இந்தியாவில் 80 லட்சம் பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது என்று அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச நுரையீரல் பாதுகாப்பு அமைப்பு உலகம் முழுவதும் பெண்களுக்கு எற்பட்டுள்ள நுரையிரல் பாதிப்பு மற்றும் அதற்காக காரணங்கள் குறித்து அனைத்து நாடுகளிலும் ஆய்வு மேற்கொண்டது.
இதில் இந்தியாவில் பெண்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதற்கு பெண்கள் புகைப்பிடிப்பதும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
உலகில் அதிக அளவ பெண்கள் புகைப்பிடிக்கும் நாடுகள் வரிசையில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 25 கோடி பெண்கள் புகைப்பிடிக்கம் பழக்கம் உள்ளவர்கள் என்ற திடுக்கிடும் தகவலும் தெரியவந்துள்ளது. புகைபிடிப்பதால் ஏற்படும் கேடுகள் குறித்து உலக நாடுகள் பிரசாரம் செய்யாததே பெண்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரிக்க காரணம் என்று அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
ஆண்டுதோறும் 60 லட்சம் பெண்கள் புகைபிடிப்தினால் ஏற்படும் நுரையீரல் நோய்களின் காரணமாக மரணமடைந்து வருவதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இனிமேலும் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கை ஏடுக்கப்படாமல் போனால் இறப்போர் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் 1 கோடியை தாண்டும் என்றும் எச்சரித்துள்ளது.
ஒழுக்கம், பாரம்பரியம், பண்பாடு என மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியா போன்ற நாட்டிலேயே பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவது சமூக அக்கறையுள்ளவர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Thanks:thenaali.com
No comments:
Post a Comment