Saturday, August 29, 2009
இலங்கைக்கு இந்திய கடற்படை ''போர்க்கப்பல்" அன்பளிப்பு!
கொழும்பு:
இலங்கை கப்பல் படைக்கு இந்திய கப்பல்படை போர்க்கப்பல் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பலை இலங்கை கடலோர ரோந்துக்கு பயன்படுத்த இலங்கை அரசு பெற்றுக்கொண்டுள்ளது.
இந்திய கடற்படை சேவைக்காக தயாரிக்கப்பட்ட ''விக்ரகா 2008" என்ற பெயருடைய இந்த கப்பல் வெள்ளிக்கிழமை இலங்கை கடற்படையின் கடலோர ரோந்துக்காக இந்தியா அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இதற்கு இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்செ இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்தியா வழங்கிய அன்பளிப்பு கப்பலை பெற்று திரிகோணமலை துறைமுகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர்..''இந்திய அரசின் இத்தகைய நல்லெண்ண உதவிகள் இருநாடுகளுக்குமான உறவை மேலும் பலப்படுத்தும்.
இந்தக் கப்பலில் கடல் மற்றும் தரையைக் கண்காணிக்ககூடிய அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் திரிகோணமலை பகுதியை கண்காணிக்கும் பணி எளிதாக இருக்கும்."என்றார்.
இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்தும், கச்சத்தீவை மீட்டுத்தர வலியுறுத்தி தமிழக மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்திவரும் நிலையில் இந்திய கப்பல் படை போர்க்கப்பலை இலங்கைக்கு இந்தியா அன்பளிப்பாக அளித்துள்ளது தமிழக மீனவர்களிடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
Thanks:thenaali.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment