புலிகளின் உயிர் மட்டுமல்ல சொத்தும் வேண்டும்: கோத்தபய கேட்கிறார்!
கொழும்பு:''வெளிநாடுகள் விடுதலைப்புலிகள் இயக்த்தினர், விடுதலைப்புலிகள் இயக்க சொத்துக்கள் ஆகியவற்றை இலங்கை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்று இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபச்செ தெரிவித்தார். இதுகுறித்து பி.பி.சி.க்கு அவர் அளித்த பேட்டியில் ..'' செல்வராசா பத்மநாதன் இலங்கை புலனாய்வுத்துறையினால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
அவர் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உண்மைகளை சொல்லிவருகிறார். விடுதலைப்புலிகளுக்கு வெளிநாடுகளில் சொத்துக்கள் உள்ளன. வெளிநாடுகளில் வர்த்தக நிலையங்கள், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விடுதலைப்புலிகள் முதலீடு செய்துள்ளனர்.
பல கோடி சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் விடுதலைப்புலிகளுடையவை என உறுதிப்படுத்தப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட நாடுகள் அந்த சொத்துக்களையும், அதை வைத்துள்ளவர்களையும், விடுதலைப்புலிகள் ஆதரவு சக்திகளையும் இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும்." என்று கோத்தபய ராஜபக்செ தெரிவித்துள்ளார்.
நன்றி:தெனாலி.காம்
No comments:
Post a Comment