செல்வராசா பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்படவில்லை : தாய்லாந்து பிரதமர் உறுதிபடுத்துகிறார்
[ வெள்ளிக்கிழமை, 07 ஓகஸ்ட் 2009, 07:28.04 AM GMT +05:30 ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவு பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்படவில்லை என தாய்லாந்தின் பிரதமர் அப்சிட் வெஜ்யஜிவா உறுதிப்படுத்தியுள்ளார்.
ரொய்டர்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி, செல்வராசா பத்மநாதன், தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வேறொரு நாட்டில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளமையை தம்மால் உறுதி படுத்த முடியும் என தாய்லாந்தின் பிரமர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் எந்த நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அவர் மலேசியாவில் வைத்து கைதானதாக வெளியான தகவல்களை இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது.
இதற்கிடையில் சர்வதேச காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவு பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் வைத்து நேற்று சர்வதேச காவற்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்காக கொழும்பு அழைத்துவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி;தமிழ் வின்
Friday, August 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment