Saturday, August 29, 2009

''வடக்கின் வசந்தம்" திட்டதிற்காக இந்திய குழு இலங்கை சென்றது


சென்னை:

இலங்கையில் காடுகளை சீர்திருத்தம் செய்து அங்கு தமிழர்களை குடியமர்த்தும் திட்டமான வடக்கின் வசந்தம் திட்டத்தை நிறைவேற்ற இந்தியக்குழு இலங்கை சென்றுள்ளது. இந்த தகவலை தென் இந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

இந்திய ஆசிய வர்த்தக மற்றும் தொழில்துறையின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறயது..'' இந்தியா-இலங்கை இரு நாடுகளுக்கும் இடையே நல்ல உறவு இருந்து வருகிறது. இலங்கையில கடந்த மே-19ஆம் தேதி முதல் தீவிரவாத பயம் நீங்கியுள்ளது.

இலங்கையின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதிகளில் வேளாண்மை திட்டத்தை செயல்படுத்த வடக்கின் வசந்தம் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக இநதிய நிபுணர்கள் கொண்ட குழு கடந்த 23 ஆம் தேதி இலங்கை சென்றுள்ளது. இலங்கை இப்போது தாராள தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக உள்ளது " என்றார்.

இந்த ''வடக்கின் வசந்தம்" திட்டத்துக்காக தமிழக வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அழைக்கப்பட்டு அவர் இலங்கையின் இன்றைய நிலை வேளாண்மை சீர்திருத்தத்திற்கு உகந்ததாக இல்லை என்று கூறி இலங்கை செல்ல மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks:thenaali.com

No comments:

Post a Comment