Saturday, August 29, 2009
கரூரில் இலங்கை தேசியக்கொடி எரிப்பு
கரூர்:
இலங்கை தேசியக்கொடியை எரித்து கரூர் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்தினர். இலங்கையில் தமிழ் இளைஞர்கள் 9 பேர் சித்திரவதை செய்து, நிர்வாணப்படுத்தி இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதின் எதிரொலியாக தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கத்தொடங்கியுள்ளது.
சிங்கள இராணுவத்தையும, இலங்கை அரசையும் கண்டிக்கும் வகையில் கரூர் நீதிமன்றம் முன்பு கூடிய வழக்குரைஞர்கள் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில இலங்கையின் தேசியக்கொடி தீயிட்டு எரிக்கப்பட்டது.
இனவெறி பிடித்து தமிழினத்தை அழித்துவரும் சிங்கள அரசு ஒழிக!, ஐ.நா.சபையே இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்து என்று வலியுறுத்தி நூற்றுக்கும் அதிகமான வழக்குரைஞாகள் ஆவேசமாக முழக்கமிட்டனர். இந்த போராட்டத்துக்கு கரூர் வழக்குரைஞர்கள் சங்கத்தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார்.
வழக்குரைஞர்கள் நடேசன், கரூர் இராம.இராசேந்திரன், நன்மாறன், ஏராளமான பெண் வழக்குரைஞர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான வழக்குரைஞர்கள் இதில் கலந்துகொண்டனர். இதனால் கரூரில் தீடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Thanks:thenaali.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment