்தனவின் மகன் ரவிண்டு சிறிலங்காவின் பிரபல கணிணிக் கல்லூரி ஒன்றில் கல்வி கற்று வருகின்றார். அவருடன் இணைந்து கல்வி கற்கும் சக மாணவர்களில் ஒருவரான நிபுண றாமனாயக்க என்றும் சிங்கள மாணவனுக்கும் இடையில் நீணடகாலமாக நிலவிவந்த முறுகல் நிலைக்கு பழிவாங்கவே வாஸ் குணவர்த்தனவின் தனிப்பட்ட பாதுகாப்பு அலுவலர்களை பயன்படுத்தி இந்தக் கடத்தலை செய்துள்ள
வாஸ் குணவர்த்தனவின் மகன், கடத்திய மாணவனை அவர்கள் வீட்டுக்கு கொண்டுசென்று கடுமையாக தாக்கியுள்ளார்.
வாஸ் குணவர்த்தனவின் மனைவியும் கடத்தப்பட்ட தன்னை கடுமையாகத் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார். இவ்வாறு கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் அந்த மாணவன் தெமட்டகொட காவல் நிலையத்தில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது பற்றி வாஸ் குணவர்த்தனவிடம் வினாவியபோது, குறிப்பிட்ட மாணவன் தவறாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் அவருக்கும் தாம் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள விடயத்துக்கும் தொடர்பு இல்லை என்பதால் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் தாம் வேண்டும் என்றே கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகவும் தனிப்பட்ட பகைமையை வைத்துக்கொண்டு அதிகாரத்தை முறைகேடு செய்து தனக்கு துன்புறுத்தல் செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேற்படி சம்பவத்தின் முலம் சிறிலங்காவில் தமிழ் இளைஞர்கள் எத்தனை ஆயிரம் பேர் இவ்வாறு தனிப்பட்ட பகைமை பணப்பறிப்பு கப்பம் மற்றும் தமிழர் என்றும் காரணங்களுக்காகக் கடத்தப்பட்டு (கைது செய்யப்பட்டு?) தாக்கப்பட்டுள்ளனர், இன்றும் சிறையில் வாடுகின்றனர் என்பது சிந்தித்து பார்க்கவேண்டிய விடயமாகி உள்ளது.
இதேபோன்றுதான் தனிப்பட்ட பகைமையின் காரணமாக கைது செய்யப்பட்ட இரண்டு சிங்கள இளைஞர்கள் நேற்று அதிகாலை மொறட்டுவ, அங்குலானை பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர்களின் உடலங்களை கடற்கரையோரமாகப் போட்டுவிட்டு பிரச்சினையில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கு காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சி ஆத்திரமடைந்த மக்கள் கூட்டத்தின் முன்பாகப் பலிக்கவில்லை.
கொல்லப்பட்டவர்கள் தமிழ் இளைஞர்களாக இருந்திருந்தால், இருவரும் புலிகள் என இலகுவாகக் கூறி காவல்துறையினரால் கதையை முடித்திருக்க முடியும். அவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றும் உள்ளன. தமது சொந்தப் பிரச்சினைகளுக்காக அதிகாரத்தை கைகளில் எடுத்துக்கொள்ளும் காவல்துறையினரின் உண்மை முகம் சிங்கள மக்களுக்கு இப்போதுதான் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றது.
-- நேச நிஜங்களுடன் உங்கள் முகமூடி http://wintamizh.blogspot.com/ ------------------------------
----------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு மாதுக்கேன் மங்கள நாள் சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...
நன்றி;கீற்று.

No comments:

Post a Comment